இராம்நாத் சாவ்லா

இந்திய விமானி

இராம் நாத் சாவ்லா ( Ram Nath Chawla 1 திசம்பர் 1903 - 23 பிப்ரவரி 1986) ஒரு இந்திய விமானி ஆவார். இவர் மார்ச் 1930 இல், பாக்கித்தானின் ஆகா கான் ஏற்படு செய்த ஒரு பறக்கும் போட்டியில் வெற்றி பெறும் முயற்சியில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு விமானம் மூலம் பறந்த முதல் இந்தியராவார். 17 வயதான ஆஸ்பி மெர்வான் இஞ்ஜினியர் என்பவர் துணை விமானியாக் இவருடன் பயணிக்க இவர்களது விமானம் 17 நாட்கள் கடந்து இங்கிலாந்தை அடைந்தது. இருப்பினும், விமானத்தை தனியாக செலுத்த வேண்டும் என்று விதிகள் கூறியுள்ளதால் இவர் போட்டியில் வெற்றி பெறவில்லை.

இராம்நாத் சாவ்லா
இந்திய வான்படையின் வானூர்திச் சீறகத் தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-12-01)1 திசம்பர் 1903
பிரித்தானிய இந்தியா
இறப்பு23 பிப்ரவரி 1986
Military service
பற்றிணைப்பு இந்தியா (1933–1947)
 இந்தியா (1947லிருந்து)

பின்னர் இவர் 1953இல் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்திய விமானப்படையின் உபகரணக் கிளையில் நியமிக்கப்பட்டு அதன் மூத்த அதிகாரியாக ஆனார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இராம் நாத் சாவ்லா 1903 திசம்பர் 1இல் பிறந்தார்.[1] லாகூருக்கு தெற்கே உள்ளகசூரில் உயர்நிலைப் பள்ளியை முடித்த பின்னர்,[2] இவர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொறியியலைப் பயின்றார்.[3] அருகிலுள்ள ஹக்னால் விமான நிலையத்தில் பறப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். 1928ஆம் ஆண்டில், இலண்டனின் விமான சங்கத்திலிருந்து தான் பறப்பதற்கான உரிமத்தைப் பெற்றார்.[2][4]

பறக்கும் தொழிலில் ஆரம்பம்

தொகு

நவம்பர் 1929இல், விமானத்தை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருந்த இசுலாமிய பிரிவின் 48 வது இமானான[5] ஆகா கான், இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் தனியாக பறந்து சென்று ஒரு மாத காலத்திற்குள் திரும்பும் இந்தியர் ஒருவருக்கு, £500 டாலர் பரிசை அறிவித்தார்.[6]

போட்டியில் பங்கேற்பதற்கான செலவை ஈடுகட்ட, சமீபத்தில் பறக்கும் உரிமத்தையும் ஒரு விமானத்தையும் தனது பிறந்தநாள் பரிசாகப் பெற்றிருந்த 17 வயதான ஆஸ்பி மெர்வான் இஞ்ஜினியர் என்பவருடன் கூட்டு சேர்ந்தார்.[7][8] மார்ச் 3, 1930 இல், சாவ்லா பிரதான விமானியாக இருந்து, இவர்கள் இருவரும் கராச்சியிலிருந்து இங்கிலாந்தின் குரோய்டன் விமான நிலையத்திற்கு 17 நாட்களில் பயணம் மேற்கொண்டனர்.[9] பல முறை தங்கள் வழியை இழந்த பின்னர், இவர்கள் குரோய்டோனில் வரவேற்பு கூட்டத்தினரால் வரவேற்கப்பட்டனர். இலண்டனின் நகரத் தந்தையால் கௌரவிக்கப்பட்டனர். மேலும், இந்திய அரசாங்கத்திடமிருந்து 7,500 ரூபாய் பரிசினையும் பெற்றனர்.[10][11][12] இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் சங்க உறுப்பினர்களும், விமான அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.[13]

மார்ச் 27, 1930 அன்று, தி வாலிங்டன் அன்ட் கார்ஷால்டன் டைம்ஸ் என்ற பத்திரிக்கை இவ்விரு விமானிகளின் புகைப்படத்துடன் செய்தியையும் வெளியிட்டது. படத்தின் கீழ் "விக்டர்ஸ் லாரல்ஸ்" என்ற சொற்களும் இடம்பெற்றன.[13]

ஏப்ரல் 10, 1930 அன்று ஒரு வரவேற்பு நடைபெற்றது.[14] ஆஸ்பி இன்ஜினியர் விரைவில் கராச்சிக்குத் திரும்பி பரிசை வென்றார். இந்தப் போட்டியில் தொழில்நுட்ப சிக்கலால் விமானி மன் மோகன் சிங்கை சில மணிநேர வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெ. ர. தா. டாட்டா வென்றார்.[15]

1965 ஆம் ஆண்டில் ஹூஸ் ஹூ ஆஃப் ஏவியேஷன் டைரக்டரி ஆஃப் ஆசியா சாவ்லாவை "1930இல் கராச்சியில் இருந்து இங்கிலாந்தின் குரோய்டனுக்கு விமானத்தை இயக்கிய முதல் இந்தியர்" என்று விவரிக்கிறது.[2]

பிற்கால பறக்கும் தொழில்

தொகு

1934ஆம் ஆண்டில், சாவ்லா இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு, தனியாக, ஒரு விமானத்தில் பறந்தார்.[2]

ஆகஸ்ட் 1, 1940 அன்று, கராச்சியின் விமானப் படைப் பயிற்சித் தளத்தில் பயிற்சியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர் அரச கழகத்தின் விமானப்படையில் ஒரு உயர்நுட்பச் சாதனங்கள் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[2] இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சாவ்லா இந்திய விமானப்படையில் மூத்த உயர்நுட்பச் சாதனங்கள் அதிகாரியானார்.[16] இவர் பயணிகள் விமானையாக 960 மணிநேரம் பறந்து 1953 இல் விங் கமாண்டராக ஓய்வு பெற்றார்.[2]

இறப்பு

தொகு

சாவ்லா, 23 பிப்ரவரி 1986 இல் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Service Record for Flight Lieutenant Ram Nath Chawla 1626 EQPT at Bharat Rakshak.com". Bharat Rakshak (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 February 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Combat Lore: Indian Air Force 1930-1945.Sapru, Somnath (2014). Combat Lore: Indian Air Force 1930-1945. KW Publishers. p. 442. ISBN 9789383649259.
  3. "Flashback of first flier who flew farthest in 1930". The New Indian Express. 19 March 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019.
  4. Aircraft and engine perfect: the story of JRD Tata who opened up skies for his country (in ஆங்கிலம்).
  5. Chowdhry, Mohindra S. (2018). Defence of Europe by Sikh Soldiers in the World Wars (in ஆங்கிலம்). Troubador Publishing Ltd. p. 369. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781788037983.
  6. Rao, Prof L. S. Seshagiri (2000). J. R. D. TATA (in ஆங்கிலம்). Sapna Book House (P) Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128017438.
  7. "Flashback of first flier who flew farthest in 1930". The New Indian Express. 19 March 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019."Flashback of first flier who flew farthest in 1930". The New Indian Express. 19 March 2017. Retrieved 19 February 2019.
  8. Singh, Farida. "Brothers-in-Arms : The Flying Engineer Brothers". www.bharat-rakshak.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 19 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "1930 | 0519 | Flight Archive". www.flightglobal.com. Archived from the original on 21 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 20 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Sapru, Somnath (2014). Combat Lore: Indian Air Force 1930-1945. KW Publishers. p. 442. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789383649259.
  11. "Aspy Engineer (1912–2002) – SP's Aviation". www.sps-aviation.com. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019.
  12. Burge, Cyril G. (1930). The Air Annual of the British Empire (in ஆங்கிலம்). Gale & Polden.
  13. 13.0 13.1 Cluett, Douglas; Nash, Joanna; Learmonth, Bob; Sutton Libraries and Arts Services (1980). "2. Life at the Airport". Croydon Airport: the great days, 1928-1939 : [by] Douglas Cluett, Joanna Nash, Bob Learmonth (in ஆங்கிலம்). Sutton, Surrey (Central Library, St Nicholas Way, Sutton, Surrey): London Borough of Sutton Libraries and Arts Services. pp. 16–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0950322482. இணையக் கணினி நூலக மைய எண் 16475697.
  14. "1930 | 0464 | Flight Archive". www.flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 20 February 2019.
  15. "Aspy Engineer (1912–2002) – SP's Aviation". www.sps-aviation.com. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019."Aspy Engineer (1912–2002) – SP's Aviation". www.sps-aviation.com. Retrieved 16 February 2019.
  16. Engineer, Air Marshal Aspy. "Air Marshal Aspy Engineer's Recollections". www.bharat-rakshak.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 17 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்நாத்_சாவ்லா&oldid=3927824" இலிருந்து மீள்விக்கப்பட்டது