ஈஐடி பாரி

ஈஐடி பாரி ( ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரீஸ்) லிமிடெட் என்பது தென்னிந்தியாவின் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பொது நிறுவனமாகும், இது 225 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்தில் உள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் முதன்முறையாக உரங்களை உற்பத்தி செய்வது (1906) உட்பட இது பல முதலீடுகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது சர்க்கரை மற்றும் உயிர் தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது.[1] பாரி முனை என்பது சென்னையில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான வணிகப் பெயர் என்பதாகும்.[2]

தோற்றம் மற்றும் வரலாறுதொகு

இந்தியத் துணைக்கண்டத்தின் மிகத் தொன்மையான வணிக நிறுவனங்களில் ஈஐடி பாரி ஒன்றாகும்; இதனை 1780களில் வேல்சிலிருந்து இந்தியா வந்த தாமஸ் பாரி என்ற வணிகர் துவக்கினார். 1788இல் சூலை 17 அன்று வங்கி மற்றும் சில்லறை வணிக நிறுவனமாகத் துவக்கினார்.[3]

1819இல் "பாரி & டேர்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது; ஜான் வில்லியம் டேர் பங்காளியாக இணைந்தார். நாளடைவில் பாரி நிறுவனமும் ஈஸ்ட் இந்தியா டிசுடில்லரிசு (East India Distilleries) என்ற நிறுவனமும் இணைக்கப்பட்டு ஈஐடி பாரி என அழைக்கப்பட்டது. 1981இல் இதன் முதன்மை உரிமையை முருகப்பா குழுமம் நிதி நிறுவனங்களிடமிருந்து பங்குகளை வாங்கிப் பெற்றது.. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பாரி நிறுவிய வணிகம் தொடர்ந்து வளர்ந்து வந்தது, அதன் முதன்மை நிறுவனமான ஈஐடி பாரி உருவானது.

1908 ஆம் ஆண்டில் பாரி நிறுவனம்ராணிப்பட்டையில் 'தி பாட்டரி' பிரிவை அமைத்தது. பல ஆண்டுகளாக இது "பாரிவேர்" என்று பெயரிடப்பட்டது. பாரி நிறுவனம் மற்றும் ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரீஸ் & சுகர்ஸ் லிமிடெட் ஆகியவை இணைக்கப்பட்டு ஈஐடி பாரி இந்தியா லிமிடெட் அமைக்கப்பட்டன. 200 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த வீடு சுறுசுறுப்பாக இருந்து பல வணிகங்களை நடத்தி வந்தது. முருகப்பா குழுமம் 1981 ஆம் ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் , யுனைடெட் அஷ்யூரன்ஸ் நிறுவனம், மற்றும் யூனிட் திரஸ்ட் ஆஃப் இந்தியா போன்ற நிதி மற்றும் பொது நிறுவனங்களிலிருந்து ஈஐடி பாரியை எடுத்துக் கொண்டது.

வணிகங்கள்தொகு

இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலையை ஈ.ஐ.டி பாரி 1842 இல் நெல்லிகுப்பத்தில் அமைத்த்து. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்த இந்தியாவின் முதல் தனியார் துறை நிறுவனம் இதுவாகும் . சர்க்கரை பிரிவு ஈஐடி பாரியின் வருவாயில் 65% க்கும் அதிகமாக பங்களிக்கிறது, மேலும் தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தியில் 20% ஈஐடியிலிருந்து வருகிறது.[4] நெல்லிகுப்பம் ஒருங்கிணைந்த சர்க்கரை வளாகம் ஒரு நாளைக்கு 6500 மெட்ரிக் டன் நசுக்கும் திறன் கொண்டது, அதன் இணை உற்பத்தி வசதிகள் 24.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன, மேலும் அதன் வடிகட்டுதல் வசதிகள் ஒரு நாளைக்கு 75 கிலோலிட்டர்களை உற்பத்தி செய்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம், கரூர் மாவட்டத்தில் புகழூர் உள்ள, புதுக்கோட்டை மாவட்டத்தில் குரும்பூர் , உள்ள திருச்சி மாவட்டத்தில் பெட்டைவாய்த்தலை , புதுச்சேரி, கர்நாடகாவில் கலியால் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சங்கிலி போன்ற ஏழு இடங்களில் ஈஐடி பாரி நாட்டில் தனது தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஏழு ஆலைகளின் ஒருங்கிணைந்த நசுக்கும் திறன் ஒரு நாளைக்கு 32,500 (டிசிடி) மெட்ரிக் டன் கரும்பு ஆகும்.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஐடி_பாரி&oldid=2867674" இருந்து மீள்விக்கப்பட்டது