இரித்விக் கட்டக்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

இரித்விக் குமார் கட்டக் (Ritwik Kumar Ghatak) (நவம்பர் 4,1925 6,1976) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், நடிகரும் மற்றும் நாடக ஆசிரியரும் ஆவார்.[3]  – சத்யஜித் ராய், தபன் சின்ஹா மற்றும் மிருணாள் சென் போன்ற சமகால வங்காளத் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, இவரது திரைப்படங்கள் முதன்மையாக சமூக யதார்த்தம், பிரிவினை மற்றும் பெண்ணியம் ஆகியவற்றை உன்னிப்பாக சித்தரித்ததற்காக நினைவுகூரப்படுகிறது. 1974 ஆம் ஆண்டில் தனது ஜுக்தி டக்கோ ஆர் கப்போ படத்திற்காக சிறந்த கதைக்கான தேசிய திரைப்பட விருதுக்கான ரஜத் கமல் விருதையும், வங்காளதேசத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் டிடாஷ் ஏக்தி நாதிர் நாமின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றார்.[4] 1970 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[5][6]

இரித்விக் கட்டக்
பிறப்புஇரித்விக் குமார் கட்டக்
(1925-11-04)4 நவம்பர் 1925
டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய டாக்கா, வங்காளதேசம்)
இறப்பு6 பெப்ரவரி 1976(1976-02-06) (அகவை 50)
கொல்கத்தா , மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மாநிலக் கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1952–1976
வாழ்க்கைத்
துணை
சுரமா கட்டக்[1]
பிள்ளைகள்3[2]
விருதுகள்பத்மசிறீ (1970)
சிறந்த கதையாடலுக்கான தேசிய திரைப்பட விருது (1974)

திரைப்படங்கள்

தொகு

கட்டக்கின் மதுமதி (1958) என்ற இந்தித் திரைப்படம் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்கு இவர் திரைக்கதை எழுதினார். மறுபிறவி என்ற கருப்பொருளைக் கையாள்வதில் இது ஆரம்பகாலத் திரைப்படமாகாக் கருத்ப்படுகிறது. மேலும் இந்தியத் திரைப்படங்கள், இந்தியத் தொலைக்காட்சி மற்றும் ஒருவேளை உலகத் திரைப்படங்கள் ஆகியவற்றில் மறுபிறவி கருப்பொருளை கையாளும் பல பிற்கால படைப்புகளுக்கு உத்வேகம் அளித்ததாக நம்பப்படுகிறது. இது அமெரிக்கத் திரைப்படமான தி ரீன்கார்நேஷன் ஆஃப் பீட்டர் ப்ரௌட் (1975) மற்றும் இந்தித் திரைப்படமான கர்ஸ் (1980) ஆகிய இரண்டிற்கும் உத்வேகம் அளித்திருக்கலாம். இவை இரண்டும் மறுபிறவி குறித்துக் கையாளப்பட்டு அந்தந்த கலாச்சாரங்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. குறிப்பாக கர்ஸ் பல முறை மறு ஆக்கம் செய்யப்பட்டது. கன்னடத் திரைப்படமான யுக புருஷ் (1989), தமிழ்த் திரைப்படமான எனக்குள் ஒருவன் (1984) மற்றும் மிக சமீபத்தில் பாலிவுட் திரைப்படமான கர்ஸ் (2008) ஆகியன.

சித்தாந்தம்

தொகு

கட்டக் ஒரு கோட்பாட்டாளராகவும் இருந்தார். திரைப்படங்கள் குறித்த இவரது கருத்துக்களும் வர்ணனைகளும் அறிவார்ந்த ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியானது. ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, இவர் ஆண்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை, குறிப்பாக சாமானிய மக்களின் அன்றாட போராட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். வங்காளம் பிரித்து ஒரு புதிய நாட்டை உருவாக்கிய 1947 வங்காளப் பிரிவினையை இவரால் ஒருபோதும் தனது அனைத்து படங்களிலும், இவர் இந்த கருப்பொருளைக் கையாண்டார்.

இவரைப் பொறுத்தவரை, திரைப்படத் தயாரிப்பு என்பது ஒரு கலை வடிவமாகவும், மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வழிமுறையாகவும் கருதினார். படங்கள் மூலம் மக்களின் துயரங்கள் மற்றும் துன்பங்கள் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக்கிக் கொண்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "My husband as I saw him". The Times of India. 17 November 2009 இம் மூலத்தில் இருந்து 20 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181120125931/http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JS00vMjAwOS8xMi8xNyNBcjAyNjAw. 
  2. Partha Chatterjee (19 October 2007). "Jinxed legacy". Frontline. Archived from the original on 2 May 2008. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012.
  3. Carrigy, Megan (December 2003). "Ritwik Ghatak – Great Director Profile". Senses of Cinema. பன்னாட்டுத் தர தொடர் எண்:1443-4059. http://sensesofcinema.com/2003/great-directors/ghatak/. பார்த்த நாள்: 24 June 2012. 
  4. "Na22nd National Film Awards" (PDF). Iffi.nic.in. Archived from the original (PDF) on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 30 July 2012.
  5. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. p. 39. Archived from the original (PDF) on 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
  6. "Controversy". Ramachandraguha.in. Archived from the original on 2 June 2019. பார்க்கப்பட்ட நாள் 30 July 2012.

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ritwik Ghatak
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரித்விக்_கட்டக்&oldid=4175216" இலிருந்து மீள்விக்கப்பட்டது