இராசகோபாலன் சிதம்பரம்
இரா. சிதம்பரம் என்கிற இராசகோபாலன் சிதம்பரம் (Rajagopala Chidambaram, 11 நவம்பர் 1936 – 4 சனவரி 2025) ஓர் இந்திய அணு அறிவியலாளரும் புகழ்பெற்ற உலோகவியல் அறிஞரும் ஆவார். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக 2018-22 காலகட்டத்தில் பணியாற்றினார். இந்தியாவின் அடிப்படை அணுவியல் ஆய்வுமையமான பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்தார். சிதம்பரம் பொக்ரானில் நடந்த 1974 அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றினார். மே 1998ஆம் ஆண்டு நடந்த சக்தி நடவடிக்கையின்போது அணுசக்தித் துறையின் குழுவை தலைமையேற்று நடத்தினார்.[1]
இராசகோபால சிதம்பரம் | |
---|---|
![]() | |
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் | |
பதவியில் 2018–2022 | |
குடியரசுத் தலைவர் | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பிரதிபா பாட்டில் பிரணப் முகர்ஜி ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் மன்மோகன் சிங் நரேந்திர மோதி |
முன்னையவர் | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
பின்னவர் | கிருஷ்ணசாமி விஜயராகவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மதராசு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா) | 11 நவம்பர் 1936
இறப்பு | 4 சனவரி 2025 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 88)
முன்னாள் மாணவர் | |
பணி | அணு ஆயுதத் திட்டம் படிகவுருவியல் |
விருதுகள் | பத்மசிறீ (1975) பத்ம விபூசண் (1999) |
பணியிடங்கள் | |
சிதம்பரம் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் 'மாண்புடை நபர்களின் குழு' அங்கத்தினர்களில் ஒருவராக உள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே குடிசார் அணுவாற்றல் கூட்டுறவு உடன்பாடுகையெழுத்தாகும் முன்னர் பன்னாட்டு முகமையின் இயக்குனர்குழு "பாதுகாவல்கள் உடன்பாட்டை" ஏற்றுக்கொள்ள இவர் ஆற்றிய பங்கு முதன்மையானதாகும்.
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
தொகுசென்னையில் பிறந்த சிதம்பரத்தின் பள்ளிப்பருவம், மீரட்டில் துவங்கி, சென்னையில் முடிவடைந்தது. சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
தொகு1962ஆம் ஆண்டு மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். 1990இல் இம்மையத்தின் இயக்குநரானார்.[2]
விருதுகளும் கௌரவிப்பும்
தொகுசிதம்பரம் பல விருதுகள், கௌரவங்களைப் பெற்றவர் ஆவார். 1975ஆம் ஆண்டு நாட்டின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதும் 1999ஆம் ஆண்டு இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் விருதும் அணுசக்தி சோதனைகளில் இவரது பங்களிப்பை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கும் விதமாக வழங்கியது. மற்ற முக்கிய விருதுகள் புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகத்தின் (1991) முன்னாள் மாணவர் விருது ஆகும். இந்திய அறிவியல் காங்கிரசு சங்கத்தின் இராமன் பிறந்த நூற்றாண்டு விருது (1995), இந்தியாவின் பொருள் அறிவியல் கழகத்தின் ஆண்டின் சிறந்த பொருள் விஞ்ஞானி விருது (1996), இந்திய இயற்பியல் சங்கத்தின் ஆர். டி. பிர்லா விருது (1996), எச். கே. போரடியா விருது (1998), அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதற்காக, அரி ஓம் ப்ரீரிட் மூத்த விஞ்ஞானி விருது (2000), இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் மேகநாத் சகா பதக்கம் (2002), இந்திய அணுசக்தி சங்கத்தின் ஓமி பாபா வாழ்நாள் சாதனை விருது (2006), இந்திய தேசிய பொறியியல் அகாதமியின் பொறியியல் துறையில் வாழ்நாள் பங்களிப்பு விருது (2009). இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் ராமன் பதக்கம் முதலியன் குறிப்பிடத்தக்கன. இவருக்கு கவுரவ முனைவர் பட்டங்களை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் வழங்கியுள்ளன. சிதம்பரம் இந்தியாவில் உள்ள அனைத்து அறிவியல் அகாதமிகள், உலக அறிவியல் அகாதமி (இத்தாலி) ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். இந்திய தொழில்நுட்பக் கழகம்-சென்னை, பாம்பே, இந்தியப் பொருட்கள் ஆராய்ச்சி சங்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம், பல அமைப்புகளின் உறுப்பினராகவும், தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டின் முற்பகுதியில், நீண்டகால முன்னுரிமைகள் மற்றும் நிதியுதவி தொடர்பாக ஆளுநர் குழுவிற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக, "குழு" உறுப்பினராக சிதம்பரத்தை பன்னாட்டு அணுசக்தி முகமை அழைத்தது.[3] இவர் இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் உறுப்பினராக இருந்தார்.[4] ஜோத்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக நிர்வாக வாரியத்தின் தலைவராக இருந்தார்.[5]
இறப்பு
தொகுசிதம்பரம் மகாராட்டிரத் தலைநகர் மும்பையில் 2025 சனவரி 4 அன்று தனது 89 ஆம் அகவையில் காலமானார்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Untitled Page". pib.gov.in. Retrieved 2022-09-02.
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்110
- ↑ "R. Chidambaram in IAEA Panel". Retrieved 2008-10-21.
- ↑ "INSA :: Indian Fellow Detail".
- ↑ "IITJ - Chairman, BoG".
- ↑ NOC (2025-01-04). "அணு விஞ்ஞானி இரா. சிதம்பரம் காலமானார்". Way2News Tamil (in ஆங்கிலம்). Retrieved 2025-01-05.
- ↑ Nuclear scientist Dr. Rajagopala Chidambaram passes away