இரவு உணவு
இரவு உணவு அல்லது விருந்து (ஆங்கிலம்:Dinner) என்பது பொதுவாக இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படும் உணவைக் குறிக்கும். மேற்கு நாடுகளில் வரலாற்றுப்படி டின்னர் என்பது பகலிலோ அல்லது மாலைப்பொழுதிலோ எடுத்துக் கொள்ளும் உணவையும் குறித்துள்ளது.[1] இன்னும் சில மேற்கு நாடுகளில் சிறப்பான பகல் உணவையோ மாலை உணவையோ டின்னர் என்றே அழைக்கிறார்கள்[1] . டின்னர் என்பது ஒவ்வொரு நாடுகளுக்கேற்ப பழக்கவழக்கங்களுக்கேற்ப அளவும், முறைகளும் மாறுகிறது[2]. மருத்துவர்களின் அலோசனைப்படி இரவு உணவு என்பது எளிதில் செரிக்கக்கூடிய வகையிலும் நல்ல தூக்கம் வரும் வகையிலும் இருக்கவேண்டுமாம். சாக்லெட், காரமான உணவு, காபி, மதுபானம், கொழுப்புள்ள உணவுகள், சோடா, சிவப்பிறைச்சி போன்றவற்றைத் தவிர்க்கப் பரிந்துரை செய்கிறார்கள்.[3]
வரலாறு
தொகுவரலாற்றில் டின்னர் என்பது ஐரோப்பாவில் பகல் உணவிற்கு இரண்டல்லது மூன்று மணி நேரம் தாமதமான உணவிற்குப் பெயராக பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில், முதலாம் பிரஞ்சு பேரரசு காலம்வரை இருந்துள்ளது.[4] 1700களில் மாலை உணவிற்கே டின்னர் என்று பெயரிட்டு வழங்கினர்.[1] தற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தில் மாலை உணவே டின்னர் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. உணவு வேளையை காலை உணவு, மதிய உணவு, தேநீர், இரவு உணவு எனப் பிரிக்கின்றனர்.[1][5] மத்திய ஆங்கிலேயே பகுதிகள், வட இங்கிலாந்து, மத்திய ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் பகல் உணவையே டின்னர் என்றழைக்கின்றனர். இரவில் எடுத்துக் கொள்ளும் உணவு சப்பர் என்றழைக்கின்றனர்[5] ஒரு ஆய்வின்படி ஐக்கிய ராஜ்ஜியத்தில் மாலை 7:47 மணியே சராசரி இரவு உணவு நேரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[6] அமெரிக்க போன்ற நாடுகளில் சப்பர் என்றாலும் டின்னர் என்றாலும் மாலை உணவாகவே குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்
பொதுவாக ஒரு நாளின் கடைசி உணவாக இருந்தாலும் கிருஸ்துமஸ் விருந்து, நன்றி தெரிவித்தல் நாள் விருந்து, ஞாயிறு அல்லது விடுமுறைநாள் விருந்து போன்றவை சிறப்பு விருந்துகளாக அழைக்கப்படுகின்றன.
உணவு முறை
தொகுஇரவு விருந்துகளில் மக்கள் பகட்டாக உடையணிந்து விரும்பிய உணவுப் பதார்த்தங்களை உருசிபார்த்தவாறே கூடிப்பேசி மகிழ்வார்கள். இந்த வகை விருந்தில் மூன்று வகைப் பதார்த்தங்களுள்ளன. ஆப்டைசர் எனப்படும் சூப்போ, அல்லது பழரசமோ கொண்ட இன்சுவை நீர் முதலிலும், பிரதான பதார்த்தம் அதன் பின்னரும், இறுதியில் டிசர்ட் எனப்படும் இனிப்புவகையுடன் விருந்து நிறைவுபெறும்.
ரோமப் பேரரசு
தொகுபண்டைய ரோமப் பேரரசில் இரவு விருந்து என்பது முக்கிய நிகழ்வாக நடந்து, அரசக்குடும்பமும், அரசவை உறுப்பினரும் சந்தித்து உறவாடும் பொழுதாகயிருந்தது.[7] ரோம மக்கள் பெரும்பாலும் லிகுமென் எனப்படும் ஒருவகை மீன் குருமாவை பெரும்பாலும் இரவு உணவில் பரிமாறுவார்கள்.[8]
இங்கிலாந்து
தொகுஇலண்டன் பெருநகரங்களில் நடக்கும் இரவு விருந்திற்கு அச்சிட்ட அழைப்பிதழ்களுடன் முறையான கொண்டாட்டமாக நடக்கிறது. அப்போது பலவகையான பதார்த்தங்களும் பல்வேறு உணவு முறைகளும் பரிமாறப்பட்டு, சிலவேளையில் பாடலும், கவிதைகள் மொழிதலும் நிகழும்.[9]
இந்தியாவில்
தொகுசைவ, அசைவ வகையான குழம்புகளும், பலவகையான பிரியாணிகளும், கோதுமை அல்லது மைதா ரொட்டிகளும் இரவு உணவாகப் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. செட்டிநாடு மீன் பொரியல், கலுட்டி கெபாப், தம் ஆலூ லக்நவி, கீமா பிரியாணி, தம் பன்னீர் காலி மிர்ச், சாகி முட்டை குழம்பு, மலபார் இறால் குழம்பு, தால் மக்கனி, மக்காலி கொப்தா போன்றவை மிகவும் விரும்பக்கூடிய இரவு உணவாகக் கூறப்படுகிறது.[10] தமிழகத்தில் இரவு உணவாக இட்லி, தோசை வகைகள், புரோட்டா, சப்பாத்தி போன்றவை பிரதானமாக உட்கொள்ளப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 McMillan S (2001). "What Time is Dinner?". History Magazine. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017.
- ↑ Olver, Lynne. "Meal times". Lynne Olver. பார்க்கப்பட்ட நாள் 2 April 2014.
- ↑ "இரவில் இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்!". தினமணி. 29 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2018.
- ↑ Quote in Ian Kelly, Cooking for Kings: the life of Antonin Carême the first celebrity chef, 2003:78. For guests of Talleyrand at the Château de Valençay, dinner under Carême was even later.
- ↑ 5.0 5.1 "Tea with Grayson Perry. Or is it dinner, or supper?". The Guardian (London). August 2012. https://www.theguardian.com/lifeandstyle/2012/aug/03/tea-with-grayson-perry-supper-dinner. பார்த்த நாள்: 2013-08-15.
- ↑ "Average dinner time is now 7:47pm as work hours eat into our meal times". Evening Standard. 3 October 2007. https://www.standard.co.uk/news/average-dinner-time-is-now-747pm-as-work-hours-eat-into-our-meal-times-6648248.html.
- ↑ Edwards 2007, ப. 161–162.
- ↑ Oksman, Olga (2015-08-26). "Garum sauce: ancient Rome's 'ketchup' becomes a modern-day secret ingredient". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-22.
- ↑ Draznin 2001, ப. 134-136.
- ↑ "10 Best Indian Dinner Recipes". NDTV (in ஆங்கிலம்). 2018-04-30. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
நூற்பட்டியல்
தொகு- Draznin, Y. (2001). Victorian London's Middle-class Housewife: What She Did All Day. ABC-Clio ebook. Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-31399-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Edwards, C. (2007). Death in Ancient Rome. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-11208-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - மேக்மில்லன், Sherrie (2001). "What time is dinner?". History Magazine. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2015.
மேலும் படிக்க
தொகு- Nunn, J.J. (1872). Mrs. Montague Jones' dinner party: or, Reminiscences of Cheltenham life and manners.
- Inness, S.A. (2001). Dinner Roles: American Women and Culinary Culture. NONE Series. University of Iowa Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58729-332-0.
- Meiselman, H.L. (2009). Meals in Science and Practice: Interdisciplinary Research and Business Applications. Woodhead Publishing Series in Food Science, Technology and Nutrition. Elsevier Science. pp. 97–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84569-571-2.