ஈப்போ மாநகராட்சி

ஈப்போ மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Ipoh; ஆங்கிலம்: Ipoh City Council); (சுருக்கம்: MBI) என்பது மலேசியா, பேராக், மாநிலத்தில் ஈப்போ மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் பேராக் மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி உள்ளது.

ஈப்போ மாநகராட்சி
Ipoh City Council
Majlis Bandaraya Ipoh
மரபு சின்னம் அல்லது சின்னம்
Logo
Flag of Ipoh City Council
வகை
வகை
மாநகர் மன்றம்
of ஈப்போ
வரலாறு
முன்புஈப்போ நகராட்சி மன்றம்
தலைமை
நகர முதல்வர்
ருமாயிசி பகரின்
Rumaizi Baharin
1 ஏப்ரல் 2020[1]
செயலாளர்
முகமட் சக்குவான் சக்காரியா
Hakim Ariff Md Noor
1 ஏப்ரல் 2020
கட்டமைப்பு
உறுப்பினர்கள்24
அரசியல் குழுக்கள்
மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்::
ஆட்சிக்காலம்
1 மே 2021 - 30 ஏப்ரல் 2023
கூடும் இடம்
ஈப்போ மாநகராட்சி தலைமையகம்
MBI Building
Jalan Sultan Abdul Jalil, Greentown, 30450 Ipoh, Perak, Malaysia
4°35′55″N 101°05′24″E / 4.59866°N 101.08992°E / 4.59866; 101.08992
வலைத்தளம்
mbi.gov.my/en
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976

கிந்தா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஈப்போ மாநகராட்சியின் அதிகார வரம்பு 643 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த நகராட்சிக்கு 1988 மே 27-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஈப்போ மாநகராட்சி என அழைக்கப்பட்டது.

பொது

தொகு

ஈப்போ மாநகராட்சியின் முதல்வர் (மேயர்); மற்றும் அதன் 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் பேராக் மாநில அரசாங்கம் ஓராண்டு காலத்திற்கு நியமிக்கிறது. மேற்சொன்ன ஈப்போ மாநகராட்சியின் பொறுப்புகள் அனைத்தும் நியமனப் பொறுப்புகளாகும்.

மலேசியாவில் உள்ள மற்ற மாநகராட்சிகளைப் போலவே இந்த ஈப்போ மாநகராட்சியும் நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; ஈப்போ நகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு; பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.[2]

வரலாறு

தொகு

ஈப்போ மாநகராட்சி 1893-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சுகாதார வாரியமாக (Sanitary Board) தன் வரலாற்றைத் தொடங்கியது. அதன் படிப்படியான வளர்ச்சியில் இருந்து, 1962-ஆம் ஆண்டில் நகராட்சி (Municipal Status) தகுதியைப் பெற்றது. இருப்பினும் 16 ஆண்டுகள் கழித்து, 1988 மே 27-ஆம் தேதி தான், ஈப்போ ஒரு நகரமாக அறிவிக்கப்பட்டது.

ஈப்போ மாநகராட்சி என்பது உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா); (Local Government Act 1976 (Act 171); எனும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவன அமைப்பாகும் (Corporate Body). நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் சட்டம் 1976 (சட்டம் 172)-இன் கீழ் (Town and Country Planning Act 1976 (Act 172) ஈப்போ நகரத்தை நிர்வாகம் செய்வது ஈப்போ மாநகராட்சியின் பொறுப்பாகும்.

தற்போது, ஈப்போ மாநகராட்சியின் மக்கள்தொகை 720,000. பேராக் மாநிலத் தலைநகரமான ஈப்போவின் நிர்வாகம், வர்த்தகம், விளையாட்டு, நிதி, அரசியல், மதம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மையமாக இந்த மாநகராட்சி செயல்படுகிறது.

இப்போதைய காலத்தில், மாநகராட்சி முதல்வரின் தலைமையில், ஈப்போ மாநகரத்தை ஓர் ஆற்றல்மிக்க நகரமாகவும் மற்றும் சிறப்புமிக்க நகரமாகவும் மாற்றும் முயற்சியில் ஈப்போ மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

ஈப்போ நகராட்சி முதல்வர்கள்

தொகு
எண் முதல்வர் தொடக்கம் முடிவு
1 உமார் அபு 27 மே 1988 31 மே 1993
2 இசுமாயில் சா போடின் 1 சூன் 1993 31 டிசம்பர் 1994
3 அகமத் சலே சரிப் 2 சனவரி 1995 31 டிசம்பர் 1997
4 தலாத் உசைன் 1 பிப்ரவரி 1998 2 டிசம்பர் 2002
5 சிராசுதீன் சாலே 3 டிசம்பர் 2002 15 ஏப்ரல் 2004
6 அசன் நவவி அப்துல் ரகுமான் 1 மே 2004 23 சூலை 2006
7 முகமது ரபியாய் மொக்தார் 24 சூலை 2006 5 ஜூன் 2008
8 ரோசிடி அசிம் 23 சூலை 2008 2 சனவரி 2014
9 அருன் ராவி 2 சனவரி 2014 30 சூன் 2015
10 சம்ரி மேன் 1 சூலை 2015 1 சூலை 2019
11 அகமத் சுவைதி 1 சூலை 2019 31 மார்ச் 2020
12 ருமாயிசி பகரின் 1 ஏப்ரல் 2020 பதவியில்

துறைகள்

தொகு
  1. மாநகர நிறுவக அலுவலகம் (City Corporate Office)
  2. சுகாதாரத் துறை (Health Department)
  3. உரிமம் மற்றும் அமலாக்கத் துறை (Department of Licensing and Enforcement)
  4. சொத்து மதிப்பீடு மற்றும் மேலாண்மை துறை (Property Appraisal & Management Department)
  5. பொறியியல் துறை (Engineering Department)
  6. திட்டமிடல் துறை (Planning Department)
  7. நிதி துறை (Finance Department)
  8. இயற்கை மற்றும் பொழுதுபோக்கு துறை (Department of Landscape & Recreation)
  9. சமூக விவகாரங்கள் துறை (Department of Community Affairs)
  10. கட்டிடத்துறை (Building Department)
  11. மேலாண்மை சேவைகள் துறை (Department of Management Services)
  12. சட்ட ஆலோசகர் அலுவலகம் (Office of the Legal Adviser)
  13. உள் தணிக்கை அலுவலகம் (Internal Audit Office)
  14. கட்டிடங்கள் ஆணையர் அலுவலகம் (Office of the Commissioner of Buildings (COB)
  15. OSC அலுவலகம் (ஒரு நிறுத்த மையம்) (OSC Office (One Stop Center)
  16. நகர சிறப்பு திட்ட மேம்பாட்டு அலுவலகம் (City Special Project Development Office)

மேற்கோள்கள்

தொகு
  1. Profil Datuk Bandar
  2. Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈப்போ_மாநகராட்சி&oldid=3530590" இலிருந்து மீள்விக்கப்பட்டது