ரஃபி அகமது கித்வாய்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
(இரபி அகமது கித்வாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரஃபி அகமது கித்வாய் (Rafi Ahmed Kidwai)1884 (பிறப்பு:பிப்ரவரி 18 - இறப்பு 1954 அக்டோபர் 24) ஒரு அரசியல்வாதி, ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் ஒரு சோசலிசவாதியுமாவார். சில சமயங்களில் இவர் ஒரு இஸ்லாமிய சோசலிசவாதி என்று வர்ணிக்கப்பட்டார். இவர் வட இந்தியாவில் உள்ள ஐக்கிய மாகாணத்திலிருந்த பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். (இப்போதைய உத்தரப் பிரதேசம்).

ரஃபி அகமது கித்வாய்
இந்திய அஞ்சல் முத்திரையில் கித்வாய், 1969
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1884 பிப்ரவரி 18
பாராபங்கி மாவட்டம், உத்தரப் பிரதேசம், வட மேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1954 அக்டோபர் 24 (வயது 60)
தில்லி, இந்தியா
கல்விஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ரஃபி அகமது பாராபங்கி மாவட்டத்தில் (இப்போது உத்தரபிரதேசம் ) மசௌலி என்ற கிராமத்தில் பிறந்தார். இரபிக்கு கம்யூனிச ஆர்வலரும், மாநிலங்களவை உறுப்பினருமான எழுத்தாளர் அனிசு கித்வாயை மணந்த சாபி உட்பட நான்கு இளைய சகோதரர்கள் இருந்தனர்.

சுதந்திரத்திற்கு முந்தைய அரசியல் தொகு

அலிகரில் உள்ள முகம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியில் படித்த பிறகு, கித்வாய் கிலாபத் இயக்கம் மூலம் அரசியலில் நுழைந்தார். 1926 தேர்தலில், இவர் அயோத்தி நகரிலிருந்து சுயாட்சிக் கட்சி வேட்பாளராக மத்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் சுயாட்சிக் கட்சியின் தலைமை அதிகாரி ஆனார். கித்வாயின் அரசியல் புத்திசாலித்தனம் சர்ச்சைக்குரிய விஷயங்களில் கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட உதவியது. 1929 இல், கித்வாய் சட்டமன்றத்தில் சுயாட்சிக் கட்சியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மோதிலால் நேரு மீது இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இந்திய தேசிய காங்கிரசு 1929 திசம்பர் 19 அன்று பூரண சுயாட்சி கோரிக்கையை விடுத்தது. மகாத்மா காந்தி 1930 சனவரியில் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். 1940 சனவரியில், காங்கிரசு செயற்குழுவின் பூரண சுயாட்சித் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும்ம் விதமாக கித்வாய் மத்திய சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, சட்ட மீறல் இயக்கத்தில் ஈடுபட்டார் .

இந்திய அரசு சட்டம் 1935 நிறைவேற்றப்பட்ட பின்னர், இவர் இந்திய தேசிய காங்கிரசில் ஒரு பதவியை வகித்தார்.

1937ஆம் ஆண்டில், மாகாண சுயாட்சி திட்டத்தின் கீழ் ஐக்கிய மாகாணங்களான ஆக்ரா மற்றும் அயோத்தியில் (உத்தரப் பிரதேசம்) கோவிந்த் வல்லப் பந்தின் அமைச்சரவையில் கித்வாய் வருவாய் மற்றும் சிறைகளுக்கான அமைச்சரானார். உத்தரப் பிரதேசம் இவரது தலைமையின் கீழ், ஜமீந்தாரி முறையை ஒழித்த முதல் மாகாணமாக ஆனது. 1946 ஏப்ரலில் இவர் உத்தரப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சரானார்.

சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியல் தொகு

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் முக்கிய கூட்டாளியாக கித்வாய் இருந்தார். 1947 இல் பிரிட்டிசு அரசிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கித்வாய் இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு அமைச்சரானார். (கித்வாய் மற்றும் அபுல் கலாம் ஆசாத் ஆகிய இருவரும் நேருவின் மத்திய அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லிம்கள் ஆவர். )

1952 முதல் பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, கித்வாய் பக்ரைச் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டில் உணவு பற்றாக்குறை இருந்த நேரத்தில் உணவு மற்றும் வேளாண்மைத் துறையை நேரு கித்வாயிடம் ஒப்படைத்தார்.

இறப்பு தொகு

கித்வாய் 1954 அக்டோபர் 24 அன்று தில்லியில் இறந்தார். ஒரு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும்போது ஆஸ்துமா தாக்குதலால அவதுற்றவந்த இவருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது . இவரது சொந்த ஊரில் முகலாய பாணியிலான கல்லறையால் மூடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.

வரலாற்றாசிரியர் பால் பிராசின் கூற்றுப்படி, "காங்கிரசு இயக்கங்களுக்கும் தேர்தல்களுக்கும் பெருமளவில்நிதி திரட்டி அனைவருக்கும் விநியோகித்த இவர் கடனில் இறந்தார். தனது சொந்த கிராமத்தில் பாழடைந்த ஒரு வீட்டை மட்டுமே விட்டுவிட்டுச் சென்றார்."

நினைவு தொகு

விவசாய துறையில் இந்திய ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிப்பதற்காக 1956 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் இரபி அகமது கித்வாய் விருது உருவாக்கப்பட்டது. இரண்டாண்டுக்கு ஒருமுறை விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பதக்கங்கள் மற்றும் குறிப்புகள் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. [1]

2011 நவம்பரில், காசியாபாத்தில் உள்ள அஞ்சல் துறை பணியாளர்கள் கல்லூரிக்கு இரபி அகமது கித்வாய் தேசிய அஞ்சல் அகாதமி என்று பெயரிடப்பட்டது. [2] கொல்கத்தாவில் இவரது பெயரில் ஒரு தெருவும், [3] மும்பை, இந்திரா நகர், லக்னோ மற்றும் புது தில்லி, கிருசி பவன், கார்தோய் மாவட்டத்தில் உள்ள கல்லூரி போன்றவைகளுக்கும் இவரது பெயரிடப்பட்டது.  

இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு அறையில் கித்வாயின் உருவப்படம் உள்ளது. [4]

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு இவரது நினைவாக கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் எனப் பெயரிடப்பட்டது. வளாக நிலத்தின் 20 ஏக்கர் மற்றும் கதிரியக்க சிகிச்சை இயந்திரத்திற்கு ரூ .100,000 நன்கொடை அளிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் 

குறிப்புகள் தொகு

  1. "Merits & Awards". icar.org.in. Archived from the original on 3 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-03.
  2. A. Kumaraswamy (31 October 2011) rename of the Postal Staff College India. Ministry of Communications & IT, Government of India.
  3. "Kolkata Yellow Pages". பார்க்கப்பட்ட நாள் 13 December 2011.
  4. Rafi Ahmed Kidwai. rajyasabha.nic.in.

மேலும் படிக்க தொகு

  • M. Bassien, ed., Who's who in legislature, 1 (1953)
  • M. Weiner, Party politics in India: the development of a multi-party system (1957)
  • P. N. Chopra, Rafi Ahmad Kidwai: his life and work (1960)
  • S. Sunder and S. Shyam, Political life of Pandit Govind Ballabh Pant, 1: 1887–1945 (1960)
  • Sampurnanand, Memories and reflections (1962)
  • A. P. Jain, Rafi Ahmad Kidwai: a memoir of his life and times (1965)
  • P. R. Brass, Factional politics in an Indian state: the Congress Party in Uttar Pradesh (1966)
  • S. Gopal, Jawaharlal Nehru: a biography, 2: 1947–1956 (1979)
  • V. Menon, From movement to government: the Congress in the United Provinces, 1937–42 (2003)
  • M. Hasan, From pluralism to separatism: qasbas in colonial Awadh (2004)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rafi Ahmed Kidwai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஃபி_அகமது_கித்வாய்&oldid=3493089" இலிருந்து மீள்விக்கப்பட்டது