இளமை ஊஞ்சல்

2016 திரைப்படம்

இளமை ஊஞ்சல் (Ilamai Oonjal) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். மங்கை அரிராஜன் எழுதி இயக்கிய இப்படத்தில் நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகைகள் கிரண் ராத்தோட், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, சிவானி குரோவர், ஆர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். கார்த்திக் பூபதி ராஜா இசையமைத்த இப்படத்தின் தயாரிப்பு 2012 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. இப்படத்தின் கன்னட பதிப்பான சிக்காபட்டே இஷ்டபட்டேவுடன் இணைந்து 2016 செப்டம்பர் 3 அன்று வெளியானது.

இளமை ஊஞ்சல்
இயக்கம்மங்கை அரிராஜன்
தயாரிப்புஎஸ். ஆர். மனோகரன்
கதைமங்கை அரிராஜன்
இசைகார்த்திக் பூபதி ராஜா
நடிப்புநமிதா கபூர் (நடிகை)
கிரண் ராத்தோட்
மேக்னா நாயுடு
ஒளிப்பதிவுஜே. ஜி. கிருஷ்ணா
படத்தொகுப்புஉமாசங்கர் பாபு
கலையகம்சிறீபிரியா கிரியேசன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 2, 2016 (2016-09-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

சென்னையைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் விடுமுறை பயணமாக ஒரு மலைவாழிடத்துக்குச் செல்கின்றனர். அங்கு மாணவிகள் ஒவ்வொன்றாக கொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர், யார் கொலையாளி என்பதுதான் மீதமுள்ள கதை.[1]

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இந்த படத்தின் தயாரிப்புப் பணியானது 2012 செப்டம்பரில் தொடங்கியது, மனோகரன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குவதாக மங்கை அரிராஜன் அறிவித்தார். இப்படத்தில் நமீதா ஒரு அதிரடி கதாபாத்திரத்தில் நடித்தார்.[2][3] கிரண் ராத்தோட், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா உள்ளிட்ட ஐந்து நடிகைகளும், நடிகர்களும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயினர். பின்னர் படத்தின் படப்பிடிப்பானது 2012 செப்டம்பரில் நடைபெற்றது.[4] முன்னதாக இந்த படத்திற்கு மன்மத ராஜாக்கள் என்று பெயரிடப்பட்டது.[சான்று தேவை]

2013 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நமீதா தான் சம்மந்தபட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்புகளை முடித்துகொடுத்தார். படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன் வராததால் பட வெளியீடு தாமதமானது. பின்னர் படக் குழு 2016 செப்டம்பரில் சில திரையரங்குகளில் படத்தை வெளியிட்டது.[5]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_ஊஞ்சல்&oldid=3684069" இருந்து மீள்விக்கப்பட்டது