இலங்கைத் தமிழர் உரிமைப் போர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கைத் தமிழர் உரிமைப் போர் என்பது நான்காம் ஈழப்போரின் இறுதிகட்டத்தில் வன்னியில் நடந்த ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்தும், உடனடி நிவாரணம் கோரியும், தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை கோரியும் உலகெங்கும் மார்ச் 19, 2009 திங்கட்கிழமை நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களைக் குறிக்கிறது.
தமிழ் மக்களின் தன்னாட்சி, தாயகம், தேசியம், மனித உரிமைகளை இலங்கை அரசு மதிக்க சர்வதேச சமூகம் அழுத்தம் தரும் வண்ணம் இந்த போராட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன. மக்கள், ஊடகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய நான்கு தளங்களையும் இலக்காகக் கொண்டு இப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.