இலதாம் உள்ளான்
இலதாம் உள்ளான் (Latham's snipe)(கல்லினாகோ கார்ட்விக்கி), சப்பான் உள்ளான் என்றும் அழைக்கப்படுகிறது. இது நடுத்தர அளவிலான, நீண்ட அலகு கொண்டு கிழக்கு ஆசியா-ஆத்திரேலேசிய பகுதிகளுக்கு வலசை செல்லக்கூடிய பறவை ஆகும்.
இலதாம் உள்ளான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | கல்லினாகோ
|
இனம்: | G. hardwickii
|
இருசொற் பெயரீடு | |
Gallinago hardwickii (கிரே, 1831) |
விளக்கம்
தொகுஇலதாம் உள்ளானின் உடல் நீளம் 29 முதல் 33 செ.மீ. வரை இருக்கும் இதன் இறக்கை நீட்டம் 50 முதல் 54 செ.மீ. வரையும் எடை 150 முதல் 230 கிராம் வரை இருக்கும்.
அடையாளம்
தொகுஇலதாம் உள்ளான்கலினாகோ உள்ளான் என இதன் மறைமுக வடிவிலான கருப்பு, பழுப்பு, பஃப் மற்றும் வெள்ளை நிற இறகுகளால் அடையாளம் காண முடியும். ஆனால் வயலில் காணப்படும் சுவின்ஹோ உள்ளான் மற்றும் ஊசிவால் கோரை உள்ளானிலிருந்து எளிதாக வேறுபடுத்த முடியாது. இருப்பினும் இவற்றை விட இலதாம் உள்ளான் சற்று பெரியது.
பரவலும் வாழிடமும்
தொகுஇலதாம் உள்ளான் முக்கியமாக வடக்கு சப்பானில் உள்ள ஹொக்கைடாவில் இனப்பெருக்கம் செய்கிறது. ஒன்சூ, கிழக்கு உருசியா நிலப்பரப்பு மற்றும் சக்கலின் மற்றும் கூரில் தீவுகளில் சிறிய எண்ணிக்கையில் உள்ளது. ஒட்டுமொத்த பறவைகளும் இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் முக்கியமாகக் கிழக்கு ஆத்திரேலியாவிற்கு வலசை சென்று செலவிடுகின்றன. இங்கு இது மிகவும் பொதுவான கலினாகோ உள்ளான் ஆகும். இது தைவான், பிலிப்பீன்சு மற்றும் நியூ கினியாவில் இடம்பெயர்ந்ததில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது நியூசிலாந்தில் அரிதாகக் காணப்படும்.
ஆசியாவில் இந்த உள்ளானின் இனப்பெருக்க வாழ்விடம் அல்பைன் மூர்லேண்ட், புல்வெளிகள், கரடுமுரடான மேய்ச்சல் பகுதி, இளம் மரத்தோட்டங்கள் மற்றும் பயிரிடப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. ஆத்திரேலியாவில் இனப்பெருக்கம் செய்யாத வாழ்விடங்களாக ஆழமற்ற நன்னீர் ஈரநிலங்கள், சேறு அல்லது மேலோட்டமான நீர்ப்பகுதி ஆகும்.
நடத்தை
தொகுஇனப்பெருக்கம்
தொகுபெண் பறவைகளைக் கவர ஆண் பறவைகள் வானில் வட்டமடித்தும் ஓசை எழுப்பியும் கவருகின்றன. தரையில் கூடமைத்து, கூடுகளைத் தாவரங்களைக் கொண்டு மறைத்து நான்கு முட்டைகள் வரை இடுகின்றன.
உணவு
தொகுஇலதாம் உள்ளான் என்பது அனைத்துண்ணி வகையினைச் சார்ந்தது. இது விதை மற்றும் பிற தாவரப் பொருட்களை (முக்கியமாக சைபெர்சியே, பொவெசி, ஜூன்கேசியே, பாலிகோனாசியே, இரானுகுலேசியே மற்றும் பபேசியா குடும்பங்களில் உள்ள இனங்கள்), மற்றும் பூச்சிகள், மண்புழு மற்றும் வண்டு உட்பட முதுகெலும்பில்லாத உயிரினங்கள்) மற்றும் மெல்லுடலி, ஐசோபாட்கள் மற்றும் பூரான்களை உண்ணும்.
பாதுகாப்பு நிலை
தொகுபன்னாட்டு அளவில், இலாதம் உள்ளான் அச்சுறுத்தலுக்கு அருகில் அண்மித்த இனமாகக் கருதப்படுகிறது. ஆத்திரேலியாவில் முன்பு விளையாட்டுப் பறவையாக வேட்டையாடப்பட்டது. ஆனால் இப்போது முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. இது தெற்கு ஆத்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சட்டம் 1972-ன் கீழ் "அரிதானது" எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2022). "Gallinago hardwickii". IUCN Red List of Threatened Species 2022: e.T22693078A209318491. doi:10.2305/IUCN.UK.2022-3.RLTS.T22693078A209318491.en. https://www.iucnredlist.org/species/22693078/209318491. பார்த்த நாள்: 21 July 2022.
- BirdLife International. (2006). Species factsheet: Gallinago hardwickii. Downloaded from http://www.birdlife.org on 9 February 2007
- Fujimaki, Y.; & Skira, I.J. (1984). Notes on Latham's Snipe, Gallinago hardwickii, in Japan. Emu 84: 49–51.
- Higgins, P.J.; & Davies, J.N. (eds). (1996). Handbook of Australian, New Zealand and Antarctic Birds. Volume 3: Snipe to Pigeons. Oxford University Press: Melbourne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-553070-5
- Lane, Brett; & Davies, Jeff. (1987). Shorebirds in Australia. RAOU: Melbourne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-17-006824-2