இந்தோனேசிய இந்தியர்கள்
இந்தோனேசிய இந்தியர்கள்(Indian Indonesian) என்பவர்கள் இந்தோனேசியாவில் வாழ்ந்துவந்த ஒரு குழுவினர் மற்றும் அவர்களின் முன்னோர்கள் முதலில் இந்திய துணைக்கண்டத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுமின்றனர். இந்தோனேசிய இந்தியர்கள் மட்டுமல்லாது இந்தோனேசிய பாக்கிஸ்தானியர்களும் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர். ஜனவரி 2012 இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கணக்கின்படி, இந்தியாவில் சுமார் 120,000 வெளிநாட்டு இந்தியர்களில் இந்தோனேசியாவில் வாழ்ந்த 9,000 இந்தியர்கள் உள்ளனர்.[1] அவர்களில் பெரும்பான்மையினர் வடக்கு சுமத்ரா மற்றும் பண்டா ஆஷே, சூராபாயா , மேடான் மற்றும் ஜகார்த்தா போன்ற நகரங்களில் குவிந்திருந்தனர். இருப்பினும், இந்திய இந்தோனேஷிய மக்களின் சரியான புள்ளிவிவரங்களைப் பெறுவதற்கு இயலாது, ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையானோர் உள்ளூர் இந்தோனேஷியர்களிடமிருந்து பிரித்தறிய முடியாதவர்களாக மாறியுள்ளனர்.[2]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
Official: 120,000 (2010) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
அதிக அளவு: வடக்கு சுமத்ரா மற்றும் மேடான் சுராபாயா · பண்டா ஆஷே · ஜகார்த்தா | |
மொழி(கள்) | |
முக்கியம்: இந்தோனேசியன் · தமிழ் சிந்தி · பெங்காலி · பஞ்சாபி · குஜராத்தி | |
சமயங்கள் | |
அதிக அளவு: இந்து சமயம் குறைந்த அளவு: இசுலாம் · சீக்கியம் · பௌத்தம் · சைனம் · கத்தோலிக்க திருச்சபை · சீர்திருத்தத் திருச்சபை | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இந்திய வம்சாவளி மக்கள், மலேசிய இந்தியர் |
இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பல்வேறு மக்கள் வரலாற்று காலத்திற்குப் பின்னர் இந்தோனேசிய தீவுப் பகுதிக்கு அடிக்கடி சென்றனர். உதாரணமாக பாலி நகரில் முதலாம் நூற்றாண்டுகளின் உபயோகப்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையில், இந்தோனேசியா என்ற பெயர் இலத்தீன் சிந்து (இந்தியா) மற்றும் கிரேக்க நெசோஸ் (தீவு) என்பதிலிருந்து வருகிறது, இது இந்திய தீவுப்பகுதி என்று பொருள்படும்.
4 வது மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து, இந்திய கலாச்சார தாக்கங்கள் இங்கு இன்னும் அதிகமாக காணப்பட்டன. பரம்பரிய தமிழ் மொழி அங்குள்ள கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், இந்திய மொழிகளில், உள்ளூர் மொழிகளே அடிக்கடி பயன்படுத்தப்பட்டது, இது ஏற்கனவே பிரகிருதம் மற்றும் தமிழ் மொழியிலிருந்த பல வார்த்தைகளைக் கொண்டிருந்தது. அதோடு மட்டுமல்லாமல், சுதேச இந்தோனேசியர்கள் இந்து சமயத்தையும் புத்த மதத்தையும் தழுவினர் .
பல இந்திய மக்கள் இந்தோனேசியாவில் குடியேறி உள்ளூர் மக்களுடன் இணைந்து இயங்கினர். 9 ஆம் நூற்றாண்டில் மத்திய ஜாவாவின் கிடைத்த ஒரு ஒரு கல்வெட்டில், பல்வேறு இந்திய மக்களின் (மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்கள்) பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர், இஸ்லாமியம் எழுச்சி கொண்டு, இந்த மதம் 11 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மூலம் இந்தோனேசியாவிற்கு கொண்டுவரப்பட்டது.
மேடான் , வடக்கு சுமத்ரா போன்ற இடங்களில் இன்றும் இந்தியாவில் இருந்து மக்கள் குடியேறுகின்றனர். 75,000 மக்களைக் கொண்ட, ஒரு பெரிய (தமிழ் மக்கள்) சமூகம் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இந்தோனேசியாவில், பல்வேறு வட இந்தியர்கள் காணப்படுகின்றனர். பொதுவாக அவர்களது தொழில்கள் ஜவுளி தொழில்களுடன் இணைந்துள்ளன. சீன இந்தோனேஷியர்களைப் போலவே பலர் கடை உரிமையாளர்களாக உள்ளனர்.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் இல்லாத போதிலும், கிட்டத்தட்ட 25,000 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Sorry for the inconvenience". பார்க்கப்பட்ட நாள் 18 December 2017.
- ↑ Indian Communities in Southeast Asia. பார்க்கப்பட்ட நாள் August 10, 2015.