இராகுல் சர்மா (இசைக் கலைஞர்)
இராகுல் சர்மா (Rahul Sharma) (பிறப்பு: செப்டம்பர் 25, 1972) ஒரு இசை இயக்குநரும்,இந்துஸ்தானி இசைக் கருவியான சந்தூர் கலைஞருமாவார். சந்தூர் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியாகும்.[1]
இராகுல் சர்மா | |
---|---|
போபால் பாரத் பவனில் நடந்த சந்தூர் இசை விழாவில் இராகுல் சர்மா, சூலை 2016 | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 25, 1972 மும்பை, மகாராட்டிரம் |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | இசை இயக்குநர், சந்தூர் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | சந்தூர் |
இசைத்துறையில் | 1996 – தற்போது வரை |
இணையதளம் | rahulsantoor |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஜம்மு-காஷ்மீரில் ஒரு பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வந்த சந்தூர் இசைக்கலைஞர் பண்டிட் சிவக்குமார் சர்மாவிற்கும் அவரது மனைவி மனோரமா என்பாருக்கும் தோக்ரி மொழி பேசும் குடும்பத்தில் மும்பையில் இராகுல் சர்மா பிறந்தார். இவரது தாத்தா, உமா தத் சர்மாவும்,[2] ஒரு சந்தூர் கலைஞராவார். 2009 இல் தனது காதலியான பார்கா சர்மாவை மணந்தார். இவர்களுக்கு அபினவ் என்ற மகன் 17 சூன் 2014 அன்று பிறந்தார்.[3]
தொழில்
தொகுஇராகுல் சிறு வயதிலேயே ஆர்மோனியம் இசைக்கத் தொடங்கினார். 13 வயதில் சந்தூரைக் கற்றுக் கொண்ட இவர், 17 வயதாகும் வரை இசையைத் தொழிலாகத் தொடருவதில் குழப்பத்திலேயே இருந்தார். மும்பையின் மிதிபாய் கல்லூரியில் பொருளாதாரம் படித்த பிறகு, இவர் தனது தந்தையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 1996 இல், தனது 24 வயதில் இசை நிகழ்ச்சிகளில் அவருடன் செல்லத் தொடங்கினார்.[4]
22 வயதில், இசை, கலை மற்றும் நடன உலகம், தர்பார் இசைத் திருவிழாவில் நிகழ்த்த பீட்டர் கேப்ரியல் என்பவர் ஒப்பந்தமிட்டார்.[5]
தனது தந்தை சிவக்குமார் சர்மாவிடம் கற்றுக்கொண்ட இவர், நமஸ்தே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சந்தூரை உலக இசையில் கொண்டு சென்றுள்ளார்.
இவரும் அமெரிக்க சாக்சபோன் கலைஞர் கென்னி ஜி என்பவரும் இணைந்து தயாரித்த இசைத்தொகுப்பு பில்போர்டு உலக தரவரிசையில் # 2 இடத்தையும், போர்டு ஜாஸ் தரவரிசையில் # 4 இடத்தையும் பிடித்தது.[6]
எரிக் மிக்வெட் என்பவரால் நிறுவப்பட்ட கிராமி விருது வென்ற எலக்ட்ரானிக்கா என்ற குழுவுடன் இணைந்து டீப் ஃபாரஸ்ட் என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். இது இந்திய நாட்டுப்புறக் கருவியான சந்தூரை எலக்ட்ரானிக்காவுடன் இணைத்தது.[7]
இவர், தனது இசைத் தொகுப்பான தி ரெபெல் மூலம் சந்தூரை ராக் இசைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளார்.
இவருக்கு 2011இல் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[8]
ஜாகிர் உசேன், ஜான் மெக்லாலின், மிக்கி ஹார்ட், ஜார்ஜ் ஹாரிசன், யோ யோ மா, ஜோ ஹென்டர்சன், வான் மோரிசன், ஏர்டோ மோரிரா, ஃபரோவா சாண்டர்ஸ், மற்றும் கோடோ டிரம்மர்கள் போன்ற இசைக்கலைஞர்களுடன் இவர் இணைந்து நிகழ்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[9]
கேம்பிரிச்சு இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் டியூக் மற்றும் டச்சஸ் ஆகியோரின் வருகையின் போது, இவரும், இவரது மனைவியும் பீட்டில்ஸ் இசைக்குழுவின் "நோர்வே வூட் ", "ஓ ஸ்வீட் லார்ட்" மற்றும் " லெட் இட் பீ " உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர்.[10]
2019 ஆம் ஆண்டில், இவரும் அவரது தந்தையும் யோகேசு சாம்சியுடன் பார்பிகன் மையத்தில் நிகழ்ச்சி நடத்தினர்.[11]
குறிப்புகள்
தொகு- ↑ "Santoor comes of age, courtesy Pandit Shivkumar Sharma". Indian Express. 8 January 2009. Archived from the original on 3 October 2012. பார்க்கப்பட்ட நாள் 7 February 2009.
- ↑ Gilbert, Andrew (16 November 2007). "Masters of the East come West". The Boston Globe. http://www.boston.com/ae/music/articles/2007/11/16/masters_of_the_east_come_west/. பார்த்த நாள்: 23 August 2019.
- ↑ Chatterjee, Arundhati (4 August 2016). "Meet santoor player Rahul Sharma". Hindustan Times. http://www.hindustantimes.com/art-and-culture/meet-santoor-player-rahul-sharma-the-man-behind-the-musician/story-nh5K7w2AZdiSjVsyBISbmI.html. பார்த்த நாள்: 23 August 2019.
- ↑ Pradeep Thakur. Indian Music Masters of Our Times- I. Pradeep Thakur & Sons. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908705-6-6.
- ↑ "Budhaditya Mukherjee + Shivkumar & Rahul Sharma". Darbar Festival. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
- ↑ Debarati S Sen (14 July 2012). "The single, Namaste, topping charts". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/The-single-Namaste-topping-charts/articleshow/14863560.cms. பார்த்த நாள்: 23 August 2019.
- ↑ "Rahul Sharma and Deep Forest collaborate for Deep India". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Rahul-Sharma-and-Deep-Forest-collaborate-for-Deep-India/articleshow/17545685.cms. பார்த்த நாள்: 23 August 2019.
- ↑ "Sangeet Natak Akademi awards conferred". https://www.thehindu.com/news/national/sangeet-natak-akademy-awards-conferred/article5104424.ece. பார்த்த நாள்: 23 August 2019.
- ↑ "Zakir Hussain and Rahul Sharma". Wisconsin Union. Archived from the original on 23 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "I played The Beatles on the santoor for the royal couple : Rahul Sharma". http://www.hindustantimes.com/music/i-played-the-beatles-on-the-santoor-for-the-royal-couple-rahul-sharma/story-B9N3X9ZB1ETsNcrkeuQCDN.html. பார்த்த நாள்: 23 August 2019.
- ↑ "Budhaditya Mukherjee + Shivkumar & Rahul Sharma". Darbar Festival. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019."Budhaditya Mukherjee + Shivkumar & Rahul Sharma". Darbar Festival. Retrieved 23 August 2019.