இராமன்குட்டி நாயர்
கலாமண்டலம் இராமன்குட்டி நாயர் (ஆங்கிலம்:Kalamandalam Ramankutty Nair)) (25 மே 1925 - 11 மார்ச் 2013) இவர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக கேரள கலை வடிவத்தை கடைப்பிடித்த கதகளியின் கலைஞராக இருந்துள்ளார்.
கலாமண்டலம் இராமன்குட்டி நாயர் | |
---|---|
கலாமண்டலம் இராமன்குட்டி நாயர் குருவாயூர், கேரளா (சனவரி 2011) | |
பிறப்பு | 1925 மே 25 வெள்ளிநெழி, (பாலக்காடு) |
இறப்பு | 2013 மார்ச் 11 வெள்ளிநெழி, [பாலக்காடு |
தேசியம் | இந்தியன் |
பணி | கதகளி கலைஞர் |
வாழ்க்கைத் துணை | சரஸ்வதி அம்மா |
பிள்ளைகள் | நாராயணன் குட்டி, விஜயலட்சுமி, அப்புக்குட்டன் |
சுயசரிதை
தொகுஇவரது குரு பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனன், இவரது முழு வாழ்க்கையிலும் இவரது ஒரே ஆசிரியர் ஆவார். இருவரும் சேர்ந்து பாலக்காடு மாவட்டத்தில்பல கதகளி கலைஞர்களைத் தயாரிப்பதில் அறியப்பட்ட வெள்ளிநெழியைச் சேர்ந்தவர்கள் . [1] இராமன்குட்டி நாயர் தனது படித்த பள்ளியான கேரள கலாமண்டலத்தில் பணியாற்றினார். பின்னர், அதன் முதல்வராகவும் ஆனார்.
1925 இல் பிறந்த இராமன்குட்டி நாயர் கதகளி வம்சாவளி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் புகழ்பெற்ற (உயர்-சாதி நம்பூதிரிகளின் மாளிகை) ஒரு உள்ளூர் ஆசிரியரான இராவுன்னி மேனன் கிராமத்தின் கலாச்சார காட்சியில் மிக அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர், விரைவில் சிறிய இராமன்குட்டியும் அவரைப் பின்பற்றினார். கேரள கலாமண்டலத்தில் சேர்ந்து இவர் கலையில் தேர்ச்சி பெற்றார். இராமன்குட்டி நாயர் பின்னர் பல சீடர்களை சிற்பமாக வடிவமைத்தார். அவர்களில் மிக முக்கியமானவர் கலாமண்டலம் கோபி, கலாமண்டலம் வாசு பிசரோடி, எம். பி. எஸ் நம்பூதிரி, பாலசுப்பிரமணியன் மற்றும் மறைந்த கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் . [2]
சோமன், சண்முகன் போன்ற கலாமண்டலத்தைச் சேர்ந்த இளைய தலைமுறை கதகளி கலைஞர்கள் பலரும் மேம்பட்ட பயிற்சிக்காக இராமன்குட்டி நாயரை தங்கள் குருவாகக் கொண்டிருந்தனர். (அவர் 1985 இல் கலாமண்டலத்தின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றார்). இவரது பிற்காலத்தில், இராமன்குட்டி நாயர் காந்தி சேவா சதனின் தலைவராக இருந்தார் . இது சதனம் கதகளி அகாடமி என்றும் நன்கு அறியப்பட்டதாகும்.
85 வயது வரை ஒரு கலைஞராக செயல்பட்ட இவர், கேரளா முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் கதகளியை அரங்கேற்றியுள்ளார். 'தோரானாயுதம்' மற்றும் 'இராவணோல்பவம்', 'நரகாசுரவதத்தில்' நரகாசுரன், 'உத்தரன் சுயம்வரத்தில்' துரியோதனன், 'ராஜசூயத்தில்' சிசுபாலன், 'கல்யாணசௌகந்திகத்தில் ஹனுமான்' போன்ற நாடகங்களில் இராவணனின் பாத்திரங்களுக்காக இவர் நன்கு அறியப்பட்டார். லாவணசுரவாதம் ',' கீசகவதத்தில் 'கீசகன்,' கிர்மீரவதத்தில் 'தர்மபுத்ரன்,' காலகேயவதத்தில் அர்ஜுனன் போன்ற பாத்திரங்களுக்காக இவர் நன்கு அறியப்பட்டார். மற்றொரு பிரபலமான 'சீதா சுயம்வரம்' பாத்திரத்தில் பரசுராமரின் பாத்திரம், அதன் ஆடை இவரது சொந்த வடிவமைப்பில் இருந்தது. [3]
பொதுவாக அதிகம் பேசாத போக்குடைய இராமன்குட்டி நாயர், திருநொட்டம் என்ற தனது சுயசரிதையை எழுதியுள்ளார். இந்திய அரசின் உயரிய பத்ம பூசண் விருதை வென்ற்றுள்ளார். [4] புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணன் கலாமண்டலம் இராமன்குட்டி நாயர் குறித்து கதகளிஎன்று பெயரிடப்பட்ட ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். [5] அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய அதே பெயரில் உள்ள ஒரு படமாகும். [6] [7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமேதையான இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் தனது சொந்த ஊரான வெள்ளிநெழியில் வசித்து வந்தார். 2009 மே 15 அன்று, அருகில் உள்ள செருப்புலச்சேரி நகரத்தில் அவரது இரசிகர்களுக்கு மத்தியில் சதாபிசேகம் என்பது (84 வது பிறந்த நாள்) கொண்டாடப்பட்டது.
இராமன்குட்டி நாயர் 2013 மார்ச் 11 அன்று தனது 87 வயதில் இறந்தார். [8]
குறிப்புகள்
தொகு- ↑ http://spicmacay.nitk.ac.in/?q=node/278
- ↑ http://www.indiansarts.com/kathakali/TTRamankuttypage.htm
- ↑ "Master of Perfection" from The Hindu, Mar 14, 2013
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help) - ↑ "Review of the dancer's performance in the Hindu". Archived from the original on 2008-01-13. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Interview of the director on the film in Deccan Herald பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Kalamandalam Ramankutty Nair at London Film Festival". Archived from the original on 2006-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
- ↑ http://english.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/contentView.do?contentId=13619035&tabId=1&programId=11565535