இரயிசு கான்
உஸ்தாத் இரயிசு கான் (Rais Khan) (25 நவம்பர் 1939 – 6 மே 2017) இவர் ஒரு பாக்கிதானின் சித்தார் கலைஞராவாவர். இவர் 'எல்லா காலத்திலும் மிகச் சிறந்த சித்தார் கலைஞர்களில் ஒருவராக' கருதப்பட்டார். இவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை தொடர்ந்து நிகழ்த்தினார்.[1] இவர் 1986இல் இந்தியாவிலிருந்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். 2017 ஆம் ஆண்டில், கான் பாக்கித்தானின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான சீதாரா-இ-இம்தியா விருதினை பெற்றார் .
உஸ்தாத் இரயிசு கான் | |
---|---|
2013இல் ஒரு நிகழ்ச்சியில் இரயிசு கான் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | இந்தோர், மத்தியப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா | 25 நவம்பர் 1939
இறப்பு | 6 மே 2017 கராச்சி, பாக்கித்தான் | (அகவை 77)
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | கருவியிசை |
இசைக்கருவி(கள்) | சித்தார் |
இசைத்துறையில் | 1948 – 2017 |
இரயிசு கான் | |
---|---|
தேதி | 2005 |
நாடு | பாக்கித்தான் |
வழங்குபவர் | பெர்வேஸ் முஷாரஃப், பாக்கித்தானின் அதிபர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகான் நவம்பர் 25, 1939 அன்று பிரித்தானிய இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்து,[2] பின்னர், மும்பையில் வளர்ந்தார். இவரது பயிற்சி மிகச் சிறிய வயதிலேயே, ஒரு சிறிய தேங்காய் ஓடு சித்தாரில் தொடங்கியது.[3] 1986 ஆம் ஆண்டில் பாக்கித்தான் பாடகர் பில்கீசு கானும் என்பவரை தனது நான்காவது மனைவியாக்கிக் கொண்டு பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இவர்களுக்கு இரு மகன்களும்,[4] நான்கு மகன்களும் உள்ளனர்.[5][6]
இவரது தாயார் ஒரு பாடகியாவார். இவரது தந்தை ஒரு வீணைக் கலைஞராவார்.[4][7]
இவர் ஒரு பாடகராகவும் இருந்தார், மேலும் 1978 ஆம் ஆண்டில் பிபிசி இலண்டனுக்காக 'குங்ரூ டூட் கெய்' என்ற பாடலை சித்தாருடன் ஒரு கருவியாகப் பதிவு செய்த முதல் சித்தார் கலைஞராவார்.[8] இவரது மாமா விலாயத் கானைப் போலவே, அவர் அடிக்கடி சித்தாருடன் பாடல்களைப் பாடினார். இவரும், செனாய் கலைஞர் பிசுமில்லா கானும் நவம்பர் 23, 2001 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயிலில் ஒரு நிகழ்ச்சியின வழங்கினார்கள். .[9]
மரணம்
தொகுநீண்டகால நோய்க்குப் பிறகு, இவர் 6 மே 2017 அன்று கராச்சியில் தனது 77 வயதில் இறந்தார்.[10][11]
குறிப்புகள்
தொகு- ↑ "Eid ul Fitr Schedule 2016" (PDF). Pakistan Television Corporation. Archived from the original (PDF) on 27 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sitar legend Ustad Raees Khan passes away". Samaa TV. 7 May 2017. https://www.samaa.tv/entertainment/2017/05/sitar-legend-ustad-raees-khan-passes-away/.
- ↑ "'Today, music is about cloning' (interview with Rais Khan)". தி இந்து (newspaper). 29 October 2005 இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927222816/http://www.hindu.com/thehindu/mp/2005/10/29/stories/2005102900260200.htm.
- ↑ 4.0 4.1 "Profile: The string maestro". Dawn (newspaper). November 18, 2012. https://www.dawn.com/news/764879.
- ↑ Salman (7 May 2017). "OBITUARY: The sitar has fallen silent". Dawn (newspaper). https://www.dawn.com/news/1331622.
- ↑ Lodhi (7 May 2017). "Renowned sitarist Ustad Raees Khan passes away". தி எக்சுபிரசு திரிப்யூன் (newspaper). https://tribune.com.pk/story/1403595/renown-sitarist-ustad-raees-khan-passes-away/.
- ↑ Manuel, Peter Lamarche (1989). Ṭhumrī in Historical and Stylistic Perspectives. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120806733. பார்க்கப்பட்ட நாள் 7 May 2017.
- ↑ "Pakistani film database 1969". cineplot.com. பார்க்கப்பட்ட நாள் 31 December 2018.
- ↑ "A superb recital by sitar maestro". The News International (newspaper). 30 March 2009 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180612163324/https://www.thenews.com.pk/archive/print/168566-a-superb-recital-by-sitar-maestro.
- ↑ "Pakistani sitar maestro Ustad Raees Khan dead at 77". Firstpost. Indo-Asian News Service. 7 May 2017. http://www.firstpost.com/entertainment/pakistani-sitar-maestro-ustad-raees-khan-dead-at-77-3429208.html.
- ↑ "Sitar maestro Ustad Raees Khan passes away". Geo News (TV channel). May 7, 2017. https://www.geo.tv/latest/140814-Sitar-maestro-Ustad-Raees-Khan-passes-away.