இராசாளிப் பருந்து

இராசாளிப் பருந்து
பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் சரணாலயம் அருகே காணப்படும் ஒரு போநெலி கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. fasciata
இருசொற் பெயரீடு
Aquila fasciata
(வியேயிலோட், 1822)
Aquila fasciata

இராசாளிப் பருந்து (Bonelli's eagle, Aquila fasciata) ஒரு கொன்றுண்ணிப் பறவை. தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இடங்களில் வாழ்கின்றது. இத்தாலியப் பறவையியலாளர் பிராங்கோ போநெலியை சிறப்பிக்கும் வண்ணம் இப்பறவை போநெலி கழுகு என்றும் அழைக்கப்படுகிறது. A. fasciata இனம் இரு உள்ளினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: A. f. fasciata, A. f. renschi.

உடலமைப்பும் கள அடையாளங்களும்[2] தொகு

கரும்பருந்தை விடச் சற்று பெரிய கழுகு (55 – 67 cm). அகன்ற இறக்கைகள், நீளமான வால், சிறிய, நீட்டிக்கொண்டிருக்கும் தலை. வேகமாக இறக்கைகளை அடித்தபடி பறக்கும், சரிவான திசையில் இறங்குகையில் வேகமாக முன்னேறும். அதிக உயரத்தில் பறக்காது. ஆண், பெண் இரண்டும் பெருமளவில் ஒரே போலிருக்கும். பெண் சிறிது பெரியதாகவிருக்கும்.

வளர்ந்த கழுகு: மேற்பகுதியும் தலையும் கபில நிறம், முதுகில் வெண்திட்டு, சாம்பல் நிற வாலில் மெல்லிய கோடுகளும் முனைக்கு அருகில் பட்டையும் இருக்கும். கீழிருந்து பார்க்கும்போது, வெண்மையான (அல்லது செம்பழுப்பு நிற) அடிப்பகுதியில் கபில நிறக் கீற்றுகள் தெரியும். (பெண் கழுகிற்கு கீற்றுகள் அதிகமாக இருக்கும்)

குழப்பம் விளைவிக்கும் பிற கழுகுகள்: தேன் பருந்து, பெரிய வல்லூறு, நெடுங்கால் வைரி ஆகியவை.

இனப்பெருக்கம் தொகு

பெரும்பாலும் வலசை போகாத பறவை; இந்தியாவில் உள்ளூர்ப் பறவையாகவே இது அறியப்படுகிறது[3].

உள்ளினங்கள் தொகு

A. f. fasciata காணப்படும் பகுதிகள்: தொகு

வடமேற்கு ஆப்பிரிக்கா, ஐபீரிய மூவலந்தீவு (ஸ்பெயின், போர்ச்சுகல் ஒட்டிய பகுதி) வழியாக மத்தியதரைக் கடல் பகுதிகள்; மத்திய கிழக்கு நாடுகள், அரேபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு சீனா.

A. f. renschi காணப்படும் பகுதிகள்: தொகு

சிறு சுண்டாத் தீவுகள், தானிம்பார் தீவுகள் (இந்தோனேசியாவைச் சேர்ந்தவை)

மேற்கோள்கள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2015). "Aquila fasciata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 12 April 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Ferguson-Lees, J. & Christie, D.A. (2001). Raptors of the World (p. 244). Helm
  3. Ali. S, Ripley. S.D. (1972). Handbook of the Birds of India and Pakistan [Vol. 1. p. 123 (163)]. OUP

வெளி இணைப்புகள் தொகு

  1. "Hunting with The Bonelli's Eagle - Second Season with The Colonel". பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசாளிப்_பருந்து&oldid=3793330" இலிருந்து மீள்விக்கப்பட்டது