இலீலாவதியின் பெண்கள்
இலீலாவதியின் பெண்கள் (Lilavati's Daughters) இந்தியாவின் பெண் விஞ்ஞானிகள் பற்றிய வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கிட்டத்தட்ட நூறு பெண் அறிவியலாளர்கள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளனர். பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு இத்தொகுப்பை வெளியிட்டது.[1] புத்தகத்தை ரோகிணி காத்போல் மற்றும் ராம் ராமசாமி ஆகியோர் தொகுத்தனர். விமர்சனங்கள் தி இந்து, [2] நேச்சர் [3] மற்றும் சி அண்ட் இ நியூசு [4] ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இந்தியாவில் பணிபுரியும் பெண் விஞ்ஞானிகளின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்று மற்றும் சுயசரிதை ஓவியங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
பதிப்பாசிரியர்கள் | ரோகிணி காத்போல், ராம் ராமசாமி |
---|---|
அட்டைப்பட ஓவியர் | திரினாங்கூர் பானர்ச்சி |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வகை | வாழ்க்கை வரலாறு அறிவியலில் பெண்கள் |
வெளியீட்டாளர் | இந்திய அறிவியல் கழகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2008 |
ஊடக வகை | அச்சு |
பக்கங்கள் | 368 |
ISBN | 9788184650051 |
OCLC | 458284313 |
பல துறைகளை உள்ளடக்கிய இந்த கட்டுரைகள் அறிவியலாளர்களின் வாழ்க்கை, அவர்களை அறிவியலுக்கு கொண்டு வந்தவை, அவர்களின் ஆர்வத்தை உயிருடன் வைத்திருப்பவை மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஒருவித வேறுபாட்டை அடைய உதவியவை பற்றி பேசுகின்றன. இந்தத் தொகுப்பு நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையையும், பலதரப்பட்ட துறைகளையும் குறிப்பிடுகிறது. இதனால் எந்தவொரு மாணவரும் தொழில்முறை பெண்களின் நுண்ணறிவு மற்றும் அனுபவங்களிலிருந்து பல மட்டங்களில் தொடர்புபடுத்த முடியும்.
இந்திய கணிதவியலாளர் இரண்டாம் பாசுக்கரா எழுதிய 12 ஆம் நூற்றாண்டின் கட்டுரையான லீலாவதிஎன்பதிலிருந்து இந்த தலைப்பு உருவாகியுள்ளது. இவருடைய நூலில் கணித, இயற்கணிதம், வடிவியல் போன்றவற்றின் சிக்கல்கள் அவரது மகள் லீலாவதிக்கு உரையாற்றப்பட்ட கவிதை உரையாடல்கள் மூலம் விவாதிக்கப்படுகின்றன. [5] ]
லீலாவதியின் மகள்கள் புத்தகம் கேரள சாசுத்திர சாகித்ய பரிசத்தால் "லீலவதியுட பென்மக்கள்" என்று மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ராம் ராமசாமி, ரோகிணி காத்போல் மற்றும் மண்டகினி துபே ஆகியோர் லீலாவதியின் மகள்கள் நூலின் குறுகிய மற்றும் வேறுபட்ட பதிப்பாக "அறிவியல் வாழ்க்கைக்கான பெண்களுக்கான வழிகாட்டி" என்று ஒரு நூலை வெளியிட்டனர். புது தில்லியிலுள்ள யங் சூபான் பதிப்பகம் இவர்களுடன் இணைந்து இப்புத்தகத்தை வெளியிட்டது. பெங்களூரு இந்திய அறிவியல் அகாடமியின் அறிவியலில் மகளீரை முன்னிலைப்படுத்தும் முன்முயற்சியாகும்.
பொருளடக்கம்
தொகுதாவரவியலாளரான ஈ.கே ஜானகி அம்மாள், வேதியியலாளர் அசீமா சாட்டர்ச்சி மற்றும் தர்சன் ரங்கநாதன் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய்க்கு யோசீ, மாந்தவியலாளர் ஐராவதி கார்வே, உயிர்வேதியியலாளர் கமலா சோகோனி, மருத்துவ ஆராய்ச்சியாளர் கமல் ராணாதிவ், இயற்பியலாளர் பி விசயலட்சுமி மற்றும் வானியல் அண்ணா மணி உள்ளிட்ட அறிவியலாளர்களின் வரலாறுகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் சுயசரிதை ஓவியங்கள், தற்போது இந்தியாவில் பணிபுரியும் பலர் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்கள். மேலும் விவரங்களை இந்தியன் அறிவியல் அகாடமி இணையதளத்தில் காணலாம். [6]
மேற்கோகள்
தொகு- ↑ "Lilavati's Daughters". Women in Science. Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் December 18, 2019.
- ↑ Venkatraman, Vijaysree (April 5, 2009). "Forgotten Daughters (Literary Review)". The Hindu. பார்க்கப்பட்ட நாள் December 18, 2019.
- ↑ Gopinathan, Asha. "Bridging the gender gap in Indian science". Nature 460 (2009) 1082.
- ↑ Venkatraman, Vijaysree. "Indian Women In Science: Universal tales of women's struggles to attain parity in the world of scientific research". C & E News, Volume 87(2009) Issue 3.
- ↑ Ramaswamy, R., Godbole, R. "A playful side to twelfth-century mathematics". Nature 461 (2009) 1198.
- ↑ "Lilavati's Daughters". Women in Science. Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் December 18, 2019.