ஈயக் கார்பனேட்டு

ஈயக் கார்பனேட்டு (lead carbonate) என்பது PbCO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதியல் சேர்மமாகும். ஈய அசிட்டேட்டு மற்றும் கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் ஈய கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது.

ஈயக் கார்பனேட்டு
Lead carbonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈயக் கார்பனேட்டு
வேறு பெயர்கள்
இனங்காட்டிகள்
598-63-0 Y
பப்கெம் 11727
வே.ந.வி.ப எண் OF9275000
பண்புகள்
PbCO3
வாய்ப்பாட்டு எடை 267.21 g/mol
தோற்றம் வெண்ணிற துகள்
அடர்த்தி 6.582 g/cm3
உருகுநிலை 315 °C (599 °F; 588 K)
0.00011 g/100 mL (20 °C)
கரைதிறன் ஆல்ககால், அமோனியா இவற்றில் கரையாது;
அமிலம், காரம் இவற்றில் கரையும்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.804 [1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு
நச்சுத்தன்மை கொண்டது (T)
ஊறு விளைவிக்கும் (Xn)
சூழலுக்கு ஆபத்தானது(N)
R-சொற்றொடர்கள் R61, R20/22, R33, R62, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை சுடர்விட்டு எரியாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இயற்கையில் இது ஈயக்கரிகை அல்லது செருசைட்டு என அழைக்கப்படும் தாதுப்பொருளாக காணப்படுகிறது.

கார்பனேட்டு

தொகு
 
அடிப்படை ஈயக் கார்பனேட்டு, மற்றும் பட்டுச்சணலெண்ணெய் கலந்த பழைய நச்சுச் சாயம்

அடிப்படையான ஈய கார்பனேட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏராளமான கார்பனேட்டுகள் இயற்கையில் காணப்படுகின்றன:

  • வெள்ளை ஈயம், அடிப்படை ஈயக் கார்பனேட்டு, 2PbCO3·Pb(OH)2
  • சானோனைட்டு, PbCO3·PbO
  • 3PbCO3·Pb(OH)2·PbO[2]
  • PbCO3·2PbO
  • NaPb2(OH)(CO3)2
  • ஈய இல்லைட்டு, 2PbCO3·PbSO4·Pb(OH)2

பெருமளவில் தயாரித்தல்

தொகு

கார்பன் டைஆக்சைடு வாயுவை குளிர்ந்த நீர்த்த ஈய அசிட்டேட்டு கரைசலில் செலுத்தி பெருமளவில் ஈய கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. அல்லது கார்பனேட்டு உப்பைவிட குறைந்த கரைதிறன் கொண்ட ஈய உப்பை அமோனியம் கார்பனேட்டுடன் சேர்த்தும் இதனைத் தயாரிக்கலாம். தாழ்ந்த வெப்பநிலையில் வினை நிகழ்த்தப்பட்டால் காரத்தன்மை கொண்ட ஈய கார்பனேட்டு உருவாவதைத் தடுக்கலாம்.

பயன்பாட்டு விதிமுறைகள்

தொகு

ஐரோப்பிய நாடுகளில் இச்சேர்மத்தை விநியோகிக்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  2. S.V. Krivovichev and P.C. Burns, "Crystal chemistry of basic lead carbonates. II. Crystal structure of synthetic 'plumbonacrite'." Mineralogical Magazine, 64(6), pp. 1069-1075, December 2000. http://www.nd.edu/~pburns/pcb075.pdf

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயக்_கார்பனேட்டு&oldid=4168919" இலிருந்து மீள்விக்கப்பட்டது