உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்)
உன்னைப் போல் ஒருவன் 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஒரு வெற்றிப் படம். இது நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் வெளியான எ வென்னஸ்டே (A wednesday) என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.[2]
உன்னைப் போல் ஒருவன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சக்ரி டொலெட்டி |
தயாரிப்பு | கமலஹாசன் எஸ். சந்திரஹாசன் ரொனி ஸ்க்ரூவாலா |
கதை | நீராஜ் பாண்டே கமலஹாசன் ஈ.ஆர்.முருகன் |
இசை | சுருதி ஹாசன் |
நடிப்பு | கமலஹாசன் மோகன்லால் பாரத் ரெட்டி லட்சுமி கணேஷ் வெங்கட்ராமன் அனுஜா ஐயர் சிறிமன் சந்தன பாரதி எம். எஸ். பாஸ்கர் |
ஒளிப்பதிவு | மனோஜ் சோனி |
படத்தொகுப்பு | ரமேஷ்வர் எஸ். பகத் |
விநியோகம் | ராஜ்கமல் இன்டர்நசனல் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 18 செப்டம்பர் 2009 |
ஓட்டம் | 106 நிமி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹30 கோடி ₹57 கோடவஉலகளாவிய[1] |
கதைச் சுருக்கம்தொகு
சென்னை காவல்துறை ஆணையரான ராகவ மராருக்கு (மோகன்லால்) மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார் (கமல ஹாசன்). அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் காவல் துறை அதிகாரிகளான ஆரிஃப் கான் (கணேஷ் வெங்கட்ராமன்) மற்றும் சேதுராமன் (பாரத் ரெட்டி) ஆகியோரின் பாதுகாப்புடன் மர்ம நபர் குறிப்பிட்ட இடமான விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் கதையின் முடிவு.
கதா பாத்திரங்கள்தொகு
- கமல ஹாசன் - பெயரிலி / மர்ம தொலைபேசி அழைப்பாளர் / சாதாரண மனிதன்
- மோகன் லால் - ராகவ மரார்
- கணேஷ் வெங்கட்ராமன் - ஆரிஃப் கான்
- பாரத் ரெட்டி - சேது ராமன்