இராமகிருஷ்ணா இராமசுவாமி
இராமகிருஷ்ணா இராமசுவாமி (Ramakrishna Ramaswamy)(பிறப்பு: அக்டோபர் 14, 1953, இந்தியாவில் சென்னையில்) என்பவர் இந்திய அறிவியலாளர் ஆவார்.
இராமகிருஷ்ணா இராமசுவாமி | |
---|---|
பிறப்பு | 14 அக்டோபர் 1953 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | நேரிலா அறிவியல், கணிப்பான் உயிரியல் |
பணியிடங்கள் | ஐதராபாத்து பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி |
கல்வி கற்ற இடங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், கான்பூர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஹெர்செல் ரேபிட்சு |
கல்வி
தொகுஇராமசுவாமி சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை வேதியியலும் (1972), பிறகு கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் முதுநிலை பட்டமும் வேதியியலில் முனைவர் பட்டத்தினை (1978) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இங்கு ஹெர்ஷல் ராபிட்சு ஆய்வு மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். பின்னர் இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், பசடேனாவுக்குச் சென்றார். இங்கு இவர் 1978 முதல் 1980 வரை பேராசிரியர் ருடால்ப் ஏ. மார்கசுடன் பணிபுரிந்தார். இவர் 1980-ல் இந்தியா திரும்பினார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் வருகை ஆய்வாராகவும் (1981) மற்றும் சகாவாகவும் (1983) சேர்ந்தார்.
பணி
தொகு1986ஆம் ஆண்டில் இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அறிவியல் பள்ளியின் ஆசிரிய உறுப்பினர்களில் ஒருவராக பணியில் சேர்ந்தார். இயற்பியல் அறிவியல் பள்ளியில் பேராசிரியருடன் கூடுதலாக, இவர் இப்பல்கலைக்கழக கணக்கீட்டு மற்றும் ஒருங்கிணைந்த அறிவியலுக்கான பள்ளியில் கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் மையத்திலும் உறுப்பினராக உள்ளார். இவர் சுமார் 25 முனைவர் பட்ட மாணவர்களின் ஆய்வு மேற்பார்வையாளராகவும் செயல்பட்டுள்ளார்.
இராமசுவாமி, யப்பானின் ஒகாசாகியில் உள்ள மூலக்கூறு அறிவியல் நிறுவனத்தில் பணி விடுமுறையில் ஒரு வருடம் (1989-90) ஆய்வு மேற்கொண்டார். இரண்டாவது பணி விடுமுறையில் (2004-05) பிரின்சுடன் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். 2011-ல்[1] இவர் ஐதராபாத்து பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 2015-ல் துணைவேந்த பதவியிலிருந்து விலகி,[2] ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது முதன்மைப் பதவிக்குத் திரும்பினார். 2018-ல் பணி ஓய்வு பெற்ற பின் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தில்லியில் வருகைப் பேராசிரியராகச் சேர்ந்தார்.
ஆய்வுத் தகவல்கள்
தொகுஇராமசுவாமி 25 முனைவர் பட்ட மாணவர்களின் ஆய்வு மேற்பார்வையாளராக செயல்பட்டுள்ளார். இசுகோபசு தகவலின் படி, 2015ஆம் ஆண்டில் இவர் 171 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருந்தார். இக்கட்டுரைகள் 2214 முறை மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. இவரது எச்-சுட்டெண் 26 ஆகும்.[3]
அறிவியல் கழகங்களில்
தொகுஇவர் புது தில்லியில் உள்ள இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகவும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின்துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[4] இவர் 2016-2018 காலகட்டத்தில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராக பணியாற்றினார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.thehindu.com/news/cities/Hyderabad/ramakrishna-ramaswamy-takes-over-as-vc-of-uoh/article2070455.ece
- ↑ http://timesofindia.indiatimes.com/home/education/news/University-of-Hyderabad-VC-Ramaswamy-resigns/articleshow/45265448.cms
- ↑ "Scopus preview - Scopus - Author details (Ramaswamy, Ramakrishna)". www.scopus.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05.
- ↑ "Fellow Profile - Ramaswamy, Prof. Ramakrishna". Indian Academy of Sciences. Bangalore. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
- ↑ https://www.ias.ac.in/describe/fellow/Ramaswamy,_Prof._Ramakrishna/