ஈழப் புலம்பெயர் இலக்கியம்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இலங்கை இனப்பிரச்சினை காரணமாக ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் மக்களின் ஆக்கங்கள் ஈழ புலம்பெயர் இலக்கியம் ஆகும். ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் உள்ளது. ஈழத்தமிழ் இலக்கியம் மூலம் புலம் பெயர்தலின் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் பிறந்த மண்ணின் மீதான ஏக்கங்கள் பதிவு செய்யப்படுகிறது.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்
தொகுஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும்அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
கால வரையறை
தொகுஇலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்களே முக்கியமானவை. 1983இல் / கறுப்பு ஜீலை கலவரம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்கள் அதிக அளவில் படைபாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.
புலம்பெயர் படைப்புக்கள்
தொகுபுலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை - பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை.
கவிதை
தொகுமுக்கிய கவிஞர்களாக கவனப்படுத்தப்பட்டவர்கள்,[சான்று தேவை]
- சேரன்
- வ. ஐ. ச. ஜெயபாலன்
- செழியன்
- கி. பி அரவிந்தன்
- இளவாலை விஜயேந்திரன்
- திருமாவளவன்
- சக்கரவர்த்தி
- நட்சத்திரன் செவ்விந்தியன்
- தா. பாலகணேசன்
- இளைய அப்துல்லா
- முல்லை அமுதன்
- முல்லையூரான்(மறைவு)
- மைத்திரேயி
- பிரதீபா
- றஞ்சினி
- ஆழியாள்
- இளந்திரையன்
- தியா காண்டீபன்
சிறுகதை
தொகுமுக்கிய சிறுகதை ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள்,[சான்று தேவை]
- அ.முத்துலிங்கம்,
- அகில்
- பொ. கருணாகரமூர்த்தி
- குமார்மூர்த்தி(மறைவு)
- க.கலாமோகன்
- பார்த்திபன்
- அந்தோனிதாசன் யேசுதாசன்
- சக்கரவர்த்தி
- விமல் குழந்தைவேல்
- ஆசி.கந்தராஜா
- முருகபூபதி
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- அருண் விஜயராணி
- நிருபா,
- சுமதிரூபன்
- இளந்திரையன்
- இ. தியாகலிங்கம்
- தியா காண்டீபன்
நாவல்
தொகுமுக்கிய நாவல் ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள்,[சான்று தேவை]
- அகில்,
- அந்தோனிதாசன் யேசுதாசன்
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- விமல் குழந்தைவேல்
- முல்லை அமுதன்
- மா. கி. கிறிஸ்ரியன்
- கி. செ. துரை
- பார்த்திபன்
- இ. தியாகலிங்கம்
- தியா காண்டீபன்
குறுநாவல்
தொகு- அந்தோனிதாசன் யேசுதாசன்
- இ. தியாகலிங்கம்
புலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கம்
தொகுதாயகம் சார்ந்த படைப்புக்கள், புலம்பெயர் சூழல் சார்ந்த படைப்புக்கள் என புகலிடப் படைப்புக்களின் உள்ளடக்கத்தை இரண்டாக வகுக்கலாம்.[சான்று தேவை]