மதிய உணவு (ஆங்கிலத்தில் Lunch) என்பது பகல் பொழுதில் எடுத்துக் கொள்ளப்படும் உணவாகும்.[1] ஆங்கிலத்தில் லஞ்ச் என்பது லஞ்சோன் என்ற சொல்லிருந்து உருவானதாகும். காலை உணவிற்குப் பிறகு நடுப்பகல் வேளையில் எடுத்துக்கொள்ளப்படுவதால் ஒரு நாளின் இரண்டாவது உணவாகிறது. மதிய உணவின் நேரமும், அளவும், வகைகளும் உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கேற்ப மாறுகிறது. தொடக்கத்தில் அவ்வப்போது எடுத்துவந்த நொறுக்குத்தீனி 20-ஆம் நூற்றாண்டு வாக்கில் முழுமையான உணவாக மாறியது. மதிய உணவு நடுப்பகல் வேளையில் எடுத்துக் கொள்வதால் பணியிடங்களில் ஊழியளர்களுக்கு உணவு இடைவேளை வழங்கப்படுகிறது. இந்த இடைவேளை ஒவ்வொரு நாட்டு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப மாறுகிறது.

உலகம் முழுதும் தொகு

ஆசியா தொகு

தொழிற்வளர்ச்சிக்குப் பின்னர் சீனாவிலும் தற்போதைய மதிய உணவுப் பழக்கம் தொடங்கியது. அரிசிச் சோறு, நூடுல்ஸ் மற்றும் சூடான உணவுக் கலவையை உணவகம் அல்லது இல்லத்தில் தயாரித்து உண்கிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் வங்காளம் பகுதிகளில் எழு வகையான பதார்த்தமுடன் குழம்பு வகையான வங்க சாப்பாடு மதிய உணவாகிறது. வங்கப் பகுதி என்பது தற்கால வங்காளதேசமும், மேற்கு வங்காளமும் ஆகும். தேங்காய் பாலுடன் சமைத்த காய்கறிகள் கொண்ட சுக்தோ என்பது முதல் பதார்த்தமாமும். பின்னர் அரிசி, துவரைப் பருப்பு மற்றும் காய்கறிகள் இரண்டாம் பதார்த்தமாகிறது. மீன் குழம்புடன் அரிசிச் சோறு மூன்றாம் பதார்த்தமாகும். அடுத்து அரிசி மற்றும் கறிக்குழம்பு (பொதுவாக வெள்ளாடு அல்லது கோழிக்கறி) நான்காவது பதார்த்தமாகும். ஐந்தாவதாக இனிப்புகளான இரசகுல்லா, பன்டுயா, ராஜ்போக், சந்தீஷ் போன்றவையாகும். ஆறாவதாகப் பாயாசம் அல்லது இனிப்புத் தயிர் மற்றும் ஏழாவதாகத் தாம்பூலம் போன்ற வாய்ப் புத்துணர்ச்சி பண்டமும் உள்ளது.

தென்னிந்திய மதிய உணவுப் பழக்கத்தில் பெரும்பாலும் அரிசிச் சோறே முதன்மையானது. சோறு, சாம்பார், ரசம், காய்கறிகளால் செய்யப்பட்ட கூட்டு, அவியல், பொரியல், ஊறுகாய், பாயசம் மற்றும் அப்பளம் போன்றவை தமிழக மதிய உணவாகிறது. வட இந்திய மதிய சாப்பாட்டில் அரிசியுடன் கோதுமை ரொட்டியும் சேர்ந்திருக்கும்.

அரசுத் திட்டங்கள் அரசுப் பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி, சிறப்புப்பயிற்சி மையம் மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்டன்கீழ் உதவிபெறும் மதராசா, மக்தாப்பு முதலியவற்றில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கவும் அதிகரிக்கவும் இந்தியாவில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.[2] தமிழகத்தில் இலவச மதிய உணவுத் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது.

தென்னமெரிக்கா தொகு

 
பிரேசில் நாட்டு மதிய உணவு

அர்கெந்தீனா நாட்டில் பொதுவாக மதிய உணவே ஒரு நாளின் முக்கிய உணவாகும் அதை பகல் 2 மணிவாக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். மக்கள் வழக்கமாக உருளைக்கிழங்கு, பச்சைக்காய்கறி, இளம்கோழிக்கறி, மாட்டுக்கறி, பாஸ்தா, பழக்கலவை மற்றும் நீருணவான சோடா, ஒயின் சில இனிப்புக் குளிர்பானங்கள் போன்றவற்றை மதிய உணவாக உண்கிறார்கள். வேலைக்குச் செல்வோர் விரைவு உணவான சான்விட்ச்சை வீட்டிலிருந்தோ, துரித உணவு கடையிலிருந்தோ எடுத்துச் செல்கிறார்கள்.[3][4]}}

பிரேசில் நாட்டில் மதிய உணவை பகல் 11:30 முதல் 2 மணி வரை வாக்கில் எடுக்கிறார்கள்.[5]}} பிரேசில் நாட்டினர் பெரும்பாலும் அரிசியுடன் பீன்ஸ், இறைச்சி, பழக்கலவை என்று பகுதிக்கு ஏற்றவாறு உணவுள்ளது. வடக்குப் பகுதிகளில் மக்கள் மீன், அரிசி, பீன்ஸுடன் பரோடா உணவுகளையும் பொறித்த இளங்கோழியையும் உண்கிறார்கள். வாரயிறுதியில் சுர்ரஸ்கோ மற்றும் பெஜொடா உண்கிறார்கள். பாகையா மாநிலத்தில் செம்பனை எண்ணெயில் செய்த மீன்னும் சாவோ பாவுலோ மாநிலத்தில் பார்பிக்யூ கலந்த இத்தாலியன், ஜப்பானிய உணவும் புகழ் பெற்றதாகும். பிரேசில் நாட்டினர் பாலாடைக்கட்டியுடன் ரொட்டியும் மரவள்ளிக்கிழங்கும் உணவாகக் கொள்கிறார்கள். பிரேசிலின் பழங்களான குபாகூ, முந்திரி பழமும் கொட்டையும், சீத்தாப்பழம், பேரி, கொடித்தோடை, பப்பாளி, ஜபுடிகாபா, காஜா மற்றும் இதர பழங்களையும், பிற நீருணவான அசாய் பனை, கௌரானா, குளிர்பானம், காபி, கேப்ரிகானா, பியர் மற்றும் இளநீர் போன்றவையும் எடுத்துக் கொள்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

வார்ப்புரு:Wikimedia

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிய_உணவு&oldid=3881693" இலிருந்து மீள்விக்கப்பட்டது