இரமேசு நாராயணன்

பண்டிட் இரமேசு நாராயண் (Ramesh Narayan) (பிறப்பு: நவம்பர் 3, 1959) ஒரு இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகரும், இசையமைப்பாளரும், இசைத் தயாரிப்பாளருமாவார். இவர் முக்கியமாக மலையாளத் திரையுலகில் பணியாற்றுகிறார். [1] இந்துஸ்தானி இசையின் மேவதி கரனாவைச் சேர்ந்தவர். [2] இவர் கருநாடக இசையில் தனது ஆரம்ப பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் மேவதி கரானாவின் புகழ்பெற்ற பண்டிட் ஜஸ்ராஜின் [3] இன் கீழ் இந்துஸ்தானி பாணியில் தேர்ச்சி பெற்றார்.

இரமேசு நாராயணன்
2015இல் இரமேசு நாராயணன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு3 நவம்பர் 1959 (1959-11-03) (அகவை 65)
கூத்துப்பறம்பு, கண்ணூர், கேரளம் இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்1972–தற்போது வரை
இணையதளம்rameshnarayan.com
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்திரைப்பட இசை, இந்திய பாரம்பரிய இசை, உலக இசை
இசைக்கருவி(கள்)குரலிசை, சித்தார், கித்தார், ஆர்மோனியம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கேரளாவின் கண்ணூரில் உள்ள கூத்துப்பறம்பு என்ற ஊரில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பெற்றோரிடமிருந்து இசையில் ஆரம்பகால பாடங்களைக் கொண்டிருந்தார். இவரது தந்தை நாராயண் பாகவதர் அந்த நாட்களில் நன்கு அறியப்பட்ட இசைக்கலைஞராகவும், இவரது தாயார் நாராயணி அம்மா சுவரக் கலைஞராகவும் இருந்தார். சிறுவயதில் குடும்பத்தில் இருந்த இசைச் சூழல் இவருக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. கருநாடக இசையில் தனது பயிற்சியை இருபது வயது வரை தொடர்ந்தார். [4]

தொழில் வாழ்க்கை

தொகு

ஆரம்பத்தில் இந்திய பாரம்பரிய இசை இராகங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தி, மலையாளம், தமிழில் ஆவணப்படங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றுக்கு இசையமைத்து வந்தார். தேசிய ஒருங்கிணைப்புக்காக 1996ஆம் ஆண்டில் சௌர் மண்டல் மெய்ன் டிம் டிம் [5] என்ற பிரபலமான பாடலை இயற்றி பாடினார். இதை தில்லி, லோக்சேவா சஞ்சார் பரிசத்திற்காக ஞானபீட விருது பெற்ற எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கியிருந்தார். இவரது திரைப்பட இசை வாழ்க்கை 1990களின் முற்பகுதியில் மலையாளத் திரைப்படமான "மாக்ரிப்" உடன் தொடங்கியது. பின்னர், இசையமைப்பாளராக இவரது வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து வந்தது. கர்ஷோம், மேகமல்கார், சைரா, மக்கல்கு, இராத்திரி மழா, பரதேசி (2007), மாஞ்சாடிகுரு ஆதாமிண்டெ மகன் அபூ, வீட்டிலெக்குல்ல வழி, மகரமஞ்சு, எடவப்பத்தி, என்னு நின்டே மொய்தீன், சூரியகாந்தா போன்ற ஒரு சில படங்கள் குறிப்பிடத்தகவையாகும்.

விருதுகள்

தொகு

இவரது விருதுகளில் ஒரு தேசிய திரைப்பட விருது, நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள், இரண்டு கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள், நான்கு கேரள மாநில தொலைக்காட்சி விருதுகள், இரண்டு கேரள மாநில தொலைக்காட்சி விமர்சகர்கள் விருது, இரண்டு மாட்ரிட் சர்வதேச திரைப்பட விழா இமேஜின் இந்தியா 2011 சர்வதேச விருது ஆகியவை அடங்கும். 2007ஆம் ஆண்டில், கேரளாவில் இந்துஸ்தானி இசையை பிரபலப்படுத்தியதற்காக சங்கீத நாடக அகாதமி விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமிடமிருந்து பெற்றுள்ளார்.

புனேவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் 100 ஆண்டுகால இந்தியத் திரையைக் கொண்டாடியதன் ஒரு பகுதியாக 36 மணிநேர குரல் ஒலிப்பதிவு செய்ததன் மூலம் உலக கவனத்தை ஈர்த்தார். மேலும் 24 மணிநேர இராக சுழற்சியை நிறைவு செய்ததற்காக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் 2013 இல் இடம் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramesh Narayan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேசு_நாராயணன்&oldid=3593368" இலிருந்து மீள்விக்கப்பட்டது