இலட்சுமிகாந்த்-பியாரேலால்
இலட்சுமிகாந்த்-பியாரேலால் (Laxmikant–Pyarelal) இவர்கள் ஓர் பிரபலமான மற்றும் வெற்றிகரமான இந்திய இரட்டை இசையமைப்பாளர்கள் ஆவர். இதில் இலட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் (1937-1998) மற்றும் பியாரேலால் 'ராம்பிரசாத் சர்மா (பிறப்பு 1940) ஆகிய இருவரும், இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளராக கருதப்படுகின்றனர். மேலும், 1963 முதல் 1998 வரை சுமார் 750 இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராஜ் கபூர், தேவ் ஆனந்த், பி.ஆர்.சோப்ரா, சக்தி சமந்தா, மன்மோகன் தேசாய், யஷ் சோப்ரா போனி கபூர், ஜே. ஓம் பிரகாஷ், ராஜ் கோஸ்லா, எல்.வி.பிரசாத், சுபாஷ் கய், கே விஸ்வநாத், மனோஜ் குமார் உட்பட கிட்டத்தட்ட அனைத்து குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குநர்களுக்காகவும் பணியாற்றியுள்ளனர்.[1][2][3]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇலட்சுமிகாந்த் | |
---|---|
இயற்பெயர் | இலட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் |
பிறப்பு | மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய மும்பை, மகாராட்டிரம், இந்தியா) | 3 நவம்பர் 1937
இறப்பு | 25 மே 1998 நானாவதி மருத்துவமனை, மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 60)
இசைத்துறையில் | 1947–1998 |
இலட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் இந்தியாவின் தீப ஒளித் திருநாளான தீபாவளி அன்று1937 நவம்பர் 3 அன்று பிறந்தார். இந்த நாள் லட்சுமி பூஜை நாள் என்பதால் இவரது பெற்றோர் இவருக்கு இலட்சுமிமிகாந்த் என்று பெயரிட்டனர். மும்பையில் உள்ள வைல் பார்லே (கிழக்கு) சேரிகளில் கடுமையான வறுமைக்கு மத்தியில் அவர் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். இவரது தந்தை இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்தார். குடும்பத்தின் மோசமான நிதி நிலைமை காரணமாக இவரால் கல்வியை முடிக்க முடியவில்லை. ஒரு இசைக்கலைஞரான இவரது தந்தையின் நண்பர் இவருக்கும், இவரது மூத்த சகோதரருக்கும் இசையைக் கற்க அறிவுறுத்தினார். அதன்படி, இவர் மாண்டலின் வாசிக்க கற்றுக்கொண்டார். இவரது மூத்த சகோதரர் கைம்முரசு இணை (தபலா) வாசிக்க கற்றுக்கொண்டார். இவர் பிரபலமான மாண்டலின் கைலைஞர் உசைன் அலியின் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்தார். பின்னர், 1940 களில், பால் முகுந்த் இந்தோர்க்கரிடமிருந்து மாண்டலினையும், உசன்லால் என்பவரிடம் வயலினையும் கற்றுக்கொண்டார். லட்சுமிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையை பக்த் புண்டலிக் (1949) ஆன்கேன் (1950) போன்ற படங்களில் குழந்தை நடிகராகத் தொடங்கினார். சில குஜராத்தி படங்களிலும் நடித்தார்.[3]
பியாரேலால்
தொகுபியாரேலால் | |
---|---|
இயற்பெயர் | பியாரேலால் ராம்பிரசாத் சர்மா |
பிறப்பு | 3 செப்டம்பர் 1940 வாடியா மருத்துவமனை, பரேல், மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இசைத்துறையில் | 1952– தற்போது வரை |
பியாரேலால் ராம்பிரசாத் சர்மா (பிறப்பு: செப்டம்பர் 3, 1940) ஒரு புகழ்பெற்ற எக்காளக் கலைஞரான இவரது தந்தை பண்டிட் ராம்பிரசாத் சர்மா (பிரபலமாக பாபாஜி என்று அழைக்கப்படுபவர்) தனது மகனுக்கு இசையின் அடிப்படைகளை கற்பித்தார். இவர் தனது 8 வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். இவர் அந்தோனி கோன்சால்வ்சு என்ற கோன் இசைக்கலைஞரிடமிருந்தும் வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார். அமர் அக்பர் அந்தோணி திரைப்படத்தின் " மை நேம் இஸ் அந்தோனி கோன்சால்வ்சு " பாடல் திரு. கோன்சால்வ்சுக்கு அஞ்சலி செலுத்துவதாக கருதப்படுகிறது (இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இசையமைத்திருந்தனர்). இவர், தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதிப்பதற்காக ரஞ்சித் ஸ்டுடியோஸ் போன்ற அரங்கங்களில் அடிக்கடி வயலின் வாசிப்பார். இவரது சகோதரர் கோரக் சர்மா இவருடன் சேர்ந்து பல்வேறு பாடல்களுக்கு கித்தார் வாசித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "How did Laxmikant-Pyarelal end Shankar-Jaikishan era in Bollywood? Happier, cheaper music". ThePrint. 2021-11-16. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
- ↑ "Review: Music by Laxmikant Pyarelal by Rajiv Vijayakar". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-04-28. பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
- ↑ 3.0 3.1 Ashok Da. Ranade (1 January 2006). Hindi Film Song: Music Beyond Boundaries. Bibliophile South Asia. pp. 310–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85002-64-4.