இயற்கை வேளாண்மை

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத உணவு விளைவிக்கும் முறை.
(இயற்கை விவசாயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உயிர்ம வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.[1] இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.

== வரலாறு == கரிம விவசாய இயக்கம் 1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஓர் எதிர்ப் போக்காக இது காணப்பட்டது. 18-வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள்.

சர் ஆல்பர்ட் ஹோவர்ட என்பவர்தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜே.ஐ.ரொடேல், மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் லேடி ஈவ் பல்ஃபோர்ட் ஆகியோரும் மற்றும் உலகெங்கும் மேலும் பலரும் இதற்காக மேற்கொண்டு பணிகளைச் செய்தனர்.

பொது மக்களிடையே சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர். சில சமயங்களில் அரசாங்கம் இதற்காக அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இந்த முறைமைக்கு மாறினர். வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் தரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர். வளரும் நாடுகளில் சில விவசாயிகள் பொருளாதாரக் காரணங்களுக்காக இதற்கு மாறியுள்ளனர்.[2] ஐரோப்பா போன்ற நாடுகளில் இது மிகவும் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்த்கதாகும்.

இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்

தொகு

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. (கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும்).

  • நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)
  • உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)
  • வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்பட வேண்டும் (நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு).
  • நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் (பராமரிப்பு பற்றிய கோட்பாடு).

முறைமைகள்

தொகு
 
கலிஃபோர்னியா கபாயில் கூட்டு காய்கறிகளின் கரிம வேளாண்மை பின்புலத்தில் உள்ள புதர்வரிசையைக் கவனிக்கவும்.

நில மேலாண்மை

தொகு

சத்துகளில் பயிர் வளர்ச்சியில் முதன்மையான தழைச்சத்தை சரியான அளவு சரியான நேரத்தில் கிடைக்க்வேண்டும்.[3] பயறு வகை பயிர் சுழற்சி, பசுந்தாள் எரு, மூடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பேபேசியே குடும்பத்தாவரங்களைப் பயிரிடும்போது ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சததை வேர் முடிச்சிகளில் வளி மண்டலத்திலிருந்து பொருத்துகிற்து. பூச்சிகள் மற்றும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் ஊடு பயிரும் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ள் தழைசத்தை மண்ணில் அதிகரிக்கும். பயிர் எச்சங்கள் மீண்டும் மண்ணுக்குள் உழப்படுவதின் மூலமும் தழைச்பயிருக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யாலாம்[3] கரிம விவசாயிகள் மக்கிய கால்நடை எருக்களையும், பலவகைப்பட்ட புண்ணாக்கு,பதனப்படுத்தப்பட்ட சில விதைகளின் தூள் போன்றவற்றை பயன்படுத்தலாம்

மணிச்சத்திற்காக ராக் ஃபாஸ்ஃபேட், க்ரீன்சேண்ட் போன்ற கனிமப் பொடிகள், பொட்டாஷியம் அளிக்கும் இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் பொடாஷ் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் மண்ணின் கார அமில நிலை திருத்தப்பட வேண்டியிருக்கும். இயற்கையான கார அமில் நில் திருத்தங்களில், சுண்ணாம்பு மற்றும் கந்தகம் ஆகியவை அடங்கும். ஆனால், இரும்பு சல்ஃபேட்அலுமினியம் சல்ஃபேட், மாக்னிஷியம் சல்ஃபேட் மற்றும் கரையக் கூடிய போரோன் பொருட்கள் போன்ற செயற்கைக் கூட்டுப் பொருட்கள் கரிம வேளாண்மையில் அனுமதிக்கப்படுவதில்லை.[4]:43

விவசாயம் சார்ந்த கால்நடை வளர்க்கும் பண்ணைகள் முயல் மசால், வேலிமசால் போன்ற தழச்சத்தை வெளியிடும் கால்நடைத் தீவனப் பயிர்களைப் பயிரிடப்படுவதாலும் மண்ணின் வளம் அதிகரிக்க உதவுகின்றன.[3]

களைகளைக் கட்டுப்படுத்துதல்

தொகு
  • கையால் களையெடுப்பது
  • பூண்டு, லவங்க எண்ணெய், வெண்காரம்
  • சாப்பட்டு உப்பை தெளித்தல்
  • சூரிய ஒளிப்படுத்துதல் (இது தெளிவான பிளாஸ்டிக்கை நிலத்தின் மேற்புறமாக வெயில் காலத்தில் 4-6 வாரங்களுக்கு வைப்பதை ஈடுபடுத்துகிறது),
  • வினிகர் ஆகியவை அடங்கும்.[4]:45-65
  • நெல் விவசாயத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட ஒன்று, ஈரமான நெல் வயல்களில் வாத்து மற்றும் மீன்களை இடுவதாகும். இவை, களை மற்றும் பூச்சிகள் ஆகிய இரண்டையுமே தின்று விடுகின்றன.[5]

நோய்களைக் கட்டுப்படுத்துதல்

தொகு

களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.

தீமைபயக்கும் பூச்சிகள் பொதுவான ஒரு பிரச்சினையாகும். கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன. இவற்றை சமாளிக்க ஒரு வழி, இந்தப் பூச்சிகளை அடியோடு புறக்கணித்து விட்டு தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், தாவரங்கள் தமது வளர்ச்சி மிகுந்த அளவில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.[4]:67

பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றைச் சுற்றிலும் பைகளை வைத்து, இலை, பழம் போன்ற மக்கிப் போகக் கூடிய பொருட்களையும், நோய்வாய்ப்பட்ட தாவரங்களையும் அகற்றி விட்டு மற்றும் தாவரங்களை ஒரு திடத் தடுப்பான் கொண்டு மூட வேண்டும். மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, தாவரத்திற்கு துணைத் தாவர ங்களையும் நடலாம். மேலும், பலவிதமான பொறிகள், ஒட்டு அட்டைகள் (பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டு கொள்ளவும் இவற்றைப் பயன்படுத்தலாம்), மற்றும் பருவ நீட்டிப்பு ஆகியவை பயன்படும். உயிரியனம் சார்ந்த பூச்சிக் கொல்லி, இயற்கையான பூச்சி எதிரிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள பூச்சிகளில், மைன்யூட் பைரேட் பக்ஸ் பிக் ஐட் பக்ஸ் மற்றும் குறைந்த அளவில் (பறந்து விடக் கூடிய) லேடி பக்ஸ் ஆகியவையாகும். இவை அனைத்துமே பல வகையான பூச்சிகளைத் தின்னக் கூடியவை. வண்ணத்துப் பூச்சிகள் என்பவையும் திறன் வாய்ந்தவைதாம். ஆனால், இவை பறந்து விடக் கூடியவை. தச்சைக் கிளிகள் என்பவை மெள்ள நகர்பவை; மற்றும் குறைவாக உண்பவை. ஒட்டுண்ணிக் குளவி தாம் தேர்ந்தெடுக்கும் இரையைப் பொறுத்தவரை மிகவும் திறனுள்ளதாக இருக்கும். ஆனால், ஏனைய சிறு பூச்சிகளைப் போல, இதுவும் வெளிப்புறங்களில் திறன் குறைந்தே காணப்படும். காரணம் காற்று இதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான். சிறு பூச்சிகளைக் கொன்று தின்னும் பூச்சிகளும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் திறன் உள்ளவைதாம்.[4]:66-90

வேம்பு போன்ற கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பலவகை பூச்சிக் கொல்லிகளும், பச்சைப் பூச்சிக்கொல்லி என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக கரிம பூச்சிக் கொல்லிகள், செயற்கைப் பூச்சிக் கொல்லிகளை விட பாதுகாப்பானவை, மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஆதரவானவை; ஆனால், கண்டிப்பாக இவை அனைத்துமே அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை.[4]:92 . பிரதானமாக பயன்படுத்தப்படும் மூன்று கரிம பூச்சிக் கொல்லிகள் பிடி (ஒரு நுண்ணுயிர் நச்சு), பைரெத்ரம் மற்றும் ரொடெனோன் ஆகியவை.

கருத்தாய்வுகளின்படி, 10% கரிம விவசாயிகள் இவற்றை முறையாக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்; ஒரு கருத்தாய்வின்படி, கலிஃபோர்னியாவில் 5.3% காய்கறி விவசாயிகளே ரோடெனோன் பயன்படுத்துகிறார்கள்; 1.7% விவசாயிகள் பைரெத்ரம் பயன்படுத்துகிறார்கள்.(லோட்டர் 2003:26) 2005ஆம் வருடத்தின்போது, மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அதிக அளவில் நச்சுப் பொருள் உடைய ரோடெனோன் யூ.எஸ். கரிம விவசாயிகளுக்காக கருத்தளவில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், பொருட்கள் ஏதும் கரிமப் பொருட்கள் மறு ஆய்வு நிறுவனத்தால் மறு ஆய்வு செய்யப்படவில்லை.[6] நிகோடின் சல்ஃபேட்டையும் பயன்படுத்தலாம்;[7] அது விரைவிலேயே உடைந்து விடும் தன்மை கொண்டிருந்தாலும், நச்சுப் பொருளும் அதிக அளவில் கொண்டது, ஏறத்தாழ அல்டிகார்ப் அளவு நச்சு உடையது.[4]:104 குறைந்த அளவு நச்சுப் பொருள் கொண்டிருப்பினும், திறனுள்ள கரிம பூச்சிக் கொல்லிகளில், வேம்பு, ஸ்பினோசாட், சோப்புகள், பூண்டு, நாரத்தை எண்ணெய், காப்சைசின் (விரட்டுப் பொருள்), பேசிலஸ் பொபில்லே , ப்யூவாரியா பாசியனா மற்றும் போரிக் அமிலம் ஆகியவை அடங்கும்.[4]:110 பூச்சி மருந்துக்கான எதிர்ப்பைக் குறைப்பதற்கு, பூச்சிக் கொல்லிகளை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.

நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்.[4]:129 அனைத்து சமயங்களிலும் பஞ்சகவ்யா (compost tea) திறனுள்ளதாகக் கூறப்படுகிறது.[8] ஆனால், இவை திறனற்றவையா, அல்லது ஆபத்து கூட விளைவிக்கக் கூடியவையா என்பது பற்றி கவலை உள்ளது.[9] பாலிகல்சர் செய்வதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு கல்டிவர்களை வாங்கலாம். கரிம பூசணக் கொல்லிகளில் பேக்டீரியா பாசில்லஸ் சப்டிலிஸ், பாசில்லஸ் ப்யூமிலஸ் மற்றும் ட்ரிகோடெர்மா ஹர்ஜியனும் ஆகியவை அடங்கும். இவை வேர்களைத் தாக்கும் நோய்களைப் பொறுத்தவரை திறனுள்ளவை. போர்டெக்ஸ் மிக்ஸ் காப்பரை உள்ளடக்கியது. இதைப் பல விதங்களில் கரிம பூசணக் கொல்லியாகப் பயன்படுத்தலாம் (citation needed).

பூசணம் மற்றும் சில பூச்சிகள் ஆகியவற்றிற்கு எதிரான திறனை கந்தகம் (சல்ஃபர்) கொண்டுள்ளது. சுண்ணாம்பு கலந்த கந்தகமும் (லைம் சல்ஃபர்) கிடைக்கப் பெறுகிறது. ஆனால், இது தாவரங்களை சேதப்படுத்தி விடக் கூடும். பொட்டாஷியம் மற்றும் சோடியம் பைகார்பனேட் ஆகியவையும் பூசண காளான் எதிர்ப்புத் திறன் உடையவை. தாவரங்களின் நோயெதிர்ப்பு திறனை[10] அதிகரிக்கும் சில தாவர செயலூக்கிகள், அவற்றில் பெரும்பான்மையானவை இரசாயணமாக இருப்பினும்,  கரிமமாகக் கருதப்படுகின்றன.[4]:141

தரநிலைகள்

தொகு

தர நிலைகள், கரிம வேளாண்மைக்கான உற்பத்தி முறைமைகளையும், சில நேரங்களில் அவற்றின் விளைச்சலையும் விதிகளுக்குட்படுத்திச் சீரமைக்கின்றன. தர நிலைகள் தன்னார்வமாக கடைப்பிடிக்கப்படலாம், அல்லது சட்டபூர்வமாக செயலாக்கப்படலாம். 1970ஆம் ஆண்டுகள் தொடக்கத்திலிருந்தே கரிம உற்பத்தியாளர்கள் தனியார் சங்கங்களினால் தன்னார்வத்துடன் சான்றளிக்கப்பட்டனர். 1980ஆம் ஆண்டுகளில், அரசாங்கங்கள் கரிம உற்பத்திக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கத் தொடங்கின. 1990ஆம் ஆண்டுகள் தொடங்கி, தர நிலைகளை சட்ட பூர்வமாக்கும் போக்கு துவங்கியது. குறிப்பாக 1991வது வருடம் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்காக ஐரோப்பிய சுற்றுச் சூழல் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு 12 நாடுகளுக்கு தரநிலைகளை அமைத்தது. 1993ஆம் வருடம் யூகே யிலும் இது போன்ற ஒரு நிரல் உருவானது.[11] ஈயூ நிரலை அடுத்து 2001வது வருடம் ஜப்பானில் ஒரு நிரல் உருவானது, மேலும் 2002வது வருடம் அமெரிக்க ஐக்கிய நாட்டில், "தேசிய கரிம நிரல்' (NOP) உருவாக்கப்பட்டது.[12] 2007வது வருடத்தில் 60 நாடுகளுக்கும் மேலாக கரிம வேளாண்மை தொடர்பான விதிமுறைகளைக் கொண்டிருந்தன (ஐஎஃப்ஓஏஎம் 2007:11) 2005வது வருடம் ஐஎஃப்ஓஏஎம் "கரிம விவசாயக் கோட்பாடுகள்" என்னும் சான்றளிக்கப்படத் தேவையான சர்வதேச வழிகாட்டு முறையை உருவாக்கியது.[13] இந்த முகமைகள் தனிப்பட்ட விளைநிலங்களுக்குச் சான்றளிப்பதில்லை, அவற்றின் குழுமங்களுக்கே சான்றளிக்கின்றன.

கரிமப் பொருட்கள் மறுஆய்வு நிறுவனம், கரிம உற்பத்தி மற்றும் உணவு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்களை தன்னியலான முறையில் சோதிக்கிறது.

எரு இடுதல்

தொகு

யூஎஸ்டிஏ கரிம தரநிலைகளின் அடிப்படையில், எருவானது முறையான தெர்மோஃபில்லிக் கம்போஸ்டிங்குக்கு உட்செலுத்தப்பட்டு நோய்க்கிருமிகளற்ற ஒரு வெப்ப நிலைக்கு உயர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். கச்சா விலங்கு எரு பயன்படுத்தப்பட்டால், இறுதி விளைவான பொருள், நிலத்திற்கு நேரடியான தொடர்புக்கு உட்படுமேயானால், 120 நாட்கள் கழிந்த பிறகுதான் பயிரை அறுவடை செய்ய வேண்டும். நிலத்துடன் நேரடித் தொடர்பு பெறாத பொருட்களைப் பொறுத்த வரையில் அறுவடைக்கு முன்னர் 90 நாட்கள் கழிய வேண்டும்.[14]

பொருளாதாரம்

தொகு

கரிம வேளாண்மையின் பொருளாதாரம், விவசாயப் பொருளாதாரம் என்பதன் ஒரு துணைப்பிரிவு. இது கரிம வேளாண்மையின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் சமுதாயம் அதற்குத் தர வேண்டிய விலை, சந்தர்ப்ப விலை, திட்டமிடப்படாத விளைவுகள், தகவல் ஒத்திசையாமை மற்றும் அளவு சார்ந்த பொருளாதாரம் ஆகிய அதன் விளைவுகளையும் உள்ளடக்கியது. பொருளாதாரத்தின் நோக்கெல்லை மிகவும் பரந்து பட்டது என்றாலும், விவசாய பொருளாதாரம் என்பது விளை நிலங்கள் அளவில் அவற்றின் மகசூலையும், திறனையும் அதிகரிப்பது என்பதிலேயே கவனம் குவிக்கிறது. முதன்மையோட்டப் பொருளாதாரம் இயற்கையான உலகின் மதிப்பிற்கு ஒரு மனித இனத் தொன்மை சார்ந்த ஒரு வழிமுறையைக் கடைப்பிடிக்கிறது: உதாரணமாக, பல்லுயிரினம் அவை எதுவரை மக்களால் மதிக்கப்படுகின்றன மற்றும் லாபத்தை அதிகரிக்கின்றன என்பவற்றின் அடிப்படையிலேயே கொள்ளப்படுகின்றன.

யூரோப்பியன் யூனியன் போன்ற சில அரசாங்கங்கள், கரிம வேளாண்மைக்கு பெரும் அளவில் மானியம் வழங்குகின்றன. காரணம், இவற்றில் பல நாடுகள், கரிம வேளாண்மையின் வெளிப்புற நன்மைகள் என்று கொள்ளப்படும், குறைந்த அளவிலான நீரின் உபயோகம், நீர் மாசுபடுதல் குறைதல், சத்துக்கள், மண் அரித்தழிப்பு குறைதல், கரியமில வாயுவின் வெளிப்பாடு குறைதல், பல்லுயிரினங்கள் அதிகரித்தல் மற்றும் வகைப்படுத்தப்பட்ட பலன்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன.

கரிம வேளாண்மைக்கு தொழிலாட்கள் மற்றும் அறிவுத் திறன் ஆகியவை மிக அதிக அளவில் தேவைப்படும். பாரம்பரிய வேளாண்மையிலோ, சக்தி மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உட்செலுத்தும் பொருட்கள் ஆகிய வகைகளில் மூலதனம் மிக அதிக அளவில் தேவைப்படும்.

கலிஃபோர்னியாவின் கரிம விவசாயிகள் தங்களது மிகப் பெரும் தடையாக தமது பொருட்களைச் சந்தைப்படுத்துதலையே குறிப்பிடுகிறார்கள்.[15]

உற்பத்தியாளர்களின் நிலம் சார்ந்த கூறுகள்

தொகு

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தான் இயற்கை வேளண்மை பொருட்களுக்கான சந்தை வலுவாக உள்ளது. இவை 2001வது வருடம் மொத்த சந்தையின் $20 பில்லியன் மதிப்பில், முறையே $6 மற்றும் $8 பில்லியன் அளவிற்கு இருந்ததாகக் கணிக்கப்படுகின்றன 2003:6). இருப்பினும், 2007வது வருடத்தின்படி வரை இயற்கை வேளண்மையில் முறையில் உள்ள விளைநிலங்கள் உலகெங்கும் பரவலாகவே உள்ளன. ஆஸ்திரேலியாவின் மொத்த விளை நிலமான 11.8 மில்லியன் ஹெக்டேர்களில் 39% மொத்த கரிம விளை நிலங்களாகும். ஆனால், இந்த விளை நிலங்களில் 97 சதவிகிதம் ரேஞ்ஜ்லேண்ட் (2007:35)எனப்படும் கால்நடை மேய்ப்புக்குத் தகுதியான இடத்திலேயே பரவியுள்ளது. இதன் விளைவாக இது யூஎஸ்ஸின் மொத்த விற்பனையில் 5 சதவிகிதமாக உள்ளது (2003:7). ஐரோப்பாவில் கரிம விளைநிலங்களின் பங்கு 23 சதவிகிதம் (6.9 மில்லியன் ஹெக்டேர்கள்). இதையடுத்து லத்தீன் அமெரிக்காவில் 19 சதவிகிதமாக (5.8 மில்லியன் ஹெக்டேர்கள்) உள்ளது. ஆசியா 9.5 சதவிகிதமும், வட அமெரிக்கா 7.2 சதவிகிதமும் கொண்டுள்ளன. ஆப்பிரிக்காவில் வெறும் 3 சதவிகிதம்தான். நாடுகள் வரிசையில் கரிம வேளாண்மை என்பதையும் காணவும்.

ஆஸ்திரேலியாவைத் தவிர, அதிக அளவில் கரிம விளைநிலங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் அர்ஜண்டைனா (3.1 மில்லியன் ஹெக்டேர்கள்), சீனா (2.3 மில்லியன் ஹெக்டேர்கள்) மற்றும் அமெரிக்கா (1.6 மில்லியன் ஹெக்டேர்கள்). ஆஸ்திரேலியாவைப் போல, அர்ஜண்டைனாவின் கரிம விளைநிலங்களிலும் பெரும்பகுதி மேய்ச்சல் நிலம்தான் (2007:42). கரிம முறையில் கையாளப்படும் நில அளவின் அடிப்படையில், அமெரிக்காவை அடுத்து இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில், உருகுவே மற்றும் யூகே ஆகிய நாடுகள் வருகின்றன (2007:26).

வளர்ச்சி

தொகு

2001வது வருடம் சான்றளிக்கப்பட்ட கரிமப் பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு $20 பில்லியனாகக் கணக்கிடப்பட்டது. ஆர்கானிக் மானிட்டர் கூற்றுப்படி, 2002 வருடம் இது $23 பில்லியன்களானது, மற்றும் 2007வது வருடம் $46 பில்லியன்களாக உயர்ந்தது (வில்லர்/கில்ச்சர் 2009).

சமீபத்திய வருடங்களில் ஐரோப்பா (2007:7.8 மில்லியன் ஹெக்டேர்கள்/ யூரோப்பியன் யூனியன் 7.2 மில்லியன் ஹெக்டேர்கள்) மற்றும் வட அமெரிக்கா (2007:2.2 மில்லியன் ஹெக்டேர்கள்) ஆகிய இரண்டு நாடுகளும் கரிம வேளாண்மை விளைநிலங்களின் அளவில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளன. இருப்பினும், இந்த வளர்ச்சியானது பல்வேறு சூழ்நிலைகளில் நிகழ்ந்துள்ளது. யூரோப்பியன் யூனியன் சுற்றுச் சூழலில் பெறப்படக் கூடிய பயன்களை அங்கீகரித்து, விவசாய மானியங்களை கரிம விவசாயிகளுக்காக மாற்றியுள்ளது. அமெரிக்க நாடுகளின் திறந்த சந்தை அணுகு முறையைக் கைக்கொண்டுள்ளது.[16] இதன் காரணமாக, 2007வது வருடத்தின்படி, 4 சதவிகித விளைநிலங்கள் கரிம முறையில் கையாளப்படும் யூரோப்பியன் யூனியனுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க விளை நிலங்களில் 0.6 சதவிகிதமே கரிம முறையில் கையாளப்படுகிறது (வில்லர்/கில்ச்செர் 2009).

ஐஎஃப்ஓஏஎம்மின் மிக சமீபத்திய பதிப்பான, "கரிம வேளாண்மை உலகம்: புள்ளி விபரங்களும் உருவாகி வரும் போக்குகளும் 2009 , என்னும் நூல் 2007வது வருடத்தின்படி மிக அதிகமான அளவில் கரிம முறையில் ஹெக்டேர்களை வைத்திருந்த நாடுகளைப் பட்டியலிடுகிறது. 12 மில்லியன் ஹெக்டேருக்கும் மேலாக கரிம விளைநிலங்களைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா முதன்மையானதாக உள்ளது. இதை அடுத்து அர்ஜண்டைனா, பிரேசில், யூஎஸ் ஆகியவை உள்ளன. 2007வது வருடம் மொத்தமாக 32.2 மில்லியன் ஹெக்டேர் விளை நிலங்கள் கரிம மேலாண்மையின் கீழ் இருந்தன. 1999வது வருடம் 11 மில்லியன் ஹெக்டேர்கள் கரிம வேளாண்மை முறைப்படி கையாளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது (வில்லர்/கில்ச்செர் 2009).

சமீபத்திய வருடங்களில் கரிம விவசாயம் மிகப் பெரும் அளவில் வளர்ந்து விட்டது. இதைக் கருத்தில் கொண்டு, பாராம்பரிய விவசாயத்தைப் போலவே மிகப் பெரும் அளவில் ஒரு தொழில் முறையாவதை கரிம வேளாண்மையின் தன்மை உள்ளடக்கியுள்ளது இயற்கையானதே.

உற்பத்தித் திறனும் லாப அளவீடுகளும்

தொகு

2006வது வருடத்திய ஆய்வு ஒன்று, வளர்ந்த நாடுகளில், கரிம வேளாண்மைக்கு மாற்றப்பட்ட விளைநிலங்கள், பாரம்பரிய விளை நிலங்களை விடக் குறைவாக அறுவடைக்கு-முந்தைய விளைச்சலை (92%)அளிப்பதாகவும், கரிம விளை நிலங்கள் வளரும் நாடுகளில் உள்ள அவற்றை விடக் குறைந்த திறனுள்ள கரிம நிலங்களை விட அதிக அளவில் அறுவடைக்கு-முந்தைய விளைச்சலை (132%) அளிப்பதாகவும் கூறுகிறது. வளர்ந்த நாடுகளின் தீவிரமான, மானியம் பெறுகின்ற பண்ணை முறைகளை ஒப்பிடும்போது, வளரும் நாடுகளில் விலையுயர்ந்த உரங்களும் மற்றும் பூச்சிக் கொல்லிகளும் இல்லாமையும் கிடைக்கப் பெறாமையே இதன் காரணம் என்று ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். இருப்பினும், ஆராய்ச்சியாளர் கரிம முறைமைகள், பசுமைப் புரட்சி (பாரம்பரிய) முறைமைகளை விட அதிக விளைச்சலைத் தருகின்றன என்று குறிப்பான நோக்கத்துடன் கூறாமல் தவிர்த்து விடுகிறார்.[17] இந்த ஆய்வு, 205 பயிர் வகைகளை ஒப்பிட்டு கரிமப் பயிர்கள் பாரம்பரிய மகசூலில் 91 சதவிகிதம் இருப்பதாகக் கண்டறிந்த ஒரு 1990 வது வருடத்திய ஆய்வை உள்ளிறுத்தியதாகும்.[18] 2001வது வருடம் பிரசுரிக்கப்பட்ட ஒரு முதன்மையான யூஎஸ் கருத்தாய்வு, பல்வேறு வகைப்பட்ட பயிர்களை விளைவிக்கும் பருவங்களை ஆராய்ந்து, கரிம விளைச்சல் பாரம்பரிய விளைச்சலில் 95-100% இருப்பதாக முடிவாக உரைத்தது.[19]

மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கரிம விளை நிலங்கள் மிகவும் மோசமான பருவ நிலைகளைத் தாங்குவதில் பாரம்பரிய விளை நிலங்களை விட அதிகத் திறன் கொண்டிருப்பதாக அறியப்பட்டதாகவும், சில சமயங்களில், வறட்சிக் காலம் போன்ற வேளைகளில் பாரம்பரிய விளை நிலங்களை விடவும் 70-90% அதிக விளைச்சல் தருவதாகவும் லோட்டர் (2003:10)குறிப்பிடுகிறது. கார்னல் பல்கலைக் கழகம் 22-வருட காலம் நடத்திய ஒரு சோதனை ஆய்வு 2005வது ஆண்டில் பிரசுரமானது. இதில், நீண்ட காலத்திற்கு சராசரியாகப் பார்க்கும்போது கரிம நிலங்கள், பாரம்பரிய நிலங்களைப் போலவே மக்காச் சோளம் மற்றும் சோயா மொச்சையை விளைவிப்பதாகவும், ஆனால், அவை குறைவான சக்தியை பயன்படுத்துவதாகவும், மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை அறவே தவிர்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. அவை, பொதுவாகக் குறைந்த மகசூலும், வறட்சி மிகுந்த வருடங்களில் அதிக மகசூலும் விளைவித்ததே இந்த முடிவுகளுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.[20] மத்திய அமெரிக்காவில் 1998வது வருடம் மிச் என்னும் புயலால் பாதிப்படைந்த 1,804 கரிம விளை நிலங்களை ஆய்வு செய்ததில் அவை, சேதத்தை மிக நன்றாகத் தாங்கின என்றும், மேல் மண்ணில் 20 முதல் 40% வரை தக்க வைத்துக் கொண்டன என்றும், தமது அண்டை விளை நிலங்களை விட குறிப்பிடத் தக்க அளவுகளில் சிறிய அளவிலேயே பொருளாதார நஷ்டம் அடைந்தன என்றும் கண்டறியப்பட்டது.[21]

இதற்கு மாறாக, பிரதானமான ஒரு 21-வருட ஸ்விஸ் ஆய்வு, கரிம விளைச்சல் பாரம்பரிய விளைச்சலை விட சராசரியாக 20% குறைவாக இருப்பதாகவும், ஆயினும் சக்தி மற்றும் உரங்களுக்கான செலவும் 50% குறைவாக இருப்பதாகவும், மற்றும் பூச்சிக் கொல்லிகளை 97% குறைவாக பயன்படுத்தியதாகவும் கண்டறிந்தது.[22] யுஎஸ்ஸின் விவசாய ஆராய்ச்சி சேவைப் பிரிவை (அக்ரிகல்சுரல் ரிசர்ச் சர்வீஸ் - ஏ ஆர் எஸ்) சேர்ந்த விஞ்ஞானிகள், பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பாரம்பரியமான உழவற்ற முறைமை வேளாண்மையை விடவும் சிறந்த முறையில் மண்ணின் கரிம வளத்தைப் பெருக்க கரிம வேளாண்மையால் இயலும் என்று அறிவித்தனர். இது, கரிம வேளாண்மை வழி நீண்ட காலப் பயன்களை அடைய முடியும் என்று சுட்டிக் காட்டுவதாக அமைந்தது.[23] சத்துக்கள் அழிந்து விட்ட மண்ணில் கரிம முறைமைகளைப் பற்றிய ஒரு 18 வருட ஆய்வு, மண் வளம் மற்றும் குளிர் மிகுந்த தட்ப வெப்ப நிலையில் விளைச்சல் அளிப்பது ஆகியவற்றைப் பொறுத்த வரையில், பாரம்பரிய முறைமைகள் சிறப்பானவை என்று அறிவித்தது. கரிம வேளாண்மையின் பயன்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்தே பெறப்படுவதாகவும், அவற்றை "சொந்தமான நீண்ட காலத் தாங்கு திறன்" என்று கூற முடியாதென்றும் அது வாதிட்டது.[24]

கரிம விளை நிலங்களில் விளைச்சல் குறைவாக இருப்பினும், கரிம முறைமைகளுக்கு செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் தேவைப்படுவதில்லை. இந்த உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப் பெறுகிறது. கரிம விளை நிலங்கள் பாரம்பரிய விளை நிலங்களுக்கு ஈடான அளவிலோ அல்லது அதற்கும் அதிகமான அளவிலோ (கூடுதல் விலை உள்ளிட்டு) லாபம் ஈட்டுவதாகத் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால், இத்தகைய கூடுதல் விலைகள் இல்லாது போனால், அவற்றின் லாப நிலையானது நஷ்டங்களும் கலந்தே இருக்கிறது (லோட்டர் 2003:11). அமெரிக்க நாடுகளின் வறட்சி மிகுந்த மாநிலங்களில், கரிம விவசாயிகள், தமது விளை நிலங்கள் வறட்சிக் காலங்களில் பாரம்பரிய விளை நிலங்களை விட அதிக செயல்திறன் பெற்றிருப்பதால், அதிக லாபம் ஈட்டுவதாக வெல்ஷ் (1999) கூறுகிறது.[25]

2008வது வருடம் ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் நிரல் (யூஎன் என்விரன்மெண்டல் ப்ரோக்ராம் - யூஎன்ஈபி) மற்றும் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (யூஎன் கான்ஃபெரன்ஸ் ஆன் ட்ரேட் அண்ட் டெவெலப்மெண்ட் (யூஎன்சிடிஏடி) ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், "ஆப்பிரிக்காவில், பெரும்பான்மையான பாரம்பரிய உற்பத்தி அமைப்புக்களை விட கரிம விவசாயம் உணவுப் பாதுகாப்பிற்கு மேலும் உகந்ததாக இருக்கும்; மேலும், நீண்ட காலப் பார்வையில் அது அதிக அளவில் தொடர் தாங்கு திறன் கொண்டதாக இருக்கும்" என்று கூறப்பட்டது.[26] இந்த அறிக்கை 24 ஆப்பிரிக்க நாடுகளில் 114 விவசாயத் திட்டங்களை மதிப்பீடு செய்தது. "இரண்டு மடங்குக்கும் அதிகமான விளைச்சல்கள் கரிம முறைப்படியானவை அல்லது, அதற்கு மிக நெருக்கமான முறைமைகளைப் பயன்படுத்தியவை" என்று இது கண்டறிந்தது. மேலும், மண் வளமும், வறட்சி எதிர்ப்பும் மேம்பட்டிருந்ததாகவும் இது கண்டறிந்தது.[27]

2009வது வருடம், ஒரு ஆய்வு, விஸ்கான்சின்னில் கூடுதல் விலையையும் சேர்த்துப் பார்க்கும்போது, கரிம உற்பத்தி அதிக லாபம் அளிப்பதாக முடிவு செய்தது.[28]

பெரும் அளவுப் பொருளாதாரப் பாதிப்பு

தொகு

கரிம முறைமைகளுக்கு அதிக அளவில் ஆட்கள்,[29] தேவைப்படுவார்கள். இதனால் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; ஆனால், நகர்ப்புற நுகர்வோருக்கு விலைகள் அதிகரிக்கும்.

செயல் ஊக்கமளிப்புகள்

தொகு

பொதுவாக விவசாயமானது வெளியிலிருந்து பெறப்படும் பொருட்களின் விலையையும் சேர்த்தே சமுதாயத்தின் மீது சுமத்துகிறது. பூச்சிக் கொல்லிகள், சத்தேற்றுதல், அளவுக்கதிகமான நீர் பயன்படுத்துதல் மற்றும் இவை தொடர்பான மற்ற பிரச்சினைகளைச் சொல்லலாம். கரிம விவசாயம் இவற்றில் சில காரணிகளை மட்டுப்படுத்துவதால், கரிம வேளாண்மை சமுதாயத்தின் மீது குறைவான அளவில் வெளியிலிருந்து பெறப்படும் பொருட்களின் விலையைச் சுமத்தும் என்று நம்பப்படுகிறது.[30] யூகேயில் 2000வது வருடம் விவசாயம் பற்றி நடந்த ஒரு மதிப்பீடு 1996வது வருடத்திற்கான வெளியிலிருந்து பெறப்படும் பொருட்களின் விலைமொத்தமாக 2343 பிரித்தானிய பவுண்டுகள் அல்லது ஒரு ஹெக்டருக்கு 208 பவுண்டுகள் என்று முடிவாகக் கூறியது.[31] இந்த விலைகளைப் பற்றி 2005வது வருடம் யூஎஸ்ஏவில் நடந்த ஒரு பகுப்பாய்வு, விளைநிலம், சுமாராக 5லிருந்து 16 பில்லியன் டாலர்களும் (ஒரு ஹெக்டருக்கு $30லிருந்து $96 வரை), கால்நடை உற்பத்திகள் 714 டாலர்களும் சுமத்துவதாக முடிவுரைத்தது.[32] இந்த இரண்டு ஆய்வுகளுமே, வெளிப்புற செலவீனங்களை மேலும் உட்புறப்படுத்த வேண்டும் என்று முடிவாக கூறின. இரண்டுமே தமது பகுப்பாய்வில் மானியங்களைக் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால், விவசாயம் சமுதாயத்தின் மீது சுமத்தும் விலையை மானியங்களும் பாதிப்பதாக இரண்டுமே குறிப்பிட்டன. இரண்டுமே வருமானம் சார்ந்த பாதிப்புக்களிலேயே கவனம் செலுத்தின. 2000வது வருடத்திய ஆய்வு பூச்சிக் கொல்லிகளிலான நச்சுத்தன்மையை உள்ளடக்கியிருந்தது; ஆனால், அவற்றால் விளையக் கூடிய நீண்ட நாள் நோய்களைச் சேர்க்கவில்லை. 2004வது வருடத்திய ஆய்வு பூச்சிக் கொல்லிகளின் பாதிப்பு பற்றிய ஒரு 1992வது வருடத்திய ஆய்வையே சார்ந்திருந்தது.

பூச்சிக் கொல்லிகள்

தொகு
 
வாஷிங்டன் பெடரோஸில் ஒரு பழத்தோட்டத்தின் வெளியே, பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டாம் என்று பழத்தோட்டக் காரர்களுக்கு நினைவுறுத்தும் ஒரு குறிப்புப் பலகை.

பெரும்பான்மையான இயற்கை வேளன்மை விளைநிலங்கள் பாரம்பரியமான பண்ணைகளை விடக் குறைவான அளவிலேயே பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றன. சில பூச்சிக் கொல்லிகள் சுற்றுச் சூழலை பாதிக்கின்றன; அல்லது மனித ஆரோக்கியத்திற்கு நேரடியான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. கரிம வேளாண்மையில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் ஐந்து பூச்சிக்கொல்லிகள்: பிடி (நுண்ணுயிர் நச்சு),பைரெத்ரம், ரோடெனோன்[சான்று தேவை], காப்பர் மற்றும் சல்ஃபர் ஆகியவையாகும்.[33] 10 சத விகிதத்திற்கும் குறைவான கரிம விவசாயிகளே இந்த பூச்சிக் கொல்லிகளை முறையாக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்று கருத்தாய்வுகள் கண்டறிந்துள்ளன; ஒரு கருத்தாய்வின்படி, கலிஃபோர்னியாவில் 5.3% காய்கறி விவசாயிகளே ரோடெனோன் பயன்படுத்துகிறார்கள்; 1.7% விவசாயிகள் பைரெத்ரம் பயன்படுத்துகிறார்கள்.(லோட்டர் 2003:26) ரசாயனம் சார்ந்த பூச்சிக் கொல்லிகளை குறைப்பதும் அவற்றை ஒரேயடியாக அவற்றை நிறுத்துவதும், தொழில் நுட்ப ரீதியாக சவாலாக உள்ளன.[34] புதிதாக வரும் கரிம விளை நிலங்கள் இந்தப் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒதுக்கி விடுகின்றன[35]; பல நேரங்களில் மற்ற பூச்சிக் கொல்லித் திட்டங்களுக்கு கரிம பூச்சிக் கொல்லிகள் இணை நிறைவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டின் மிக முக்கியமான விளைவு, அந்தப் பூச்சிக் கொல்லிகள் நீருடன் கலந்து பரவி விடுவதுதான். யூஎஸ்டிஏ இயற்கை வளப் பாதுகாப்பு சேவை, விளை நிலங்களில் பூச்சிக்கொல்லிகள் நீருடன் கலந்து அதை மாசுபடுத்துவதால் விளையும் சுற்றுச் சூழல் ஆபத்தை ஆராய்கிறது. அது முடிவாக இவ்வாறு கூறுகிறது: மொத்தமாகப் பார்க்கையில், கடந்த இருபத்து ஆறு வருடங்களாக நாட்டின் பூச்சிக் கொல்லி பற்றிய கொள்கைகள், விளை நிலப் பரப்பு மற்றும் அதில் இடப்படும் பூச்சிக் கொல்லிகளின் எடை சற்றே அதிகரித்திருந்தாலும், பூச்சிக் கொல்லியினால் விளையும் ஆபத்தைக் குறைத்துள்ளன." இருப்பினும், இன்னும் முன்னேற்றம் காணப்படாத எத்தனையோ பகுதிகள், மற்றும் குடிநீர், மீன், பாசி மற்றும் க்ரஸ்டாசியன்ஸ் ஆகியவற்றிற்கான ஆபத்து மிக அதிக நிலையில்தான் இருக்கிறது."[36]

பூச்சிக் கொல்லி எதிர்ப்புடைய, மரபியல் திருத்தப்பட்ட பயிர்கள் பூச்சிக் கொல்லிப் பயன்பாட்டிற்கு மாற்றாகக் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், மரபியல் திருத்தப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நீண்ட காலப் பயன்பாடு பற்றிய கவலைகளால், மரபியல் திருத்தம் கரிம வேளாண்மை இயக்கத்தால் மிகவும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.[5]

உணவின் தரமும் பாதுகாப்பும்

தொகு

இது தொடர்பான ஆய்வுகள் முற்றுப் பெறாவிடினும், கரிம உணவானது பாராம்பரிய உணவை[37] விட ஆரோக்கியமானது என்று பொது மக்களால் நம்பப்படுகிறது.[37] கரிம உணவளிக்கப்பட்ட விலங்குகளில் ஆரோக்கியமும், இனவிருத்திச் செயல் திறனும் சற்றே மேம்பட்ட அளவில் காணப்பட்டன. ஆனால், இதையொத்த ஆய்வுகள் மனிதர்களில் நடைபெறவில்லை.[37] சில காய்களிலும், தானியங்களிலும், புரதச் சத்தின் அடர்வு குறைவாக இருப்பினும் அதன் தரம் மிகுதியாக உள்ளது. சத்துக்களும் இதை ஒத்தவையாகவே உள்ளன. விதி விலக்காக 'சி' சத்து கரிம உணவில் சற்றே அதிகமாக காணப்படுகிறது.[37]

கரிம உணவின் குறிப்பான பாதுகாப்பைப் பற்றி ஊகமான முடிவுகளே எடுக்கப்பட இயலும். கரிம விளைச்சலில் விவசாய ரசாயனங்களின் எச்சம் குறைவாக இருக்கக் கூடும்; ஆனால், இந்த எச்சங்கள் பொதுவாக தினசரி உட்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுகளை விட குறைவாகவே உள்ளன, மற்றும் ஆரோக்கியத்தின் மீதான அவற்றின் பாதிப்பும் கேள்விக்குரியதுதான்.[38] கரிம உணவில் நைட்ரேட்டின் அடர்வும் குறைவாக இருப்பதாகக் காணப்படுகிறது, ஆனால் ஆரோக்கியத்தின் மீதான நைட்ரேட்டின் பாதிப்பு வாதிக்கப்படுகிறது. கரிம மற்றும் பாராம்பரிய உணவு ஆகிய இரண்டுமே விடாதிருக்கும் கரிம மாசுப் பொருட்கள் மற்றும் கனரக உலோகங்கள் ஆகியவற்றின் ஒத்த அடர்வுகளையே கொண்டுள்ளன. இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லிகள் மற்றும் ஆரோக்கியத்தின் மீதான அவற்றின் விளைவுகள், மேலும், நுண்ணுயிர் நோய்க்கிருமிகள் ஆகியவை பற்றிய தரவுகள் குறைவாகவே உள்ளன.[38]

கரிம உணவிற்கான அதிகச் செலவு (45லிருந்து 200% வரை செல்வதாக உள்ளது), தினம் ஐந்து முறை காய்கள் மற்றும் பழங்கள் (அவை கரிமமாகவோ அல்லது பாராம்பரியமாகவோ எப்படியிருந்தாலும்) உட்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை கடைப்பிடிக்க இயலாதபடிசெய்து விடும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.[38]

கரிம உணவு உண்ட குழந்தைகள், பாராம்பரிய உணவு உண்ட குழந்தைகளை விட, குறைவான அளவு ஆர்கனோஃபாஸ்ஃபரஸ் பூச்சிக்கொல்லிக்கு வெளிப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று இரண்டு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.[39][40] இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கிய வெளிப்பாட்டு த் தரவுளை சேகரிக்கவில்லை என்றாலும், "கரிம உணவைக் கொண்டுள்ள சாப்பாட்டைச் சாப்பிடும் குழந்தைகள் நரம்பியல் தொடர்பான ஆரோக்கிய ஆபத்துக்களுக்கு குறைவாக வெளிப்படுகிறார்கள் என்று கொள்வது உள்ளுணர்வுக்கு உகந்ததாக உள்ளது." என்று கூறினர். 2007வது ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இதையொத்த பலன் எதுவும் கரிம பழங்கள், காய்கள் அல்லது இறைச்சியில்[41] காணப்படவில்லை என்றாலும் கூட, கரிமப் பாலை உட்கொள்வதால் எக்சிமா நோய்க்கான ஆபத்து குறைவதாகக் கண்டறியப்பட்டது.

ஸ்விட்சர்லாந்தில் மிகப் பெரும் அளவில், 200 பண்ணைகளுக்கும் மேலாக, கரிம உணவுப் பொருட்களின் தரத்தினை பாராம்பரிய உணவுடன் ஒப்பிடும்போது உள்ள வேறுபாடுகள் பற்றி தீர்மானிப்பதற்காகவும், மேலும் பல சோதனைகளுக்காகவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எஃப்ஐபிஎல் இன்ஸ்டிட்யூட், 200 பண்ணைகளுக்கும் மேலாக இந்த வித்தியாசங்களைப் புலனாய்வு செய்து வருகிறது "கரிமப் பொருட்கள் துணை தாவர கூட்டுப் பொருட்கள் மற்றும் 'சி' சத்து ஆகியவற்றின் அதிக அளவுகளைக் கொண்டு தனித்து நிற்கின்றன. பால் மற்றும் இறைச்சியைப் பொறுத்த வரையில், கொழுப்பு அமிலமானது சத்து என்னும் கருத்திலிருந்து பார்க்கும்போது சிறப்பானதுதான்." என்று கூறுகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில், கரிம உணவுகளுக்கும் பாராம்பரிய உணவுகளுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. இருப்பினும், நைட்ரேட், மற்றும் பூச்சிக் கொல்லி எச்சங்கள் ஆகிய வேண்டாதவற்றைப் பொறுத்த வரையில் கரிமப் பொருட்கள் தெளிவான நன்மையைக் கொண்டுள்ளன.[42] 2007வது வருடம் £12 மில்லியன் நிதியுதவியுடன், கரிம மற்றும் சாதாரண உணவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளின் புலனாய்வு நடத்தப்பட்டது. இதில், கரிம உணவுகள் அதிக அளவில் சத்து மதிப்பைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டது.[43] அண்மைக்கால ஆய்வு ஒன்று கரிம முறையில் பயிரானவை ஃப்ளாவோனொய்டுகள் என்னும் நச்சுப் பொருள் எதிரிகளை இரண்டு பங்கு கொண்டிருப்பதாகக் கண்டறிந்தது.[44]

எஃப்ஐபிஎல் இன்ஸ்டிட்யூட் 2007வது ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கரிம முறையில் விளைவிக்கப்பட்ட கிவிப் பழம் பாராம்பரிய கிவிப் பழத்தை விட அதிக அளவில் நச்சு எதிர்ப்புப் பொருள் கொண்டிருப்பதாக கண்டறிந்தது.[45]

உடையின் தரமும் பாதுகாப்பும்

தொகு

அண்மைக் காலமாக, சுற்றுச் சூழல் மற்றும் சொந்த ஆரோக்கியம் ஆகியவை பற்றிய அக்கறையின் காரணமாக, கரிம உடைகள் மிகவும் பரந்த அளவில் கிடைக்கப் பெறுகின்றன. கரிம உடைகளின் நுகர்வோரில் பெரும்பாலோர் செயற்கை ரசாயனங்களின் மீது வெறுப்புற்றிருப்பது காரணம் என்றாலும், கரிம உடைகளுக்கான சந்தையின் ஒரு பெரும் பகுதி, பன்முக ரசாயன மிகு உணர்ச்சி என்னும் ஒரு நீண்ட நாள் மருத்துவ நிலையைக் கொண்டோரை உள்ளிட்டிருக்கிறது. சிறிய அளவுகளிலான ரசாயன வெளிப்பாடுகள் காரணமாக வரும் எதிரிடைப் பின்விளைவுகளே காரணம் என்று பாதிப்படைந்தவர்களால் கூறப்படும் அறிகுறிகளை இந்த மருத்துவ நிலை உள்ளிட்டிருக்கிறது.

சுற்றுச் சூழல் பற்றிய அக்கறையானது பூச்சிக் கொல்லி யின் பயன்பாட்டின் மீதே குவிமையப்படுத்தப்படுகிறது. காரணம், உலகின் மொத்த பூச்சிக் கொல்லிகளில் 16% பருத்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.[46]

மரபணு ரீதியில் திருத்தி அமைக்கப்பட்ட உயிரினங்கள்

தொகு

கரிம வேளாண்மையின் அடிப்படையான ஒரு குணாதிசயம், மரபணு ரீதியில் திருத்தப்பட்ட (தாவரம் மற்றும் விலங்குகளையும் உள்ளிட்ட) பொருட்களை அது நிராகரிப்பதுதான். 1998வது வருடம் அக்டோபர் 19 அன்று, ஐஎஃப்ஓஏஎம்மின் 12வது அறிவியல் மாநாடு மர் டெ பிளேட்டா அறிக்கையை வெளியிட்டது. இதில், 60க்கும் மேலான நாடுகளிலிருந்து வந்திருந்த 600க்கும் மேலான பிரதிநிதிகள் மரபணு திருத்தப்பட்ட உயிரினங்களை உணவு உற்பத்தியிலும், விவசாயத்திலும் புறக்கணிப்பதற்கு ஒருமனதாக வாக்களித்தனர் இந்தக் கட்டத்திலிருந்து, மரபணு திருத்தப்பட்ட உயிரினங்கள் (ஜெனடிகலி மாடிஃபைட் ஆர்கானிசம்ஸ் - ஜிஎம்ஓக்கள்) கரிம வேளாண்மையில் கண்டிப்பாக விலக்கப்படுவது பரவலாக அங்கீகரிக்கப்பட்டது.

கரிம வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பத்திற்கான எதிர்ப்பு தீவிரமாக இருப்பினும், லூயி ஹெரரா-எஸ்டெல்லா மற்றும் ஏரியல் அல்வரெஜ் -மொரெலெஸ் ஆகிய விவசாய ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை கரிம வேளாண்மையுடன் இணைப்பதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுவே, தொடர் தாங்கு திறன் கொண்ட விவசாயத்திற்கு, குறிப்பாக வளரும் நாடுகளில், உகந்த முறை என்று அவர்கள் கூறுகின்றனர்.[47] இதைப் போலவே, சில கரிம விவசாயிகளும் மரபணு திருத்தப்பட்ட விதைக்கான தடைக்குப் பின்னால் இருக்கும் அறிவுடைமையைக் கேள்வி கேட்கின்றனர். அவர்கள் இதை கரிமக் கோட்பாடுகளுடன் இணைந்த ஒரு உயிரினம் சார்ந்த தொழில் நுட்பமாகக் காண்கின்றனர்.[48]

இவ்வாறு ஜிஎம்ஓக்கள் கரிம வேளாண்மையில் விலக்கப்பட்டிருப்பினும், மரபணு திருத்தப்பட்ட பயிர்களிலிருந்து வெளிப்படும் மகரந்தம் கரிம வேளாண்மை மற்றும் தொடர் மரபணு (ஹேர்லூம் ஜெனடிக்ஸ்) ஆகியவற்றைத் தொடர்ந்து மாசுபடுத்தி வருவதைப் பற்றி அக்கறை தெரிவிக்கப்படுகிறது. இதனால், இந்த மரபணுக்களை கரிம உணவு வழங்குதலில் நுழையாமல் தடுப்பது அசாத்தியம் அல்லவென்றாலும், மிகுந்த சிரமம் உள்ளதாகி வருகிறது. சர்வதேச வர்த்தக கட்டுப்பாடுகள் இந்த ஜிஎம்ஓக்கள் சில நாடுகளுக்குக் கிடைப்பதை கட்டுப்படுத்துகின்ற்ன.

மரபணு திருத்தம் உண்மையில் சுற்றுச் சூழலுக்கோ அல்லது தனிப்பட்டவரின் ஆரோக்கியத்திற்கோ உருவாக்கக் கூடியதாக கூறப்படும் ஆபத்துக்கள் பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. ஜிஎம் ஃபுட் சர்ச்சை என்பதைப் பார்க்கவும்.

நிலப் பாதுகாப்பு

தொகு

புவியுருமாற்றவியல் நிபுணர் டேவிட் மொண்ட்கொமரி தமது "அழுக்கு: நாகரிகங்களின் அரித்தழிப்பு " என்னும் நூலில் மண்ணின் அரித்தழிப்பு காரணமாக வரப்போகும் நெருக்கடி பற்றி குறிப்பிடுகிறார். விவசாயம் என்பது சுமாராக மேல் மண்ணில் ஒரு மீட்டரைச் சார்ந்துள்ளதாகும். இது மீண்டும் ஈடு செய்யப்படுவதை விட பத்து மடங்கு அதிக வேகமாகக் குறைந்து வருகிறது.[49] பூச்சிக் கொல்லிகளைச் சார்ந்ததாக சிலரால் கோரப்படும் உழவற்ற முறைமை வேளாண்மை இந்த அரித்தழிப்பைக் குறைக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. இருப்பினும் யூஎஸ்டிஏ விவசாய ஆராய்ச்சி சேவை அண்மையில் நடத்திய ஒரு ஆய்வு, உழுதலை உள்ளடக்கிய கரிம வேளாண்மை முறைமையில் உரமிடுவது, உழவற்ற வேளாண்மையை விட அதிக அளவில் மண் கட்டமைப்புத் திறனை சிறப்பாகக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது.[50][51]

பருவ நிலை மாற்றம்

தொகு

அந்தோணி மெலெகா தமது "பருவ நிலை மாற்றத்திற்கு கரிமத்தின் பதில் " என்னும் நூலில், கரிம வேளாண்மை - மூடப்பட்ட சத்துச் சுழற்சி, பல்லுயிரினம் மற்றும் திறன் மிக்க நில மேலாண்மை ஆகியவற்றை அது வலியுறுத்துவதினால் - பருவ நிலை மாற்றங்களினால் உண்டாகும் விளைவுகளைக் குறைக்கவோ, அவற்றை நேர்மாறாகச் செய்யவோ இயலும் ஆற்றல் உடையது என்று வாதிடுகிறார்.[52]

1981வது வருடத்திலிருந்து கரிம விவசாய முறைமைகளை பாரம்பரிய முறைமைகளுடன் ஒப்பிட்டு வரும் ரொடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, தொல்லுயிர் எச்ச (ஃபாசில்) எரிபொருள் வெளிப்பாட்டைக் குறைத்தல் மற்றும் மண்ணின் கரியமிலத்தன்மையை சமன்படுத்துவதன் மூலமும், புவி வெப்பமடைதல் குறைக்கப்படுவதற்காகவும் கரிம வேளாண்மை பயன்படுத்தப்படலாம். கரிம முறைமைகள் செயற்கை நைட்ரஜன் விலக்கப்படுவதால், தொல்லுயிர் எச்ச எரிபொருள் நுகர்வு 33 சதவிகிதம் குறைகிறது (லாஸெல்) மற்றும் கார்பன் சீக்வெஸ்ட்ரேஷன் எனப்படும் நீண்ட கால கரியமில சேமிப்பினால், வளி மண்டலத்திலிருந்து கரியமில வாயு எடுக்கப்பட்டு அது மண்ணில் ஒரு உயிரின விடயமாகக் கொள்ளப்படுகிறது. இது பாரம்பரிய முறைகளில் நிர்வகிக்கப்படும் விளை நிலங்களில் இழக்கப்படுகிறது. ரொடெல் நிறுவனத்தின்படி நீண்ட கால கரியமில சேகரிப்பானது, கரிம உழவற்ற மண்ணில் குறிப்பிட்டுக் கூறும்படியான அதிக அளவுகளில் உண்டாகிறது.

(பாரம்பரிய) விவசாயத்தின் எதிர்மறையான வெளிப்புறப் பொருட்களின் அளவை கரிம விவசாயத்தினால் குறைக்க முடியும். இது தனிப்பட்ட நன்மையா அல்லது பொது நன்மையா என்பது, தொடக்கத்தில் சொத்துரிமை குறிப்பிடப்படுவதைப் பொறுத்து உள்ளது.[53] இருப்பினும் உலகளவில் பருவ நிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிட கரிம வேளாண்மையின் திறன் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் கணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு. மீள் உருவாக்க கரிமச் செயல்முறைகள் கரியமில வெளிப்பாடுகளை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த திட்டங்களில் ஒன்று என ரோடெல் நிறுவனம் பதிவு செய்த மண் கரியமில தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.[54]

சத்துக்கள் பொசிதல்

தொகு

ஏரிகள், நதிகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சத்துக்கள், பாசிப் பெருக்கம், யூட்ரோஃபிகேஷன் எனப்படும் சத்துக்குவியலால் உண்டாகும் தாவரப் பெருக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து இறந்த வலயம் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும். மேலும், நைட்ரேட்டுக்கள், நீர் வாழ் உயிரினங்களுக்கும் மிகுந்த ஆபத்தானவை. இந்த மாசுபாடில் முக்கிய பங்களிப்பது நைட்ரேட் உரங்களாகும். இவற்றின் பயன்பாடு "2050வது ஆண்டில் இரண்டு அல்லது ஏறத்தாழ மூன்று மடங்குகளாக" அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[55] யுனைடட் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் என்னும் நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கரிம முறைப்படி உரமிடப்படும் விளை நிலங்கள், பாராம்பரிய முறைப்படி உரமிடப்படும் விளை நிலங்களை விட "குறிப்பிடத்தக்க அளவில் தீங்கு விளைக்கும் நைட்ரேட் பொசிதலை (குறைக்கின்றன)என்று கண்டறிந்தனர். "பாரம்பரிய நிலங்களில் வருடாந்திர நைட்ரேட் பொசிதல் கரிம விளைநிலங்களுடையதை விட 4.4-5.6 மடங்கு அதிகமாக இருந்தது".[56]

மெக்சிகோவின் கல்ஃபில் பெரும் அளவில் காணப்படும் இறந்த வலயங்கள், உரங்கள் மற்றும் கால்நடை எரு ஆகியவை நீருடன் கலந்து ஓடும் விவசாய மாசுபடுத்தலால் ஏற்பட்டதாகவே விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கல்ஃபில் செலுத்தப்படும் நைட்ரஜனில் பாதிக்கு மேல் விவசாயத்திலிருந்து வந்ததாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் கருத்தாய்வின் (USGS) ஆய்வு கூறுகிறது. மீனவர்கள் இதற்காகக் கொடுக்க வேண்டிய பொருளாதார விலை மிக அதிகமாக இருக்கலாம், காரணம் மீன்களைத் தேடி அவர்கள் கரையிலிருந்து வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.[57]

2000வது வருடம் ஐஎஃப்ஓஏஎம் மாநாட்டில், ஆராய்ச்சியாளர்கள் டான்யூப் நதியில் நைட்ரஜன் பொசிதல் பற்றிய ஒரு ஆய்வை அளித்தனர். கரிம வேளாண்மையில், நைட்ரஜன் நீருடன் கலந்தோடுதல் குறைவாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். மேலும், ஒரு கிலோ நைட்ரோஜனுக்கு ஒரு யூரோ விதிக்கப்படுவதன் மூலம் வெளிப்புறச் செலவு உள்ளிறுத்தப்படலாமென்றும் அவர்கள் யோசனை தெரிவித்தனர்.[58]

கலிஃபோர்னியாவில் பாசிப் பெருக்கத்திற்கும், விவசாயத்தினால் ஏற்படும் நீருடன் கலந்தோட்டத்திற்கும் இடையே உறுதியான தொடர்பு இருப்பதாக 2005வது வருடத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்தது.[59]

பல்லுயிரினம்

தொகு

கரிம வேளாண்மையினால் மிகப் பெரும் வீச்சுக்குட்பட்ட உயிரினங்கள் பயன் பெறுகின்றன. ஆயினும், ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய-சுற்றுச் சூழல் பாரம்பரிய முறைமைகளை விட கரிம முறைமைகள் அதிகப் பயன் விளைக்கின்றனவா என்பது தெளிவாகவில்லை.[60] விளை நிலங்களின் ஒப்புமையில் ஏறத்தாழ, (per annum)பயிரற்ற, இயற்கையிலேயே உருவாகும் அனைத்து உயிரினங்களுமே கரிம விளை நிலங்களையே நாடுவதை அவற்றின் தொகை மற்றும் செழுமை ஆகியவை சுட்டிக் காட்டுகின்றன.[61][62] எல்லா உயிரின வகைகளையும் மொத்தமாகப் பார்க்கும்போது, பாரம்பரிய வேளாண்மை முறைமைகளை விட கரிம விளை நிலங்களில் இவை சராசரியாக 30% அதிகமாக உள்ளன.[63] பறவைகள், பட்டாம்பூச்சிகள், மண் நுண்ணுயிர்கள், வண்டுகள், மண்புழுக்கள், சிலந்திகள், தாவரம் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை குறிப்பாகப் பாதிக்கப்படுகின்றன. கரிமப் பயிர்கள், களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி ஆகியவற்றை மிகவும் குறைவாக உபயோகிக்கின்றன; அல்லது அறவே விலக்கி விடுகின்றன. இதனால், பல்லுயிரினம் தழைப்பது, அவற்றின் தொகை அடர்வு ஆகியவை நன்மைகளாகக் கிடைக்கப் பெறுகின்றன.[62] களை உயிரினங்கள் பல நன்மை பயக்கும் பூச்சிகளை கவர்ந்திழுக்கின்றன. இவற்றால் மண்ணின் தரம் மற்றும் களைப் பூச்சிகளின் மேல் பருவப் புற்கள் ஆகியவை மேம்படுகிறது.[64] மண்ணுடன் இணைந்த உயிரினங்கள், எரு போன்ற இயற்கை உரங்கள் பரவப்படுவதாலும், பாரம்பரிய வேளாண்மை முறைமைகளுடன் தொடர்புபடுத்தப்படும் களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி ஆகியவற்றை குறைந்த அளவில் கொள்வதாலும் ஏற்படும் நுண்ணுயிர்ப் பெருக்கத்தினால் நன்மை அடைகின்றன.[61] மைகொரிஜே போன்ற மண் நுண்ணுயிர்களினால் குறிப்பாக அதிகரிக்கும் பல்லுயிரினமே சில கரிம பண்ணைகளின் அதிக மகசூலுக்கு விளக்கமாகக் கொள்ளப்படுகிறது. இது கரிம மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விளை நிலங்களில் நடத்தப்பட்ட ஒரு 21 வருட ஆய்வில் குறிப்பாகத் தெரிய வருகிறது.[65]

கரிம வேளாண்மையால் கிடைக்கப் பெறும் பல்லுயிரினம் மனிதர்களுக்கு இயற்கையான ஒரு மூலதனமாகும். கரிம விளை நிலங்களில் காணப்படும் அநேக உயிரின வகைகள், மனித உட்பொருட்களின் (உதாரணம். உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவை) அளவைக் குறைத்து விவசாயத்தின் தொடர் தாங்கு திறனைப் பெறுவதற்கு வழி காட்டுகின்றன.[66] பல்லுயிரினங்களை பெருக்குவதால், கரிம முறைமைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகள், குறைந்த அளவு விளைச்சலுக்கான ஆபத்தைக் குறைக்கிறார்கள். வட்டக் கழுத்து ஃபெசண்ட் மற்றும் வடக்கு பாப்ஒயிட் ஆகிய பறவைகள் பொதுவாக விவசாய நிலங்களிலேயே குடியிருக்கும். இவையும் பொழுது போக்கு வேட்டைக்கான தேவையினால் பெறப்படும் ஒரு இயற்கை மூலதனமாகும். ஏனெனில், பறவையினங்களின் செழுமையும், தொகையும் கரிம முறைமை விளை நிலங்களிலேயே அதிகமிருக்கும். இவை பல்லுயிரினத்தை ஊக்குவிக்குவிக்கின்றன என்பதை தர்க்க ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் காணலாம்.

மண் மற்றும் மண் உயிரினங்கள் ஆகியவற்றின் மீதான உயிரியல் ஆராய்ச்சி கரிம வேளாண்மைக்கு நன்மை பயப்பதாக காணப்பட்டுள்ளது. பல்வேறு நுண்ணுயிர்களும், காளான்களும் ரசாயனப் பொருட்கள், தாவரப் பொருள் மற்றும் விலங்குகளின் எச்சம் ஆகியவற்றைச் சிதைத்து அவற்றை உற்பத்தி வளத்தைப் பெருக்கும் மண் சத்தாக மாற்றுகின்றன. உற்பத்தியாளர், தமது பங்காக, ஆரோக்கியமான மகசூலையும், எதிர்காலப் பயிருக்குத் தேவையான சாகுபடிக்கேற்ற மண்ணையும் பெற்றுப் பயனடைகிறார்.[67] மேலும், கரிம மண் பொருட்களையும், அவை மண்ணின் தரம் மற்றும் மகசூலுடன் கொண்டுள்ள தொடர்பையும் சோதனை செய்யும் ஒரு ஆராய்ச்சி 21 வருடங்களுக்கு நடத்தப்பட்டது. கட்டுப்பாடுகள், மாறுபட்ட அளவுகளில் உரமிட்டுத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் நிலத்தை உரமிடப்படாத விளை நிலத்துடன் ஒப்பிடுவதை உள்ளடக்கியிருந்தன. இந்த ஆய்வு தொடங்கிய பிறகு, உரமிடப்பட்ட நிலங்களை விட கட்டுப்படுத்தப்பட்ட நிலங்களில் விளைச்சல் குறைவானதாகக் காணப்பட்டது. உரமிடப்படும் நிலங்களில் மண் நுண்ணுயிர்கள் அதிகரிப்பது ஆரோக்கியமான, சாகுபடிக்கேற்ற மண் வளத்திற்கான காரணம் என்பது இதன் முடிவாக அமைந்தது.[65]

விற்பனையும் சந்தைப்படுத்துதலும்

தொகு

சந்தைப்படுத்துதலும், விநியோகமும் மிகப் பெரும் தடைகளாக இருப்பதாகக் கரிம விவசாயிகள் கூறுகின்றனர். பெரும்பான்மையான விற்பனை, வளர்ந்த நாடுகளையே மையப்படுத்தியுள்ளது. இந்தப் பொருட்கள்தாம் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கைப் பொருட்கள் (the things must be trusted by all)என்று குறிப்பிடுவதாகும். காரணம் இவை உறுதிப்படுத்தப்பட முடியாத சான்றுகளைச் சார்ந்திருப்பதுதான். உணவுப் பொருட்களின் விலை ஏறும்போது, கரிமப் பொருட்களின் தேவைக்கான அளவு குறைவதை உணர முடியும். 2008வது வருடம் டபிள்யூஎஸ்எல் ஸ்ட்ராடஜிக் ரீடெயில் நடத்திய ஒரு கருத்தாய்வில், 2006ஆம் ஆண்டிலிருந்து கரிமப் பொருட்களின்பால் உள்ள ஈடுபாடு குறைந்து விட்டதாகக் கண்டறிந்தது. அமெரிக்கர்களில் 42 சத விகிதத்தினர் கரிமப் பொருட்களை நம்பவில்லையென்று வாக்களித்தனர். 2005வது வருடம் 70 சதவிகிதமாக இருந்த நிலைக்கு மாறாக, 69% அமெரிக்கர்களே எப்போதாவது கரிமப் பொருட்களை வாங்குவதாக ஹார்ட்மேன் க்ரூப் அறிவிக்கிறது. மக்கள் கரிமப் பொருட்களுக்குப் பதிலாக உள்ளூர் விளைச்சலையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலும் என்று ஹார்ட்மேன் க்ரூப் கூறுகிறது.[68]

விநியோகஸ்தர்கள்

தொகு

அமெரிக்க நாட்டில் 75 சதவிகித கரிம விளைநிலங்கள் 2.5 ஹெக்டேரை விடச் சிறிதானவை; கலிஃபோர்னியாவில் இரண்டு சதவிகித விளைநிலங்கள் கரிம விற்பனையில் பாதிக்கும் மேலான பங்கு வகிக்கின்றன (லோட்டர் 2003:4) சிறு பண்ணைகள் ஆர்கானிக் வேலி, இங்க் போன்ற ஒரு கூட்டுறவுக் குழுமமாக இணைந்து தங்கள் பொருட்களை மேலும் திறம்பட விற்பனை செய்கின்றன.

கடந்த இருபது வருடங்களாக, இந்தக் கூட்டுறவு விநியோக நிறுவனங்களில் பெரும்பான்மையானவை ஒன்றுடன் ஒன்றாக இணைந்து விட்டன, அல்லது விலைக்கு வாங்கப்பட்டு விட்டன. கிராமிய சமூகவியலாளர் ஃபிலிப் ஹெச்.ஹோவார்ட் அமெரிக்க நாட்டில் கரிமத் தொழிலின் கட்டமைப்பு மற்றும் உருமாற்றம் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். 2007வது ஆண்டு 28 நுகர்வோர் கூட்டுறவு விநியோகஸ்தர்கள் இருந்ததாகவும், தற்போது மூவர் மட்டுமே இருப்பதாகவும் அவர் கோருகிறார். இவ்வாறு அவை ஒன்றோடொன்று கலந்துவிட்ட செயல்பாட்டினை விளக்குவதற்கு ஒரு வரைகலைப் படத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.[69] அவரது ஆராய்ச்சி, இந்தச் சிறு கூட்டுறவு நிறுவனங்கள், ஜெனரல் மில்ஸ், ஹெயின்ஜ், கோனாக்ரா, கெல்லாக் மற்றும் வகைப்படுத்தப்பட்ட மற்ற வணிகக் குறிகள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களினால் உறிஞ்சப்பட்டு விட்டதைக் காட்டுகிறது. இவ்வாறு அவை இணைந்து விட்டிருப்பது, நுகர்வோர் மற்றும் பத்திரிகையாளர்களிடையே மோசடி மற்றும் தரக் குறைபாடு ஆகியவை பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பெரும் கூட்டுறவு நிறுவனங்களில் பெரும்பான்மையானவை தங்களது கரிமப் பொருட்களைத் தங்களது துணை நிறுவனங்கள், அவை தமது பெயரைப் பொருட்களின் விவரச்சீட்டின் மீது இருப்பதை அனுமதிக்கும் வகையில், அவற்றின் மூலமாக விற்கின்றன.[70]

உழவர் சந்தைகள்

தொகு

சிறு கரிம விவசாயிகளுக்கு விலையில் சற்றே ஏற்றம் இருப்பது அவர்களது லாபத்திற்கு அவசியமாகும்; இதனால், பலர் நுகர்வோருக்கு நேரடியாகவே உழவர் சந்தையில் விற்கின்றனர். அமெரிக்காவில் உழவர் சந்தைகள் 1994வது வருடம் 1,775 இருந்த நிலையிலிருந்து 2006வது வருடம் 4,385 ஆக உயர்ந்துள்ளன.[71]

கொள்திறன் கூட்டுதல்

தொகு

கரிம விவசாயம், அர்த்தமுள்ள சமுதாய - பொருளாதார மற்றும் சூழ்நிலை இயலின்படி தொடர் தாங்கு திறன் மேம்பாட்டிற்கு, குறிப்பாக ஏழை நாடுகளில், பங்காற்ற முடியும்.[72] ஒரு புறம், கரிமக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுகிறது. அதாவது, உள்ளூர் வளங்களையே திறமையான முறையில் பயன்படுத்துவது (உதாரணமாக உள்ளுர் விதை வகைகள், எரு போன்றவை. இதனால், விலைக்குறைப்பு சாத்தியமாகிறது. மறுபுறம், கரிமப் பொருட்களுக்கான சந்தை - உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் - பெரும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளது; மேலும், தெற்கத்திய உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் தங்கள் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள அருமையான வாய்ப்புகளை அது அளிக்கிறது.

கரிம விவசாயம் என்பது மிகப் பெரும் அளவில் அறிவுத் தீவிரம் சார்ந்த ஒரு உற்பத்தி முறை. ஆகவே, கொள்திறனை அதிகரிப்பது என்பது இதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கரிம விவசாயம் தொடர்பான பயிற்சிப் பொருட்கள் உருவாக்குவது மற்றும் பயிற்சி முறைகளை ஏற்பாடு செய்வது ஆகியவை தொடர்பாக உலகெங்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதிருக்கும் அறிவில் பெரும்பான்மையான பகுதி பல்வேறு இடங்களில் சிதறியுள்ளது மற்றும் எளிதில் அணுகப் பெற முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலை, குறிப்பாக வளரும் நாடுகளில், கரிமத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான தடையாக உள்ளது.

அந்தக் காரணத்தினால், சர்வதேக் கரிம வேளாண்மைக் இயக்கங்களின் கூட்டமைப்பு (International Federation of Organic Agriculture Movements), இணையம் சார்ந்த ஒரு பயிற்சியைத் துவக்கியுள்ளது. இதன் நோக்கம், கரிம விவசாயப் பயிற்சிக்கு உலகளவில் ஒரு குறிப்பேடாக இருப்பதும், கரிம விவசாயம் பற்றி உயர் தரமான பயிற்சிப் பொருட்கள் மற்றும் பயிற்சி நிரல்கள் ஆகியவை எளிதில் கிடைக்குமாறு செய்வதுமாகும். 2007வது வருடம் நவம்பர் மாதம், இந்த பயிற்சி முகமை 170 இலவசக் கையேடுகள் மற்றும் 75 பயிற்சி வாய்ப்புகளுக்கும் மேலாக வழங்கியது.

சர்ச்சைகள்

தொகு

கரிம விவசாய முறைமைகள் சுற்றுச் சூழலுக்கு அதிக அளவில் நட்புறவானவை மற்றும் அதிக விளைச்சல் தரும் வேளாண்மை முறைமைகளை விட அதிக அளவில் தொடர் தாங்கு திறன் கொண்டவை என்பதைப் பற்றிப் பல விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். இவர்களில் "பசுமைப் புரட்சி"யின் தந்தையான, நோபல் பரிசு பெற்றவரான நார்மன் போரலாக் ஒருவராவார். கரிம வேளாண்மை முறைமைகள், விளை நிலங்களை மிகவும் அளவுக்கதிகமாக பெருக்கிய பிறகும், அந்த முயற்சியில் சுற்றுச் சூழலை அழித்த பின்னரும்[73] கூட, அதிக பட்சமாக 4 பில்லியன் மக்களுக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்று அவர் அடித்துக் கூறுகிறார். மற்றொருவர் பேராசிரியர் ட்ரெவவாஸ்.[74]

இந்த விஷயங்களில் மிகவும் அக்கறை கொண்டிருந்த மேஜர் சூப்பர்மார்க்கெட் பரணிடப்பட்டது 2010-07-06 at the வந்தவழி இயந்திரம் ட்ரெவவாஸ் மற்றும் லார்ட் பி.மெல்ச்செட் ஆகியோருக்கிடையேயான இது பற்றிய வாதத்தைத் தொகுத்து வெளியிட்டது.

டேனிஷ் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு முகைமை ஒன்று நடத்திய ஆய்வில், பகுதி பகுதியாகப் பார்க்கும்பொழுது கரிம வேளாண்மையில் உருளை, சர்க்கரை வள்ளி மற்றும் விதைப் புல் ஆகியவை பாராம்பரிய வேளாண்மை விளைச்சலில் பாதியளவே தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.[75]

யூஎன் சுற்றுப்புறச் சூழல் நிரல், 2008வது வருடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் , கரிம முறைமைகள் ஆப்பிரிக்காவில்[26] அதிக மகசூல் தருவதாக முடிவாக உரைத்தது. மேலும், இருநூறுக்கும் மேற்பட்ட பயி்ர் ஒப்புமைகளின் முடிவாக கரிம வேளாண்மையால் தற்போதைய மக்கள் தொகையில் ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு உணவு அளிக்க முடியும் என்றும் வாதிட்டது; கரிம மற்றும் கரிமமல்லாத முறைமைகளி்ன் விளைச்சல்களில் வேறுபாடு மிகவும் குறைவானதாகவே இருந்தது. கரிமம் அல்லாத முறைமைகள், மேம்படுத்தப்பட்ட நிலங்களில் சற்று அதிகமான விளைச்சலைக் கொடுத்தன; கரிம முறைமைகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலங்களில் சற்று அதிகமான விளைச்சலைக் கொடுத்தன.[17]

இந்த பகுப்பாய்வு அலெக்ஸ் அவெரியால் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கரிமம் அல்லாத ஆய்வுகளை கரிம ஆய்வுகளாகக் கூறுவதாகவும், கரிம மகசூல்களை தவறுதலான முறையில் விளக்குவதாகவும், கரிமம் மற்றும் கரிமம் அல்லாத விளைச்சல்களுக்கு இடையில் பொய்யான ஒப்புமைகளைக் கொடுப்பதாகவும், ஒரே தரவைக் கொண்டிருந்த பல ஆய்வுத் தாள்களை மீண்டும் மீண்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தரவு எண்ணிக்கையை அதிகரித்ததாகவும், பாரபட்சமற்ற மற்றும் கடுமையான பல்கலைக் கழக ஆய்வுகளுக்கு சமமாக அவற்றைப் போல் அல்லாத ஆய்வுகளுக்கும் சமநிலைத் தகுதி அளித்ததாகவும் வாதிட்டார்.[76]

எஃப்பிஐஎல் இன்ஸ்டிட்யூட் இயக்குநரான உர்ஸ் நிக்லி, 'கரிம உணவு வெளிப்படுத்தப்பட்டது' அல்லது 'கரிம விவசாயிகளின் போலித்தனம்'[77] போன்ற செய்தித்தாள் கட்டுரைகள் வரத் துவங்கியது கரிம வேளாண்மைக்கு எதிராக உலகளவில் நடைபெறும் ஒரு பிரசாரம் என்றும், அவர்கள் கரிம வேளாண்மைக்கு எதிரான தம் வாதங்களை பெரும்பாலும் ஹட்ஸன் இன்ஸ்டிட்யூட்டைச் சார்ந்த அலெக்ஸ் அவெரியின் 'கரிம வேளாண்மை பற்றிய உண்மை' என்ற புத்தகத்திலிருந்தே எடுத்துக் கொள்வதாகவும் வாதிட்டார்.[78]

1998வது வருடம், ஹட்ஸன் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டென்னிஸ் அவெரி கரிம உணவை உண்ணும்போது ஈ-கோலி என்னும் தொற்று வருவதற்கான ஆபத்து கரிமம் அல்லாத உணவை உட்கொள்ளும்போது வரும் ஆபத்தை விட எண் மடங்கு அதிகமானது என்று நோய்க் கட்டுப்பாட்டு மையம்(Center for Disease Control) (CDC)) என்னும் அமைப்பை ஒரு தோற்றுவாய் ஆதாரமாகக் கொண்டு கோரினார். அந்த அமைப்பை அணுகியபோது, அப்படிப்பட்ட கோரிக்கைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அது உரைத்தது.[78][79]

அவெரியின் தாக்குதல்களைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் இவ்வாறு அபிப்பிராயம் கூறியது: "அமெரிக்க மொத்த உணவு விற்பனையில் கரிம உணவு விற்பனை ஒரு சதவிகிதம்தான் என்ற போதிலும், மிகப் பெரும் அளவில் நிதியுதவி பெறும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம், கரிம உணவின் மேல் தாக்குதல் நடத்துவது, பாராம்பரிய வேளாண்மை அதைக் குறித்து கவலையுறத் துவங்கி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது."[80]

மேற்கோள்கள்

தொகு
  1. Directorate General for Agriculture and Rural Development of European Commission கரிம வேளாண்மை என்றால் என்ன
  2. பால், ஜான் "சீனாவில் கரிமப் புரட்சி", ஜர்னல் ஆஃப் ஆர்கானிக் சிஸ்டம்ஸ் (2007) 2 (1): 1-11.
  3. 3.0 3.1 3.2 Watson CA, Atkinson D, Gosling P, Jackson LR, Rayns FW. (2002). "Managing soil fertility in organic farming systems". Soil Use and Management 18: 239–247. doi:10.1111/j.1475-2743.2002.tb00265.x. http://www3.interscience.wiley.com/journal/119192119/abstract. பார்த்த நாள்: 2009-05-29. [தொடர்பிழந்த இணைப்பு] இலவச முழு-உரையுடன் முன்னரே அச்சேற்றப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 கில்மேன் ஜே. (2008). கரிம வேளாண்மை பற்றிய உண்மை . டிம்பர் பிரஸ்.
  5. 5.0 5.1 உலகுக்கு உணவூட்டுவது எப்படி லாரெண்ட் பெல்சி (ஃபிப்ரவரி 20, 2003 பதிப்பு) தி க்ரிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்
  6. பொருள்சார்ந்த நிஜத் தாள்கள் - ரோடெனோன்.
  7. கரிம தோட்டக்கலையில் அனுமதிக்கப்படும் சில பூச்சிக் கொல்லிகள்.
  8. Scheuerell SJ, Mahaffee WF (2004). "Compost tea as a container medium drench for suppressing seedling damping-off caused by Pythium". Phytopathology 94 (11): 1156–1163. doi:10.1094/PHYTO.2004.94.11.1156. பப்மெட்:18944450. https://archive.org/details/sim_phytopathology_2004-11_94_11/page/1156. 
  9. Brinton W et al. (2004). "Compost teas: Microbial hygiene and quality in relation to method of preparation". Biodynamics: 36–45. http://www.woodsend.org/pdf-files/compost-tea-BD04R.pdf. பார்த்த நாள்: 2009-04-15. 
  10. தக்காளி மற்றும் கனோலாவின் விளைச்சல் மற்றும் நோயெதிர்ப்பின் மீதான தாவர செயலூக்கிகளின் விளைவு.
  11. கன்ட்ரோல் யூனியன் வேர்ல்ட் க்ரூப். ஈஈசி, விதிமுறை எண்.2092/91
  12. யூஎஸ்டிஏ என்ஓபி நிரல் தரங்கள். ஏப்ரல் 2, 2008 அணுகப் பெற்றது.
  13. ஐஎஃப்ஓஏஎம். (2005). தி ஐஓஎஃப்ஏஎம் நார்ம்ஸ்
  14. "தேசிய கரிம நிரல் விதிமுறைகள்". Archived from the original on 2007-12-11. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.
  15. ஸ்ட்ரோக்லிக், ஆர். சியர்ரா,எல். (2007). பாராம்பரிய, கலப்பட மற்றும் "பதிவு விலகிய" கரிம விவசாயிகள்: கலிஃபோர்னியாவில் நுழைவுத் தடைகளும் கனிம உற்பத்தியை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களும். கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் ஸ்டடீஸ்.
  16. டிமிட்ரி,சி.; ஒபர்ஹோல்ட்ஜர்,எல்.(2006) மாறுபட்ட கொள்கைகளினால் தீவிர கிராக்கியை எதிர் நோக்கியுள்ள ஈயூ மற்றும் யூஎஸ் கரிமச் சந்தைகள் பரணிடப்பட்டது 2011-01-10 at the வந்தவழி இயந்திரம்
  17. 17.0 17.1 பாக்ட்லெ, சி. மற்றும் பலர்.'. (2006). கரிம விவசாயமும் உலகளாவிய உணவு வழங்குதலும், விவரித்தல்
  18. ஸ்டேன்ஹில், ஜி. (1990 கரிம விவசாயத்தின் ஒப்புமை உற்பத்தித் திறன். விவசாயம், சூழ்நிலை இயல் மற்றும் சுற்றுப் புறச் சூழல். 30(1-2):1-26
  19. கரிம வேளாண்மை ஆய்வு மையத்தின் தகவல் ஏடு அணுகப் பெற்ற தேதி=2005-12-18
  20. லேங்,எஸ். (2005). ஆய்வில் கண்டுபிடிப்பு: அதே அளவு மக்காச் சோளம் மற்றும் சோயா மொச்சையின் மகசூலைத்தான் கரிம வேளாண்மையும் அளிக்கிறது. ஆனால், குறைவான சக்திதான் தேவைப்படுகிறது மற்றும் பூச்சிக் கொல்லிகள் தேவைப்படுவதில்லை. கார்னெல் யூனிவர்சிடி நியூஸ் சர்வீஸ். ஏப்ரல் 2, 2008 அணுகப் பெற்றது
  21. ஹோல்ட்- கிமென்ஸ், ஈ. (2000)தொடர்தாங்கு திறன் உள்ள வேளாண்மை உத்திகளை மிச் புயல் வெளிப்படுத்துகிறது. பரணிடப்பட்டது 2010-07-30 at the வந்தவழி இயந்திரம். பன்னா.
  22. மேயடர்,பிமற்றும் பலர். (2002). கரிம வேளாண்மையில் மண் வளமும் பல்லுயிரினமும் பரணிடப்பட்டது 2007-02-27 at the வந்தவழி இயந்திரம். அறிவியல் வி296,1694-1697. ஏப்ரல் 2, 2008 அணுகப் பெற்றது.
  23. ஏஆர்எஸ் (2007) உழவற்றதை கரிம வேளாண்மை முந்துகிறதா?
  24. கிர்க்மேன் ஹெச் மற்றும் பலர். (2007). முன்னர் சத்துகள் குறைந்திருந்த ஸ்வீடன் மண்ணில் நீண்ட கால கரிம மற்றும் பாரம்பரிய பயிரிடும் மற்றும் கால் நடை முறைமைகளின் ஒரு ஒப்பீடு அக்ரோனமி ஜர்னல் 99 :960-972. டிஓஐ:10.2134/அக்ரோஞ்ச்2006.0061.
  25. மத்திய மேற்கத்திய அமெரிக்க நாடுகளில் கரிம தானியம் மற்றும் சோயாமொச்சை உற்பத்தியின் பொருளாதாரம் பரணிடப்பட்டது 2010-12-08 at the வந்தவழி இயந்திரம்.
  26. 26.0 26.1 யுஎன்ஈபி-யுஎன்சிடிஏடி. (2008). ஆப்பிரிக்காவில் கரிம விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இலவச முழு-உரை பரணிடப்பட்டது 2009-01-17 at the வந்தவழி இயந்திரம்.
  27. ஹௌடன், டி. 'கரிம வேளாண்மையால் 'ஆப்பிரிக்காவிற்கு உணவளிக்க முடியும்' தி இன்டிபென்டென்ட்.
  28. Chavas JP et al. (2009). "Organic and Conventional Production Systems in the Wisconsin Integrated Cropping Systems Trial: II.". Agronomy Journal 101 (2): 288. doi:10.2134/agronj2008.0055x. http://agron.scijournals.org/cgi/content/abstract/101/2/288. பார்த்த நாள்: 2009-04-07. 
  29. மோரிஸன், ஜேம்ஸ். 2005). ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்துக் குடியரசு ஆகியவற்றில் வேளாண்மைப் பண்ணைகளில் குடியானவர்கள் பற்றிய ஒரு மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு. [இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் அக்ரிகல்சுரல் சஸ்டையினபிலிடி](3):24-43
  30. Marshall, G. (1991). Review of Marketing and Agricultural Economics 59 (3): 283–296. http://ageconsearch.umn.edu/bitstream/12390/1/59030283.pdf. 
  31. Pretty et al., J (2000). "An assessment of the total external costs of UK agriculture". Agricultural Systems 65 (2): 113–136. doi:10.1016/S0308-521X(00)00031-7 இம் மூலத்தில் இருந்து 2009-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090205134009/http://www.essex.ac.uk/bs/staff/pretty/AgSyst%20pdf.pdf. பார்த்த நாள்: 2011-02-20. 
  32. Tegtmeier, E.M.; Duffy, M. (2005). "External Costs of Agricultural Production in the United States". The Earthscan Reader in Sustainable Agriculture. http://www.organicvalley.coop/fileadmin/pdf/ag_costs_IJAS2004.pdf. 
  33. Beckerman, Janna. "Using Organic Fungicides". Planet Natural. Archived from the original on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2009-02-05.
  34. பூச்சிக் கொல்லிகள், விவசாயம் மற்றும் சுற்றுப் புறச் சூழல்(12/12/2005) எழுதியது : கூட்டு அறிவியல் நிபுணர் பிரிவு, தகவல் தொடர்புத் துறை : கூட்டு அறிவியல் நிபுணர் பிரிவு / உருவாக்கிய நாள் : 19/01/2006 / கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நாள் : 18/02/2009
  35. Tamm, L. "Assessment of the Socio-Economic Impact of Late Blight and State of the Art of Management in European Organic Potato Production Systems". பார்க்கப்பட்ட நாள் 2009-02-05. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  36. "Trends in the Potential for Environmental Risk from Pesticide Loss from Farm Fields". USDA Natural Resources Conservation Service. Archived from the original on 2007-07-12. பார்க்கப்பட்ட நாள் 2007-09-29.
  37. 37.0 37.1 37.2 37.3 Magkos F (2003). "Organic food: nutritious food or food for thought? A review of the evidence". International journal of food sciences and nutrition 54 (5): 357–371. doi:10.1080/09637480120092071. பப்மெட்:12907407. https://archive.org/details/sim_international-journal-of-food-sciences-and-nutrition_2003-09_54_5/page/357. 
  38. 38.0 38.1 38.2 Magkos F (2006). "Organic Food: Buying More Safety or Just Peace of Mind? A Critical Review of the Literature". Critical reviews in food science and nutrition 46 (1): 23–56. doi:10.1080/10408690490911846. பப்மெட்:16403682. 
  39. Curl, C. L.; et al. (2003). "Organophosphorous Pesticide Exposure of Urban and Suburban Preschool Children with Organic and Conventional Diets" (PDF). Environmental Health Perspectives, 111(3). Archived from study the original on 2010-04-18. பார்க்கப்பட்ட நாள் 2007-11-03. {{cite web}}: Check |url= value (help); Explicit use of et al. in: |author= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  40. Lu, Chensheng; et al. (2006). "Organic Diets Significantly Lower Children's Exposure to Organophosphorus Pesticides" (PDF). Environmental Health Perspectives 114(2). Archived from the original (PDF) on 2006-05-14. பார்க்கப்பட்ட நாள் 2007-11-04. {{cite web}}: Explicit use of et al. in: |author= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  41. கும்மலிங் மற்றும் பலர், "நெதர்லாண்ட்ஸில் கரிம உணவு உண்பதும் முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வாமை நோய் வருவதற்கான ஆபத்தும்", பிரித்தானிய ஜர்னல் ஆஃப் ந்யூட்ரிஷன் (2007)
  42. எஃப்ஐபிஎல் உணவுப் பாதுகாப்பு: கரிமப் பொருட்களின் தெளிவான பயன்கள் பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம்
  43. [1]
  44. சத்து: கரிம விளைச்சலை வாங்குவதில் மற்றொரு பலன் தென்படுகிறது.
  45. கரிம மற்றும் பாராம்பரிய முறையில் பயிரிடப்பட்ட கிவி பழங்களின் கட்டமைப்பு மற்றும் அறுவடைக்குப் பிறகான செயல்திறன் - ஒரு ஒப்புமை ஆய்வு[தொடர்பிழந்த இணைப்பு], சயின்ஸ்டெய்லி ஆர்ட்டிகில்
  46. ஈஜேஎஃப். (2007). பருத்தியில் உள்ள பயங்கரமான வேதிப் பொருட்கள். லண்டன் யூகேயின் பெஸ்டிசைட் ஆக்ஷன் நெட்வொர்க் யூகேயுடன் இணைந்த என்விரன்மெண்டல் ஜஸ்டிஸ் பௌண்டேஷன். ஐஎஸ்பிஎன் எண்.1-904523-10-2.
  47. Luis Herrera-Estrella, Ariel Alvarez-Morales (April 2001). "Genetically modified crops: hope for developing countries?". EMBO Reports (The EMBO journal) 2: 256–258. doi:10.1093/embo-reports/kve075. http://www.nature.com/embor/journal/v2/n4/full/embor436.html. 
  48. Pamela Ronald, Raoul Admachak (April 2008). Tomorrow's Table: Organic Farming, Genetics and the Future of Food.. Oxford University Press. http://www.amazon.com/Tomorrows-Table-Organic-Farming-Genetics/dp/0195301757. 
  49. சியாட்டில் பிஐ (2008). மேல் மண் குறைதல்: இது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது
  50. "No Shortcuts in Checking Soil Health". USDA ARS. பார்க்கப்பட்ட நாள் 2007-10-02.
  51. லாசால், டிம் ஜே, மற்றும் பால் ஹெப்பர்லி. கரிம வேளாண்மைக்குப் புத்துயிர்: உலக வெப்பமயமாதலுக்கு ஒரு தீர்வு 2008. ரொடேல் இன்ஸ்டிட்யூட். 14 ஃபிப். 2009 <ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.ரோடெல்[தொடர்பிழந்த இணைப்பு] இன்ஸ்டிட்யூட்.ஓஆர்ஜி//_ரிசர்ச்_பேப்பர்-07_30_08.பிடிஎஃப்>. மற்றும் ஹெப்பர்லி, பால், ஜெஃப் மோயர் மற்றும் டேவ் வில்ஸன். “உழத் தேவையற்ற கரிம வேளாண்மையில் முன்னேற்றங்கள்.” ஏக்கர்ஸ் யூஎஸ்ஏ: தி வாய்ஸ் ஆஃப் ஈகோ-அக்ரிகல்ச்சர் செப்ட். 2008: 16-19. மற்றும் ராபர்ட்ஸ், பால். “உணவின் இறுதி: உலகார்ந்த ஒரு நெருக்கடி பற்றிய புலனாய்வு.” ஏக்கர்ஸ் யூஎஸ்ஏவுடன் பேட்டி: தி வாய்ஸ் ஆஃப் ஈகோ-அக்ரிகல்ச்சர், அக்ட்.2008: 56-63.
  52. மெலெகா (2008). பருவ மாற்றத்திற்கு கரிம பதில்.
  53. New Zealand's Ministry of Agriculture and Forestry. "A Review of the Environmental/Public Good Costs and Benefits of Organic Farming and an Assessment of How Far These Can be Incorporated into Marketable Benefits". Archived from the original on 2008-10-15. பார்க்கப்பட்ட நாள் 2008-04-20.
  54. லாசால்,டி மற்றும் பி.ஹெப்பர்லி(2008). கரிம வேளாண்மைக்குப் புத்துயிர்: உலக வெப்பமயமாதலுக்கு ஒரு தீர்வு. ரோடெல் இன்ஸ்டிட்யூட்.
  55. "Forecasting Agriculturally Driven Global Climate Change". Science. 2006-03-21. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  56. "Reduced nitrate leaching and enhanced dentrifier activity and efficiency in organically fertilized soils". Proceedings of the National Academy of Sciences. 2006-03-21. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  57. Yoon, Carol Kaesuk (January 20, 1998). "A "Dead Zone" Grows in the Gulf of Mexico". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2007-11-04.
  58. Environmental impact and macro-economic feasibility of organic agriculture in the Danube River Basin. Proceedings of the 13th International IFOAM Conference, p. 160-163. 2000. பார்க்கப்பட்ட நாள் 2007-11-04.
  59. Beman, M. (2005). "Agricultural runoff fuels large phytoplankton blooms in vulnerable areas of the ocean" (PDF). Nature 25(2). பார்க்கப்பட்ட நாள் 2007-11-04. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  60. Hole DG et al. (2005). "Does organic farming benefit biodiversity?". Biological Conservation 122 (1): 113–130. doi:10.1016/j.biocon.2004.07.018 இம் மூலத்தில் இருந்து 2009-03-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090326135225/http://www.botanischergarten.ch/Organic/Hole-Organic-biodiversity-2004.pdf. பார்த்த நாள்: 2011-02-20. 
  61. 61.0 61.1 ஹொலெ மற்றும் பலர். 2005
  62. 62.0 62.1 கேப்ரியல் மற்றும் சர்க்ண்டக் 2006
  63. பெங்க்ட்ஸன் மற்றும் வெய்புல் 2005
  64. வேன் எல்ஸன் 2000
  65. 65.0 65.1 ஃப்ளைßபாக் மற்றும் பலர். 2006
  66. பெர்ரிங்கஸ் மற்றும் பலர். 2006
  67. இங்க்ராம் 2007
  68. சிஎன்என். கரிமப் பொருட்களில் ஆர்வம் குறைவதாக நுகர்வோர் கருத்தாய்வுகள் காட்டுகின்றன., டபிள்யூஎஸ்எல் சர்வே, தி ஹார்ட்மேன் க்ரூப் ஆர்கானிக் மார்க்கெட்பிள்ஸ் ரிபோர்ட்ஸ் பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம்.
  69. ஹொவார்ட், ஃபில். (2007) கரிம தொழில் வரைகலை பரணிடப்பட்டது 2010-12-24 at the வந்தவழி இயந்திரம்
  70. கார்ப் வாச். (2004). கரிமத் தொடுவானில் மேகங்கள் பரணிடப்பட்டது 2009-12-05 at the வந்தவழி இயந்திரம்
  71. விவசாயிகளின் சந்தை வளர்ச்சி 1994-2006
  72. "ICapacity Building Study 3: Organic Agriculture and Food Security in East Africa" (PDF). University of Essex. Archived from the original (PDF) on 2007-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-12-18.
  73. Andrew Leonard. "Save the rain forest — boycott organic?". How The World Works. Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2007-10-10.
  74. Anthony Trewavas (2001). "Urban myths of organic farming". Nature 410: 409-410. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  75. தி பிச்செல் கமிட்டி பரணிடப்பட்டது 2014-01-19 at the வந்தவழி இயந்திரம்.
  76. Avery, Alex (2007). "'Organic abundance' report: fatally flawed — Commentary". Renewable Agriculture and Food Systems (Cambridge: Cambridge University Press) 22 (4): 321–323. http://journals.cambridge.org/action/displayJournal?jid=RAF. 
  77. Bob Goldberg. "The Hypocrisy of Organic Farmers". AgBioWorld. பார்க்கப்பட்ட நாள் 2007-10-10.
  78. 78.0 78.1 "Wer hat die laengste Biochionase" (PDF). Bio-aktuell. Archived from the original (PDF) on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.
  79. "Organic Produce Production and Food Safety". UC Davis Cooperative Extension. Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.
  80. Marian Burros. "EATING WELL; Anti-Organic, And Flawed". பார்க்கப்பட்ட நாள் 2007-12-14.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_வேளாண்மை&oldid=3924645" இலிருந்து மீள்விக்கப்பட்டது