இலங்கா (இனம்)

பஞ்சாபி முஸ்லிம் இனம்

இலங்கா (Langah) என்பது பலுச்சிசுத்தானம், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாபில் இருக்கும் ஒரு பழங்குடியினமாகும்.[1][2] இவர்கள் ஜாட் [3][4][5][6][7] மற்றும் இராஜ்புத்திரர் என கருதப்படுகிறார்கள்.[8]

இலங்கா
பகுதிபஞ்சாப் பகுதி, சிந்து மாகாணம்

கி.பி.1445 முதல் 1540 வரை, அர்குன்களால் விரட்டியடிக்கப்படுவதற்கு முன்பு, 1445 முதல் 1540 வரை தெற்கு பஞ்சாபில் உள்ள முல்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த இலங்கா சுல்தானகத்தை நிறுவுவதில் இவர்கள் பெரும்பாலும் அறியப்படுகின்றனர்.[9]

பழங்குடியினரான இவர்கள் தங்களது பல்வேறு தலைவர்களின் கீழ் முல்தான் பிராந்தியத்தில் ஒரு முக்கிய சக்தியாக தொடர்ந்து இருந்தனர். உமாயூனின் பின்வாங்கலின் போது, தலைவன் பக்சு கான் இலங்கா முல்தானைச் சுற்றியுள்ள பல கோட்டைகளைக் கட்டுப்படுத்தினார். பின்வாங்கிய முகலாய இராணுவத்திற்கு 100 படகுகளில் தானியங்களை வழங்கினார். [10] பின்னர், பக்சு முல்தான் பிராந்தியத்தில் தனது சுதந்திர ஆட்சியை நிறுவிய சூர் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இலங்காக்களை வழிநடத்தினார், இருப்பினும் அவர் சூர் தளபதி ஐபத் கானால் தோற்கடிக்கப்பட்டார்.[11]

அக்பரின் ஆட்சியில், இலங்காவின் ஒரு பகுதியினர் சோர் பகுதியை ( பர்கனா ) (இன்றைய ஜாங் மாவட்டம் )[12] வைத்திருந்தனர். இலங்காவின் மகன் சேர் அலி கஸ்பா தீசாவின் சிக்தாராக இருந்தார். [13]

ஆங்கிலேயர் காலத்தில், இலங்கா பழங்குடியினர் முல்தான் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் செனாப் மற்றும் சத்லஜ் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு முக்கிய பழங்குடியினராகக் கருதப்பட்டனர்.[14]

மேற்கோள்கள் தொகு

  1. Siddiqui, Habibullah (1987) (in en). Education in Sind: Past and Present. Institute of Sindhology, University of Sind. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-969-405-009-6. https://books.google.com/books?id=hmQdAAAAMAAJ&q=langah. 
  2. Panhwar, M.H (1983). Chronological Dictionary of Sindh (From Geological Times to 1539 A.D.). Institute of Sindhology, University of Sind, Jamshoro. பக். 346. https://archive.org/details/chronologicaldictionaryofsindh_201912/page/n499/mode/2up. 
  3. Bhatia, S. (1987) (in en). Social Change and Politics in Punjab, 1898-1910. Enkay Publishers. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85148-13-7. https://books.google.com/books?id=qnVuAAAAMAAJ. பார்த்த நாள்: 2022-07-29. "The Jats were divided into several tribes . In the Western plain ( i.e. , West of Lahore ) excluding the salt range , and sub - montane tracts were to be found the Tahim , Butta , Langah , Sumra , Sipra and Hans" 
  4. Lambrick, H. T. (1975). Sind : a general introduction. Hyderabad: Sindhi Adabi Board. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-577220-2. இணையக் கணினி நூலக மையம்:2404471. 
  5. Wagha, A. (1990). The Siraiki Language: Its Growth and Development. Dderawar Publications. https://books.google.com/books?id=IOljAAAAMAAJ. பார்த்த நாள்: 2022-08-03. "In the first quarter of the 16th century A.D. the Langah Jat rulers of Multan encouraged the Balochs to be settled in Derajat by granting Jageers in return for which they were to render as military service." 
  6. Pakistan Historical Society (1995). Journal of the Pakistan Historical Society. Pakistan Historical Society.. பக். 167. https://books.google.com/books?id=MPltAAAAMAAJ. பார்த்த நாள்: 2022-08-09. "...Mahmūd - ul - Hasan Siddiqui has classified them as Jats" 
  7. "History of the Arghuns and Tarkhans of Sind (1507-1593): An Annotated Translation of the Relevant Parts of Mir Ma'sum's "Ta'rikh-i-Sind," with an Introduction and Appendices". ProQuest. பார்க்கப்பட்ட நாள் 2022-08-09. Origin of the Langahs:.. They are now classed as Jats"
  8. (in en) Population by Geographical Levels: Punjab (including the Federal Capital Territory Islamabad). Census Organisation, Interior Division. 1974. பக். 73. https://books.google.com/books?id=AejnYzjnZ3oC. 
  9. Qanungo, Kalika Ranjan; Kānūnago, Kālikā Rañjana (1965) (in en). Sher Shah and His Times. Orient Longmans. பக். 286. https://books.google.com/books?id=Ue9tAAAAMAAJ&q=langah+sultanate. "Under the shadow of Rajput Langah dynasty of Multan..." 
  10. Singh, Surinder (2022-03-28). Medieval in Transition. London: Routledge. பக். 83. doi:10.4324/9781003302452. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-003-30245-2. "On his way to Bhakkar, he contacted Bakhshu Langah, who possessed numerous fortified places and a large number of boats. Humayun sent for him a banner, robe, horse and drum. Bakhshu Langah provided him a hundred boats loaded with grain, which was distributed among the Mughal soldiers." 
  11. Srivastava, A.L. (1964). The Mughal Empire, 1526-1803 A.D.. Shiva Lal Agarwala. பக். 93. https://books.google.com/books?id=f6k9AAAAIAAJ. பார்த்த நாள்: 2023-11-05. 
  12. Ahmed, Iftikhar (1984). "TERRITORIAL DISTRIBUTION OF JATT CASTES IN PUNJAB c. 1595 - c. 1881". Proceedings of the Indian History Congress (Indian History Congress) 45: 432. பன்னாட்டுத் தர தொடர் எண்:22491937. http://www.jstor.org/stable/44140224. பார்த்த நாள்: 2023-11-05. 
  13. Khan, A.R. (1977). Chieftains in the Mughal Empire During the Reign of Akbar. Indian Institute of Advanced Study. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89684-376-9. https://books.google.com/books?id=shAdAAAAMAAJ. பார்த்த நாள்: 2023-11-05. 
  14. Roseberry, J.R. (1988). Imperial Rule in Punjab: The Conquest and Administration of Multan, 1818-1881. Vanguard. பக். 177. https://books.google.com/books?id=zCcNAAAAIAAJ. பார்த்த நாள்: 2023-11-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கா_(இனம்)&oldid=3858538" இலிருந்து மீள்விக்கப்பட்டது