இராம் அவதேஷ் சிங்

இந்திய அரசியல்வாதி

இராம் அவதேஷ் சிங் யாதவ் (Ram Awadhesh Singh, 18. சூன் 18, 1937 - 20. சூலை 20, 2020) [1] என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் புகழ்பெற்ற சமூக நீதித் தலைவராவார். இவர் பீகார் மாநிலச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் (1969–71), இந்திய மக்களவை (1977-1979) உறிப்பினராகவும், இந்திய மாநிலங்களவை (1986-1992) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2] இவர் ஒரு பிரபலமான சோசலிச தலைவராகவும், டாக்டர் ராம் மனோகர் லோகியாவை வலுவாக பின்பற்றுபவராகவும் இருந்தார். இவரது நீண்ட போராட்டம் " மண்டல் ஆணைக்குழு " உருவாக வழிவகுத்தது, அதாவது இவர் " மண்டல் ஆணைக்குழுவின் அறிவுத் தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார். இவர் " வடக்கின் பெரியார் " என்றும் அழைக்கப்படுகிறார். பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம் (ஜூன் 2007) உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.[3][4]

இராம் அவதேஷ் சிங்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
பதவியில்
2007–2010
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1986–1992
பிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1977–1979
முன்னையவர்ஷியோபுஜன் சாஸ்திரி
பின்னவர்தபேஷ்வர் சிங்
பீகாரின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1969–1971
தொகுதிபிக்ரம்கஞ்ச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சூன் 1937 (1937-06-18) (அகவை 87)
ரோத்தாஸ், பீகார்
இறப்பு20 சூலை 2020(2020-07-20) (அகவை 83)
பாட்னா
அரசியல் கட்சிபாரதிய லோக் தளம்
பிள்ளைகள்4 மகன்கள், 1 மகள்கள்
வாழிடம்பாட்னா

பிறப்பும் அரசியல் ஈடுபாடும்

தொகு

இராம் அவதேஷ் சிங் பீகார் மாநிலத்தில் ரோத்தாஸ் மாவட்டத்துக்கும் போஜ்பூர் மாவட்டத்துக்கும் இடைபட்ட சோன் சோன் ஆறங்கரையில் உள்ள பிப்பரா என்னும் சிற்றூரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். மெட்ரிகுலோசன் படிப்பில் தேரிய இவர் கல்லூரி வாழ்வின்போது ராம் மனோகர் லோகியாவின் தலைமையில் தன்னை ஒரு சமதர்மக்காரராக உருவாக்கிக்கொண்டார். 1967 ஆம் ஆண்டுவாக்கில் பெரியாரியாரின் சிந்தனைகள் இவரை எட்டின. பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைக்கள் இவரை ஈர்த்தன. இவர் இந்தியில் எழுதிய ஒரு நூலில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைக்களை சுருக்கமாக எழுதியமைக்காக சோசலிசக் கட்சி இவர்மீது நடவடிக்கை எடுத்தது. அந்தக் காரணத்துக்காக இவரை அக்கட்சியினர் நாயக்கர் என்று அழைத்தனர். பர்ப்பனரை வெறுக்கும் ஒரு சோசலிஸ்டாக மாறிய இவர் வட இந்தியாவில் உள்ள பிற்படுத்தபட்ட, தாழ்த்தபட்ட மக்களின் நலன்களைக் காக்க உறுதிபூண்டு 1968 முதன் தன்னை முழுமையாக அதில் ஈடுபடுதிக்கொண்டார்.[5]

இட ஒதுக்கீடுப் போராட்டங்கள்

தொகு

இந்திய ஒன்றிய அரசின் கல்வியிலும் பணிகளிலும் பிற்படுத்தபட்ட மக்களுக்கு விகிதாச்சார இட ஒதுக்கீடு பெறவேண்டுமென்ற குறிக்கோளுடன் 1978 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து சென்ற வே. ஆனைமுத்து உள்ளிட்டவர்களை புதுதில்லியில் அரசியல் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தபோது இராம் அவதேஷ் சிங்கை 1978 மே 6 அன்று சந்தித்தனர். வந்தவர்கள் பெரியாரியலாளர்கள் என்பதை அறிந்ததும் மகிழ்ந்து, மறுநாள் உத்தரப் பிரதேசத்தின் முசாபர்பூரில் நடந்த உத்தரப்பிரதேச பிற்படுத்தபட்டோர் மாநாட்டில் வே. ஆனைமுத்துவை பேசவைத்தார். சென்னையில் 1978 சூன் 24 இல் நடந்த இட ஒதுக்கீடு மாநாட்டில் இராம் அவதேஷ் சிங் கலந்துகொண்டார். இதன்பின்னர் இராம் அவதேஷ் சிங் வே. ஆனைமுத்து உள்ளிட்டோருடன் இணைந்து கேரளம், கர்நாடகம் போன்ற தென்னக மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார்.[5]

இட ஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுக்க கட்சிசாரா அகில இந்திய அமைப்பாக அனைத்திந்தியப் பிற்படுத்தபட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவை என்ற அமைப்பு தொடங்கபட்டது. இந்த அமைப்புக்கு வே. ஆனைமுத்து புரவலர்-தலைவராகவும், இராம் அவதேஷ் சிங் தலைவராகவும், பெங்களூர் பேராசிரியர் ஏ. எம். தர்மலிங்கம் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர். இப்பேரவையின் முதற்பணியாக பீகார் முழுவதும் பெரியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடி, இட ஒதுக்கீடு பரப்புரையை மேற்கொள்ள முடிவு செய்யபட்டது. இதன்படி 17. செப்டம்பர் 1978 முதல் 18 அக்டோபர் 1978 முடிய பேரவையின்சார்பில் தமிழகத்தில் இருந்து சென்ற அறிஞர்களான வே. ஆனைமுத்து, மா. முத்துசாமி, திருச்சி து. மா. பெரியசாமி வேலூர் நா. பா. செந்தமிழ்க்கோ ஆகிய நாலவரை வரவழைத்து பரப்புரை மேற்கொள்ளபட்டது. இதனால் எழுச்சியுற்ற பீகார் மக்கள் 19 அக்டோபர் 1978 முதல் 31 அக்டோபர் 1978 முடிய இட ஒதுக்கீடுக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 25, 26 ஆகிய நாட்களில் பீகார் வந்த பிரதமர் மொராசி தேசாய் கூட்டங்களில் பேச முடியாமல் ஆனார். இதைத்தொடர்ந்து தில்லி சென்ற பிரதமர் இரண்டாவது பிற்படுத்தபட்டோர் ஆணையம் அமைக்கபடும் என்று 20. திசம்பர் 1978 இல் அறிவித்து 1 சனவரி. 1979 இல் ஆணையத்தை அமைத்தார். இதுவே மண்டல் ஆணைக்குழு என அழைக்கபடுகிறது. பீகாரில் நடத்தபட்ட இக்கிளர்ச்சியன்போது 10000 பேர் சிறைப்பட்டனர். நிலையை உணர்ந்த பீகர் முதல்வர் கர்பூரி தாக்கூர் 10 நவம்பர் 10 அன்று மாநில அரசு பணிகளில் பிற்படுத்தபட்டோருக்கு முதன்முறையாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தார்.[5]

இராம் அவதேஷ் சிங் தம் தோழர்களுடன் ஆனைமுத்துவையும் அழைத்துக்கொண்டு 26 மார்ச் 1979 அன்று இராசத்தானின் ஜெய்பூரில் பிற்படுத்தபட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரிக்கைய்யை வலியுறுத்தி பேரணியும் சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டமும் நடத்தினார். இதன்பிறகு இவர்கள் 15 நவம்பர் 1979 முதல் 29 நவம்பர் 1979 வரை இந்தியப் பிரதமர் சரண் சிங் வீட்டுமுன்பு இட ஒதுக்கீடுக்காக ஆர்பாட்டதில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யபட்டனர்.[5]

நாடாளுமன்றப் பணிகள்

தொகு

1986 முதல் 1992 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இராம் அவதேஷ் சிங் இருந்தார். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டதில் 12 மார்ச் 1990 அன்று குடியரசு தலைவர் ரா. வெங்கட்ராமன் உரை நிழத்தினார். அவர் உரையில் மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாத்தைக் கண்ட இராம் அவதேஷ் சிங் இடைமறித்து குடியரசு தலைவரின் உரையை நிறுத்துமாறு எதிர்ப்பு தெரிவித்து தடுத்தார். இது நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது. ஊடகங்களில் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்வு பிரதமர் வி. பி. சிங்கை இட ஒதுக்கீட்டின்பால் ஈர்த்து, அடுத்த ஐந்து மாதங்களில் அதாவது 13. ஆகத்து 1990 அன்று பிற்படுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீடு ஆணையை வெளியிடவைத்தது.[5]

குறிப்புகள்

தொகு
  1. Veteran socialist leader and Lok Sabha member Ram Awadesh Singh passes away at a private hospital in Patna
  2. "Times of India, 25 November 2005". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Times of India 3 Oct 2009". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. http://www.ncbc.nic.in/html/commissions.html
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 அந்தோ! அனைத்திந்திய ஒடுக்கபட்டோர் பேரவையின் தலைவரும் பெயர்பெற்ற இட ஒதுக்கீடுப் போராளியுமான தோழர் இராம் அவதேஷ் சிங் மறைந்தார்!, கட்டுரை, வே. ஆனைமுத்து, 22. 7. 2020 சிந்தனையாளன் இதழ், பக்கம் 4-7, ஆகத்து 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_அவதேஷ்_சிங்&oldid=3862828" இலிருந்து மீள்விக்கப்பட்டது