இரிபந்தர்

கோவாலிலுள்ள ஒரு நகரம்

இரிபந்தர் (Ribandar) என்பது இந்திய மாநிலமான கோவாவின் திசுவாடியில் உள்ள ஒரு நகரமாகும். இது பனஜியிலிருந்து (நோவா கோவா) மற்றும் பழைய கோவா (வெல்ஹா கோவா) நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

இரிபந்தர்
நகரம்
மாண்டோவி ஆறு
இரிபந்தர் is located in கோவா
இரிபந்தர்
இரிபந்தர்
கோவாவில் இரிபந்தரின் அமைவிடம்
இரிபந்தர் is located in இந்தியா
இரிபந்தர்
இரிபந்தர்
இரிபந்தர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°30′10″N 73°51′55″E / 15.50278°N 73.86528°E / 15.50278; 73.86528
நாடுஇந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா மாவட்டம்
துணை மாவட்டம்இஹாஸ்
ஏற்றம்
3 m (10 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்goa.gov.in

சொற்பிறப்பியல்

தொகு

இரிபந்தர் என்ற பெயர் "இராயச்சேம் பந்தர்" என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் ராயர்கள் அல்லது அரசர்களின் நீர்வழியிடை நிலவழி என்பதாகும். எந்த மன்னர்கள் இங்கு குறிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், விஜயநகரப் பேரரசை ஆண்ட முதலாவது சங்கம மரபைச் சேர்ந்த ராயர்கள் இந்த துறைமுகத்தை கட்டியதாக நம்பப்படுகிறது.

நிலவியல்

தொகு

இது 15 ° 30′10 ″ வடக்கிலும் 73 ° 51′55 ″ கிழக்கிலும் அமைந்துள்ளது. மேலும், சராசரியாக 3 மீட்டர் (9.8 அடி) உயரத்தில் உள்ளது . [1]

இது பனஜிமிலிருந்து ரியோ டி உரம் (தங்க ஆறு) ஆறு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மண்டோவி ஆற்றுடன் கலந்து ஒரு பெரிய, அகலமான மற்றும் சதுப்பு நிலப்பரப்பை உருவாக்குகிறது. 1633 ஆம் ஆண்டில் போர்த்துகேய இந்தியா ஆளுநர்களில் ஒருவரான இலின்ஹேர்ஸின் ஆதரவுடன் கட்டப்பட்ட ஒரு பழைய தரைப்பாலத்திற்கு போண்டே கான்டே டி லின்ஹேர்ஸ் என்று பெயரிடப்பட்டது. பொன்டே கான்டே டி லின்ஹேர்ஸின் தெற்கே ஒரு புதிய சாலை பனஜிமிலிருந்து இரிபந்தர், சிம்பெல் மற்றும் பழைய கோவாவிற்கு இன்னும் ஒரு இணைப்பை வழங்குகிறது.

சோர்போ மற்றும் திவார் தீவுகள் முறையே இரிபந்தரின் வடக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ளன. இந்த இரண்டு தீவுகளை படகு மூலம் அணுகலாம்.

கருநாடகாவின் சொந்த கன்னடம் பேசுபவர்களுக்கு சொந்தமான கதம்ப வம்சத்திலிருந்து பிரிந்து சென்ற கிளையால் கோவா ஆட்சி செய்யப்பட்டது. தில்லி சுல்தானகத்தின் சுல்தான் அலாவுதீன் கில்சியின் தளபதி மகமூத் கவான் இதை கைப்பற்றினார். பின்னர், பிரிந்து சென்ற பாமினி சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது. விஜயநகரப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பிஜப்பூர் சுல்தானகத்தின் முதலாம் யூசுப் ஆதில் ஷாவை போர்ச்சுகீசியப் படைத்தலைவரான அபோன்சோ டி அல்புகெர்க்கே 1510 தோற்கடித்து இதை கைப்பற்றினார்.

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இரிபந்தர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிபந்தர்&oldid=3495183" இலிருந்து மீள்விக்கப்பட்டது