இலங்கைப் பூங்குருவி
இலங்கைப் பூங்குருவி | |
---|---|
ஆண் & பெண் பூங்குருவி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மையோபோனசு
|
இனம்: | மை. பிளைகி
|
இருசொற் பெயரீடு | |
மையோபோனசு பிளைகி கோல்டுசுவொர்த், 1872 | |
மஞ்சள் — உயர் நிலப் பகுதியில் பரம்பல் |
இலங்கைப் பூங்குருவி (Sri Lanka whistling thrush)(மையோபோனசு பிளைகி) என்பது மியூசிகாபிடே குடும்பத்தினைச் சார்ந்த விசிலடிச்சான் பூங்குருவி சிற்றினம் ஆகும். இது இலங்கையில் வசிக்கும் அகணிய உயிரி ஆகும்.
இது இலங்கையின் மலைப்பகுதி காடு அல்லது அடர்ந்த காடுகளுக்கு அருகில் காணப்படுகிறது. இது அனைத்துண்ணி வகையினை சார்ந்தது. பூச்சிகள், தவளைகள், மண்புழுக்கள் மற்றும் பெர்ரிகளை உண்ணும். இது ஒன்று அல்லது இரண்டு முட்டைகளைப் புதர் அல்லது தண்ணீருக்கு அருகில் உள்ள கோப்பை வடிவிலான கூட்டில் இடுகிறது.
கூட்டமாக வாழும் பழக்கமில்லாத, இந்தப் பறவைகள் பொருத்தமான வாழ்விடத்தில் தளர்வானத் தொடர்புடையதாக இருக்கலாம்.
இது அளவில் சிறிய விசிலடிச்சான் பூங்குருவி ஆகும். இதன் நீளம் 20 செ.மீ. வயது முதிர்ந்த ஆண் குருவியின் தலை மற்றும் பின்புறம் அடர் நீல நிறத்தில் இருக்கும். தோள்கள், சூப்பர்சிலியா மற்றும் நெற்றிப் பகுதி பிரகாசமான நீல நிற திட்டுடன் காணப்படும். பெண் குருவியின் மேற்பகுதி பழுப்பு நிறமாகவும், கீழ்ப்பகுதி கசுகொட்டை நிறத்திலும், ஆணின் முன் இறக்கைப் பகுதி பிரகாசமான நீல நிறத்தில் காணப்படும்.
ஆண் தனது எளிய விசில் ஓசையினை மரங்களிலிருக்கும் போது எழுப்பும்.
பிப்ரவரியில் தொடங்கும் இனப்பெருக்க காலத்தில், ஆண் பறவைகள் பாடுவதைப் பார்ப்பது கடினமானது. இந்த பறவையினம் மிகவும் வெட்கப்படக்கூடியது, அரிதானது, உள்ளூர் மயமாக்கப்பட்டது. இதனுடைய எண்ணிக்கை வாழ்விட இழப்பு காரணமாகக் குறைந்து வருகிறது. இலங்கையின் மலையகத்தில் 2000 மீற்றர் உயரத்தில் உள்ள ஒட்டன் சமவெளி தேசிய பூங்காவிலும் நுவரெலியா நகருக்கு அருகில் உள்ள கக்கலை தாவரவியற் பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு தளத்திலும் விடியற்காலையில் இவற்றைக் காணச் சிறந்த நேரமாக உள்ளது.
கலாச்சாரத்தில்
தொகுஇலங்கையில் இந்தப் பறவை சிங்கள மொழியில் லங்கா அரங்கயா என்று அழைக்கப்படுகிறது. இலங்கை பூங்குருவியின் படமானது இலங்கையின் 75c அஞ்சல் முத்திரையில் இடப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Myophonus blighi". IUCN Red List of Threatened Species 2016: e.T22708292A94155624. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22708292A94155624.en. https://www.iucnredlist.org/species/22708292/94155624. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Birds on stamps: Sri Lanka".
வெளி இணைப்புகள்
தொகு- இலங்கை பூங்குருவி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- இலங்கை பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் பூங்குருவி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் 2
- இலங்கை பூங்குருவி3 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- கிரிம்மெட், இன்ஸ்கிப் மற்றும் இன்ஸ்கிப் மூலம் இந்தியாவின் பறவைகள் ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6
- கிளெமென்ட் மற்றும் ஹாத்வேயின் த்ரஷ்ஸ் ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3940-7