இந்தோரோனெக்டெசு எவசார்தி

இந்தோரோனெக்டெசு எவசார்தி
குகையில் வாழும் மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரிபார்மிசு
குடும்பம்:
நெமாசெலிடே
பேரினம்:
இனம்:
இ. எவசார்தி
இருசொற் பெயரீடு
இந்தோரோனெக்டெசு எவசார்தி
டே, 1872
வேறு பெயர்கள்
  • நெமசெய்லசு எவசார்டி டே, 1872
  • நோமாசீலசு எவசார்டி (டே, 1872)
  • ஓரியோனெக்டெசு எவசார்டி (டே, 1872)

இந்தோரோனெக்டெசு எவசார்தி (Indoreonectes evezardi) என்பது நெமசெய்லிடே குடும்பத்தில் உள்ள கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும். முன்னதாக இது புனே அருகே ஒரு நதி ஓடையிலிருந்து கைப்பற்றப்பட்ட டே (1878) விவரித்த நெமசெய்லசு எவசார்தி என அறியப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் சாத்பூரா மலைத்தொடர்களிலும் காணப்படும் இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. பெரும்பாலான மீன்கள் சாதாரண நீரோடைகளில் காணப்படுகின்றன. ஆனால் இரண்டு தனித்துவமான மீன்கள் கொடும்சார் குகையில் வாழ்கின்றன.

சொற்பிறப்பியல்

தொகு

மும்பையில் பணியாற்றிய ஜோர்ஜ் சி. எவசார்ட் (1826-1901) மாதிரியினைப் பெறுவதில் உதவியதன் நினைவாக இந்த மீனிற்குப் பெயரிடப்பட்டது.[2]

குகை மீன்களின் வேறுபாடு

தொகு

ஒளியின் பற்றாக்குறை மற்றும் குறைந்த ஆற்றல் உள்ளீடு (உணவு) காரணமாகக் குகையில் வாழும் இந்தோரோனெக்டெசு எவசார்டி மீன்கள் நிறமற்று முதிர்ச்சியடையாத கண்களுடன் அல்லது மிகக் குறைந்த நிறமி மற்றும் சிறிய கண்களுடன் அதன் பிற சகாக்களுடன் ஒப்பிடும்போது காணப்படுகின்றன. இதனுடைய முழுமையான உடலியல் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும்/அல்லது மாற்றப்பட்டுக் காணப்படுகின்றன.[1][2] .

பாதுகாப்பு நிலை

தொகு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியலில், இந்த குறிப்பிட்ட சிற்றினம் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குகைகளில் வாழும் இந்தோரோனெக்டெசு எவசார்டி குழுக்களைப் பாதுகாக்கச் சிறப்புக் கவனம் தேவை என்பதை நிராகரிக்க முடியாது. .

மேற்கோள்கள்

தொகு
  • பிஸ்வாஸ் ஜே. 1991 வளர்சிதை மாற்ற திறன் மற்றும் உடல் எடையை ஒழுங்குபடுத்துதல்: ஹைபோஜியன் மற்றும் எபிஜியன் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வாழ்க்கைக்கு இடையிலான ஒப்பீடு
  • பிஸ்வாஸ் ஜே. 1993 ஆக்கபூர்வமான பரிணாமம்: கொடும்சார் குகையில் உள்ள ஹைபோஜியன் மீன்களில் பைலோஜெனடிக் வயது தொடர்பான காட்சி உணர்திறன்
  • Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Indoreonectes evezardi" in FishBase. June 2011 version.
  • பிஸ்வாஸ் ஜே. 2010 கொடும்சார் குகை பல்லுயிர்: கேவர்னிகோல்ஸ் மற்றும் அவற்றின் ட்ரோகுளோபயாடிக் பண்புகள் பற்றிய ஆய்வு