இரும்பு(II) புளோரைடு

வேதிச் சேர்மம்

இரும்பு(II) புளோரைடு (Iron(II) fluoride) என்பது FeF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச் சேர்மம் ஒரு நான்கு நீரேற்றாக உருவாகிறது (FeF2·4H2O). பெரும்பாலும் இதே பெயரால் குறிப்பிடப்படுகிறது. நீரற்ற மற்றும் நீரேற்றப்பட்ட வடிவங்கள் வெள்ளை நிறத்தில் படிக திண்மப் பொருள்களாக காணப்படுகின்றன.[1][5]

இரும்பு(II) புளோரைடு
இனங்காட்டிகள்
7789-28-8 நீரிலி Y
13940-89-1 (நான்கு நீரேற்று) N
ChemSpider 74215 Y
InChI
  • InChI=1S/2FH.Fe/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: FZGIHSNZYGFUGM-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2FH.Fe/h2*1H;/q;;+2/p-2
    Key: FZGIHSNZYGFUGM-NUQVWONBAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 522690
  • [Fe+2].[F-].[F-]
UNII NP4W87HLVO Y
பண்புகள்
FeF2
வாய்ப்பாட்டு எடை 93.84 கி/மோல் (நீரிலி)
165.902 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் நிறமற்ற ஒளிபுகும் படிகங்கள்[1]
அடர்த்தி 4.09 கி/செ.மீ3 (நீரிலி)
2.20 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை 970 °C (1,780 °F; 1,240 K) (நீரிலி)
100 °செல்சியசு (நான்கு நீரேற்று)[3]
கொதிநிலை 1,100 °C (2,010 °F; 1,370 K) (நீரிலி)
2.36×10−6[2]
கரைதிறன் எத்தனால், ஈதர் போன்றவற்றில் கரையாது;
HF இல் கரையும்
+9500.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு உரூட்டைல் (நாற்கோணம்), tP6
புறவெளித் தொகுதி P42/mnm, எண். 136
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கடுமையான தோல் தீக்காயங்கள் மற்றும் கண் சேதத்தை ஏற்படுத்துகிறது;
தீ நிலைமைகளின் கீழ் இரும்பு ஆக்சைடுகள் போன்ற அபாயகரமான சிதைவு பொருட்கள் உருவாகும்.[4]
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
தீப்பற்றும் வெப்பநிலை பொருந்தாது[4]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரும்பு(II) குளோரைடு
இரும்பு(II) புரோமைடு
இரும்பு(II) அயோடைடு
இரும்பு(II) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு(II) புளோரைடு
கோபால்ட்டு(II) புளோரைடு]]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கட்டமைப்பு

தொகு

நீரற்ற FeF2 சேர்மம் TiO2 உரூட்டைல் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. எனவே, இரும்பு நேர்மின் அயனிகள் எண்முகமாகவும் புளோரைடு எதிர்மின் அயனிகள் முக்கோண சமதளமாகவும் உள்ளன.[6][7]

நான்கு நீரேற்று வடிவ இரும்பு(II) புளோரைடு இரண்டு கட்டமைப்புகளில் அல்லது பல்லுருக்களில் உள்ளது. ஒரு வடிவம் செஞ்சாய்சதுர வடிவத்திலும் மற்றொன்று அறுகோண வடிவிலும் உள்ளன. செஞ்சாய்சதுர வடிவத்தில் ஒரு சீர்குலைவை கொண்டுள்ளது.[1]

பெரும்பாலான புளோரைடு சேர்மங்களைப் போலவே, இரும்பு(II) புளோரைடின் நீரற்ற மற்றும் நீரேற்றப்பட்ட வடிவங்கள் உயர் சுழல் உலோக மையத்தைக் கொண்டுள்ளன. குறைந்த வெப்பநிலை நியூட்ரான் விளிம்பு வளைவு ஆய்வுகள் FeF2 எதிர்பெர்ரோ காந்ததன்மை பண்பைக் காட்டுகின்றன.[8] வெப்ப திறன் அளவீடுகள் 78.3 கெல்வின் வெப்பநிலையில் எதிர்பெர்ரோ காந்ததன்மை பண்பைக் காட்டும் ஒரு நிகழ்வை வெளிப்படுத்துகின்றன.[9]

இயற்பியல் பண்புகள்

தொகு

இரும்பு(II) புளோரைடு சேர்மம் ஆனது 958 மற்றும் 1178 கெல்வின் வெப்பநிலைகளுக்கு இடையில் பதங்கமாகிறது. தார்சன் மற்றும் நுட்சென் முறைகளைப் பயன்படுத்துகையில் பதங்கமாதல் வெப்பம் சோதனை ரீதியாக தீர்மானிக்கப்பட்டது. இவ்வெப்பநிலை சராசரியாக 271 ± 2 கிலோயூல் மோல்−1 ஆக இருந்தது.[10]

Fe+ க்கான அணுமயமாக்கல் ஆற்றலைக் கணக்கிட பின்வரும் வினை முன்மொழியப்பட்டது:[11]

FeF2 + e → Fe+ + F2 (அல்லது 2F) + 2e

தயாரிப்பு

தொகு

நீரற்ற ஐதரசன் புளோரைடுடன் இரும்பு குளோரைடை சேர்த்து வினை புரியச் செய்வதன் மூலம் நீரற்ற உப்பைத் தயாரிக்கலாம். இது தண்ணீரில் சிறிதளவு கரையக்கூடியதாகும்.[12] (25 °செல்சியசு வெப்பநிலையில் கரைதிறன் தயாரிப்பு Ksp = 2.36×10−6 ஆகும்) இத்துடன் நீர்த்த ஐதரோபுளோரிக் அமிலம், ஒரு வெளிர் பச்சை நிற கரைசலை அளிக்கிறது.[13] as well as dilute ஐதரோபுளோரிக் அமிலம், giving a pale green solution.[1] இது கரிம கரைப்பான்களில் கரையாது.[5]

சூடான நீரேறிய ஐதரோபுளோரிக் அமிலத்தில் இரும்பை கரைத்து எத்தனாலைச் சேர்ப்பதன் மூலம் நான்கு நீரேற்றைத் தயாரிக்க்லாம்.[1] இது ஈரமான காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து இரும்பு(III) புளோரைடு (FeF3)2·9H2O என்ற நீரேற்றைக் கொடுக்கிறது.

பயன்கள்

தொகு

சில கரிம வேதியியல் வினைகளில் இரும்பு(II) புளோரைடு வினையூக்கியாக பயன்படுகிறது.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Penfold, B. R.; Taylor, M. R. (1960). "The crystal structure of a disordered form of iron(II) fluoride tetrahydrate". Acta Crystallographica 13 (11): 953–956. doi:10.1107/S0365110X60002302. 
  2. John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138561632.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  4. 4.0 4.1 Sigma-Aldrich. "Material Safety Data Sheet". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 5 April 2011.
  5. 5.0 5.1 Dale L. Perry (1995), "Handbook of Inorganic Compounds", page 167. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849386718
  6. Stout, J.; Stanley A. Reed (1954). "The Crystal Structure of MnF2, FeF2, CoF2, NiF2 and ZnF2". J. Am. Chem. Soc. 76 (21): 5279–5281. doi:10.1021/ja01650a005. 
  7. M.J.M., de Almeida; M.M.R., Costa; J.A., Paixão (1989-12-01). "Charge density of FeF2" (in en). Acta Crystallographica Section B 45 (6): 549–555. doi:10.1107/S0108768189007664. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-7681. 
  8. Erickson, R. (June 1953). "Neutron Diffraction Studies of Antiferromagnetism in Manganous Fluoride and Some Isomorphous Compounds". Physical Review 90 (5): 779–785. doi:10.1103/PhysRev.90.779. Bibcode: 1953PhRv...90..779E. 
  9. Stout, J.; Edward Catalano (December 1953). "Thermal Anomalies Associated with the Antiferromagnetic Ordering of FeF2, CoF3, and NiF2". Physical Review 92 (6): 1575. doi:10.1103/PhysRev.92.1575. Bibcode: 1953PhRv...92.1575S. 
  10. Bardi, Gianpiero; Brunetti, Bruno; Piacente, Vincenzo (1996-01-01). "Vapor Pressure and Standard Enthalpies of Sublimation of Iron Difluoride, Iron Dichloride, and Iron Dibromide". Journal of Chemical & Engineering Data 41 (1): 14–20. doi:10.1021/je950115w. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9568. 
  11. Kent, Richard; John L. Margrave (November 1965). "Mass Spectrometric Studies at High Temperatures. VIII. The Sublimation Pressure of Iron(II) Fluoride". Journal of the American Chemical Society 87 (21): 4754–4756. doi:10.1021/ja00949a016. 
  12. W. Kwasnik "Iron(II) Fluoride" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 266.
  13. "SOLUBILITY PRODUCT CONSTANTS" (PDF). Archived from the original (PDF) on 2018-07-12. பார்க்கப்பட்ட நாள் 2016-11-07.
  14. Wildermuth, Egon; Stark, Hans; Friedrich, Gabriele; Ebenhöch, Franz Ludwig; Kühborth, Brigitte; Silver, Jack; Rituper, Rafael (2005), "Iron Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a14_591

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_புளோரைடு&oldid=3894009" இலிருந்து மீள்விக்கப்பட்டது