ஈரெத்தில் சக்சினேட்டு

வேதிச் சேர்மம்

ஈரெத்தில் சக்சினேட்டு (Diethyl succinate) என்பது சக்சினேட்டின் ஈரெத்தில் எசுத்தராகும். C8H14O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. சுருக்கமாக இவ்வாய்ப்பாட்டை (CH2CO2Et)2 என்று எழுதுவார்கள். இங்குள்ள Et என்பது எத்தில் தொகுதியைக் குறிக்கும்.

ஈரெத்தில் சக்சினேட்டு
Diethyl succinate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈரெத்தில் பியூட்டேன்டையோயேட்டு
வேறு பெயர்கள்
ஈரெத்தில் சக்சினேட்டு
பியூட்டேன் டையாயிக் அமில ஈரெத்தில் எசுத்தர்
குளோரியசு
இனங்காட்டிகள்
123-25-1 Y
Beilstein Reference
907645
ChemSpider 13865630
InChI
  • InChI=1/C8H14O4/c1-3-11-7(9)5-6-8(10)12-4-2/h3-6H2,1-2H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31249
வே.ந.வி.ப எண் WM7400000
  • CCOC(=0)CCC(=0)OCC
UNII ELP55C13DR Y
பண்புகள்
C8H14O4
வாய்ப்பாட்டு எடை 174.20 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.047 g/mL
உருகுநிலை −20 °C (−4 °F; 253 K)
கொதிநிலை 218 °C (424 °F; 491 K)
சிறிதளவு கரையும்
ஆவியமுக்கம் 0.13 மி.மீ.பாதரசம்
-105.07·10−6 செ.மீ3/மோல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
24.22 கிலோயூல்/கிராம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
தீப்பற்றும் வெப்பநிலை 90.56 °C (195.01 °F; 363.71 K)
வெடிபொருள் வரம்புகள் 1.1-6.5%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள் தொகு

ஈரெத்தில் சக்சினேட்டு நிறமற்ற ஒரு நீர்மமாகும். இந்த கரிம மூலக்கூறில் இரண்டு எசுதர் குழுக்கள் உள்ளன. ஒரு பல்துறை வேதியியல் இடைநிலையாக ஈரெத்தில் சக்சினேட்டு பயன்படுகிறது.

தயாரிப்பு தொகு

சக்சினிக் அமிலத்தையும் எத்தனாலையும் சேர்த்து எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தினால் ஈரெத்தில் சக்சினேட்டு உருவாகிறது.

வினைகள் தொகு

ஓர் ஈரெசுத்தராக இருப்பதால், ஈரெத்தில் சக்சினேட்டு ஒரு பல்துறை கட்டுறுப்புத் தொகுதியா வினைகளில் ஈடுபடுகிறது. அசைலோயின் ஒடுக்க வினையில் பங்கேற்று ஆக்சலேட்டு எசுத்தர்களை ஒடுக்குவதன் வழியாக இது 2-ஐதராக்சிவளையபியூட்டனோனைக் கொடுக்கிறது.[1] கீட்டோகுளூட்டாரிக் அமிலத்தைத் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக ஈரெத்தில் சக்சினேட்டு பயன்படுகிறது.[2]

 
நிறமிகள் மற்றும் சாயங்கள் தயாரிப்பில் பயனுள்ள முன்னோடிச் சேர்மமான ஈரெத்தில்சக்சினாயில்சக்சினேட்டு தயாரிப்புக்கு காரத்தூண்டல் ஒடுக்க வினையில் ஈரெத்தில் சக்சினேட்டு ஈடுபடுகிறது:[3]

மேற்கோள்கள் தொகு

  1. Bloomfield, Jordan J.; Nelke, Janice M. (1977). "Acyloin Condensation in Which Chlorotrimethylsilane is Used as a Trapping Agent: 1,2-Bis(Trimethylsilyloxy)Cyclobutene and 2-Hydroxycyclobutanone". Organic Syntheses 57: 1. doi:10.15227/orgsyn.057.0001. 
  2. Bottorff, E. M.; Moore, L. L. (1964). "α-Ketoglutaric Acid". Organic Syntheses 44: 67. doi:10.15227/orgsyn.044.0067. 
  3. Hunger, K.; Herbst, W. (2005), "Pigments, Organic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a20_371(subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரெத்தில்_சக்சினேட்டு&oldid=3407640" இலிருந்து மீள்விக்கப்பட்டது