இலங்கை மர நண்டு

இலங்கை மர நண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
ஜிகேர்சினுசிடே
பேரினம்:
இனம்:
பெர்பிரின்கியா இசுகேன்சர்
வேறு பெயர்கள்
  • ஓசியோதெல்பூசா இசுகேன்சர் என்ஜி, 1995

இலங்கை மர நண்டு, (Sri Lanka tree crab)(பெர்பிரின்கியா இசுகேன்சர் ) என்பது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது ஜிகேர்சினுசிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் நண்டு வகையாகும்.

விளக்கம்

தொகு

இலங்கை நாட்டில் காணப்படும் மரத்தில் ஏறும் நன்னீர் நண்டு இது ஒன்றேயாகும். இலங்கை மர நண்டு, இலங்கையில் களுகங்கை ஆறு, வளவை ஆறு மற்றும் கிங்கங்கை ஆற்றுப் படுகைகள் முழுவதும் 11 இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சோரியா சிற்றினம், ஆர்ட்டோகார்பசு சிற்றினம் தில்லேனியா சிற்றினம், கார்சினியா சிற்றினம், மிரிசுடிகா சிற்றினம் மற்றும் ஜிரினோப்சு வாலா போன்ற மரங்களின் மழைநீர் நிரம்பிய மரங்களின் குழிகளில் முதிர்வடைந்த நண்டுகள் உயிர்வாழ்வதாக அறியப்படுகிறது. இளம் நண்டுகள் மற்றும் பெண் நண்டுகளைப் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இம்மரக் குழிகளுக்குள் காண முடியாது. செம்போத்து, வெண்தொண்டை மீன்கொத்தி, இலங்கை சாம்பல் இருவாய்ச்சி மற்றும் யூரேசிய நீர்நாய் இந்நண்டினை வேட்டையாடும் விலங்குகளாகும்.[1]

அச்சுறுத்தல்கள்

தொகு

இந்த சிற்றினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் வாழ்விடங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. மத்திய மலைப்பகுதிகளின் நீர்நிலைகள் அயல்நாட்டு வகை மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் தாவரங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மேலும் பல பகுதிகளில் மனித வாழ்விடம் பயன்பாடு இந்த விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்படுகிறது. இந்த நண்டுகள் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Mendis, Risidra (3 March 2015). "A crab? On a tree?". The Ceylon Today. Archived from the original on 5 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia scansor". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T61734A12550361. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61734A12550361.en. http://www.iucnredlist.org/details/61734/0. பார்த்த நாள்: 27 December 2017. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மர_நண்டு&oldid=3607954" இலிருந்து மீள்விக்கப்பட்டது