இயன் பெல்

இயன் ரொனால்ட் பெல்: (Ian Ronald Bell MBE, பிறப்பு: ஏப்ரல் 11, 1982), இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.

இயன் பெல்
Ian Bell Trent Bridge 2004.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இயன் ரொனால்ட் பெல் MBE
பட்டப்பெயர்பெலி
உயரம்5 ft 10 in (1.78 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 626)ஆகத்து 19 2004 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசூன் 4 2010 எ வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 184)நவம்பர் 28 2004 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபசனவரி 23 2011 எ ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்7
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 62 90 180 212
ஓட்டங்கள் 4,192 2,776 12,277 6,965
மட்டையாட்ட சராசரி 44.12 35.13 45.13 38.26
100கள்/50கள் 12/26 1/16 33/65 7/49
அதியுயர் ஓட்டம் 199 126* 262* 158
வீசிய பந்துகள் 108 88 2,809 1,290
வீழ்த்தல்கள் 1 6 47 33
பந்துவீச்சு சராசரி 76.00 14.66 33.27 34.48
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/33 3/9 4/4 5/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
50/– 28/– 126/– 74/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2011

2006 ஆம் இங்கிலாந்து துடுப்பாட்ட வாரியம் வெளியிட்ட புத்தாண்டு மரியாதை பட்டியலில், 2005 ஆம் ஆண்டின் ஆஷஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணியில் இவரின் பங்கினைப் பாராட்டும் விதமாக பெல் பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 2006 இல், பன்னாட்டுத் துடுப்பாட்ட இவை இவருக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கியது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், இவர் இங்கிலாந்து சார்பாக சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.பின்னர் இவர் 2009 ஆஷஸ் தொடருக்காக மீண்டும் தேர்வானார்.இந்தத் தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியினை வீழ்த்தி இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி கோப்பையினைக் கைப்பற்றியது.பின்னர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தனக்கான இடத்தினைத் தக்க வைத்துக் கொண்டார்.2010-ம் ஆண்டில் இவர் வெற்றி வார்விஷைர் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் இருந்தார்.

ஜூலை 2012 இல், பெல் வார்விகக்சயர் துடுப்பாட்ட அணியுடன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், குறைந்தபட்சம் 2015 வரை அந்த சங்கத்திற்காக இவர் விளையாடினார். [1] நவம்பர் 2015 இல், இங்கிலாந்து தேர்வாளர்கள் தென்னாப்பிரிக்காவுடனான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கான இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியில் இருந்து விலக்கப்படுவதாக அறிவித்தனர். [2] ஆகஸ்ட் 2016 இல், பெல் 2016–17 பிக் பாஷ் லீக் சீசனில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2018 இல், பெல் முதல் தரத் துடுப்பாட்டத்தில் தனது 20,000 ரன்களை அடித்தார். [3]

ஆரம்பகால வாழ்க்கைதொகு

பெல்லின் குடும்பம் ரக்பி நகரத்திற்கு அருகிலுள்ள டன்ச்சர்ச்சில் இருந்து வந்தவர்கள் ஆவர். [4] மேலும் இவர் உள்ளூர் துடுப்பாட்ட சங்கத்தில் இளைய அணியில் விளையாடினார். [5] பெல் அருகிலுள்ள பிரின்செதோர்ப் கிராமத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க சுயாதீன பள்ளியான பிரின்செதோர்ப் கல்லூரியில் கல்வி பயின்றார் மற்றும் 7 ஆம் ஆண்டில் 1 வது லெவன் அனி சார்பாக விளையாடினார். ஆஸ்டன் வில்லாவின் ஆதரவாளராக இருந்தபோதிலும், கோவென்ட்ரி சிட்டியின் கால்பந்து பள்ளியிலும் இவர் பயின்றார் (அந்த இரண்டு கால்பந்து சங்கங்களும் பாரம்பரிய போட்டியாளர்கள் ஆவர். [6]), மேலும் கோவென்ட்ரி மற்றும் நார்த் வார்விக்ஷயர் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது உடன்பிறந்த சகோதரர் கீத், ஸ்டாஃபோர்ட்ஷையருக்காக தொழில் முறைசாரா துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார், மேலும் வார்விக்ஷயர் இரண்டாம் லெவன் அணிக்காக ஏழு ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். [7]

துடுப்பாட்ட வாழ்க்கைதொகு

ஆரம்பகால ஆண்டுகள்தொகு

1998 ஆம் ஆண்டில் வார்விக்ஷயரின் இரண்டாவது அணிக்காக பெல் மூன்று போட்டிகளில் விளையாடினார். பின்னர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியில் இவர் இடம் பெற்றார்.இந்தத் தொடரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 91 ஓட்டங்களையும் மூன்றாவது போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதில் 103 ஓட்டங்களை எடுத்தார்.

சான்றுகள்தொகு

  1. "England batsman Ian Bell extends Warwickshire stay". BBC Sport. 3 July 2012. https://www.bbc.co.uk/sport/0/cricket/18696990. 
  2. Andrew McGlashan (19 November 2015). "Bell dropped; Compton, Ballance, Footitt called up". Cricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/south-africa-v-england-2015-16/content/story/942217.html. 
  3. "Former England ace Ian Bell notches 20,000 first-class runs". International Cricket Council (30 August 2018).
  4. "Warwickshire cricket star Ian Bell becomes Acorns Hospice patron". Ian Bell Cricket (6 January 2012). மூல முகவரியிலிருந்து 19 August 2014 அன்று பரணிடப்பட்டது.
  5. "Ask Belly - Fans Q&A". Warwickshire County Cricket Club. மூல முகவரியிலிருந்து 19 August 2014 அன்று பரணிடப்பட்டது.
  6. "Who are Coventy's sporting rivals?". BBC Coventry & Warwickshire. 16 August 2010. http://news.bbc.co.uk/local/coventry/hi/people_and_places/newsid_8917000/8917750.stm. பார்த்த நாள்: 18 December 2014. 
  7. "The Home of CricketArchive". Cricket Archive.(subscription required)


"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_பெல்&oldid=3006946" இருந்து மீள்விக்கப்பட்டது