இராஜா அண்ணாமலைபுரம்

இராஜா அண்ணாமலைபுரம் (Raja Annamalaipuram) இதனை சுருக்கமாக ஆர். ஏ. புரம் என்றும் அழைப்பர். சென்னையின் பிரபல முன்னாள் தொழிலதிபர் மு. அண்ணாமலை செட்டியாரின் பெயர் இப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் உள்ள இராஜா அண்ணாமலைபுரம் பகுதி, சைதாப்பேட்டை முதல் வங்காள விரிகுடா கடற்கரை வரை மற்றும் அடையாறு ஆற்றின் வடகரை வரை நீண்டுள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 600 028 ஆகும். இதனருகில் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி போன்ற இடங்கள் உள்ளது.

இது சென்னை மாநகராட்சியின் மண்டல எண் 13-இல் உள்ளது.

இது மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜா_அண்ணாமலைபுரம்&oldid=3697382" இலிருந்து மீள்விக்கப்பட்டது