இலங்கை தேசிய பூங்காக்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தேசிய பூங்காக்கள் இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகும். இவை வன சீவராசிகளின் பாதுகாப்பு திணைக் களத்தினால் 1937 ஆம் ஆண்டின் விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளை (எண் 2) ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. இக் கட்டளைச் சட்டம் அமைச்சக ஒழுங்கமைப்பு மூலம் திருத்தப்படலாம் அல்லது அகற்றப்படலாம்.[1] தேசிய பூங்காக்களின் நிலங்கள் அனைத்தும் அரசுக்கு உரித்தானவை. அரசினால் பாதுகாக்கப்படுகின்றன. [1]இலங்கையில் 26 தேசிய பூங்காக்கள் உள்ளன.[2] இவை 5,734 சதுர கி.மீ (2,214 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. தேசிய பூங்காக்களை பார்வையிட அனுமதி பத்திரம் அவசியம் ஆகும்.[2]

தேசிய பூங்காக்களில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் தொகு

  • வேட்டையாடுதல், கொலை செய்தல்
  • பறவைகள் மற்றும் ஊர்வன முட்டைகளை / கூடுகள் அழித்தல்.
  • காட்டு விலங்குகளை தொந்தரவு செய்தல்.
  • விலங்குகளின் இனப்பெருக்கத்தில் குறுக்கிடுவது.
  • தாவரங்களை சேதப்படுத்தல்.
  • சாகுபடி, சுங்க, பிற வேலைகளுக்காக நிலத்தை உடைத்தல்.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகளை சேதப்படுத்தக் கூடிய பொறி, வெடிகள், நச்சுப் பதார்த்தங்கள், தீ பற்றக் கூடிய பொருட்களை வைத்திருத்தல் அல்லது பயன்படுத்தல்.

தேசிய பூங்காக்கள் தொகு

தேசிய பூங்கா படம் அமைவிடம் நிறுவப்பட்ட தினம்[2][3]
பரப்பளவு[2][3][4]
km² mi²
ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம்   வட மாகாணம், இலங்கை 22 சூன் 2015 190 73
அங்கம்மெடில்லை தேசிய வனம்   வடமத்திய மாகாணம், இலங்கை 6 சூன் 2006 75 29
பூந்தல தேசிய வனம்   தென் மாகாணம், இலங்கை 4 சனவரி 1993 62 24
சுண்டிக்குளம் தேசிய வனம் வட மாகாணம், இலங்கை 22 சூன் 2015 196 76
நெடுந்தீவு தேசிய வனம்   வட மாகாணம், இலங்கை 22 சூன் 2015 18 7
வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம் வடமத்திய மாகாணம், இலங்கை 7 ஆகத்து 1984 174 67
கல்லோயா தேசிய வனம்   கிழக்கு மாகாணம், இலங்கை ஊவா மாகாணம் 12 பெப்ரவரி 1954 259 100
கல்வே நில தேசிய வனம் மத்திய மாகாணம், இலங்கை 18 மே 2006 0 0
இக்கடுவை தேசிய வனம் தென் மாகாணம், இலங்கை 8 அக்டோபர் 2002 1 0
ஹொரோகொல்லை தேசிய வனம் மேல் மாகாணம், இலங்கை 28 சூலை 2004 0 0
ஹொரோபத்தானை தேசிய வனம் 6 திசம்பர் 2011 26 10
ஓட்டன் சமவெளி தேசிய வனம்   மத்திய மாகாணம், இலங்கை 16 மார்ச்சு 1988 32 12
கவுடுல்ல தேசிய வனம்   வடமத்திய மாகாணம், இலங்கை 1 ஏப்ரல் 2002 69 27
குமண தேசிய வனம் (கிழக்கு யால)   கிழக்கு மாகாணம், இலங்கை 20 சனவரி 1970 181 70
லுகுகல கித்துலனை தேசிய வனம் கிழக்கு மாகாணம், இலங்கை 31 அக்டோபர் 1980 16 6
லுணுகம்விகார தேசிய வனம்   தென் மாகாணம், இலங்கைஊவா மாகாணம் 8 திசம்பர் 1995 235 91
மடு வீதி தேசிய வனம் வட மாகாணம், இலங்கை 22 சூன் 2015 164 63
மாதுரு ஓயா தேசிய பூங்கா   கிழக்கு மாகாணம், இலங்கைஊவா மாகாணம் 9 நவம்பர் 1983 588 227
மின்னேரியா தேசிய வனம்   வடமத்திய மாகாணம், இலங்கை 12 ஆகத்து 1997 89 34
புறாத்தீவு தேசிய பூங்கா   கிழக்கு மாகாணம், இலங்கை 24 சூன் 2003 5 2
சோமாவதிய தேசிய வனம்   கிழக்கு மாகாணம், இலங்கைவடமத்திய மாகாணம், இலங்கை 2 செப்டம்பர் 1986 376 145
உடவளவை தேசியப் பூங்கா   சப்ரகமுவா மாகாணம்ஊவா மாகாணம் 30 சூன் 1972 308 119
உஸ்ஸங்கொட தேசிய வனம்   தென் மாகாணம், இலங்கை 6 மே 2010 3 1
வஸ்கமுவை தேசிய வனம்   மத்திய மாகாணம், இலங்கைவடமத்திய மாகாணம், இலங்கை 7 ஆகத்து 1984 371 143
வில்பத்து தேசிய வனம்   வடமத்திய மாகாணம், இலங்கைவடமேல் மாகாணம், இலங்கை 25 பெப்ரவரி 1938 1,317 508
யால தேசிய வனம் (ருகுண)   தென் மாகாணம், இலங்கைஊவா மாகாணம் 25 பெப்ரவரி 1938 979 378
மொத்தம் 5,734 2,214

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "IUCN Directory of South Asian Protected Areas". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "National Parks". https://en.m.wikipedia.org/wiki/Department_of_Wildlife_Conservation_(Sri_Lanka). Archived from the original on 2016-01-20. {{cite web}}: External link in |website= (help)
  3. 3.0 3.1 The National Atlas of Sri Lanka (2nd ed.). Department of Survey. 2007. ISBN 955-9059-04-1.
  4. Senarathna, P.M. (2005). Sri Lankawe Wananththra (in Sinhala) (1st ed.). Sarasavi Publishers. ISBN 955-573-401-1.