உணர்வுத் தொகுதி

புலன் உணர்வுத் தொகுதி அல்லது புலன் உணர்வு மண்டலம் (Sensory system) என்பது, புலன் உணர்வு தொடர்பான தகவல்களைச் செயற்படுத்தும் நரம்புத் தொகுதியின் ஒரு பகுதி ஆகும். புலன் உணர்வுத் தொகுதி, புலன் உணர்வு ஏற்பிகளை (sensory recptors) உள்ளடக்கிய புலன் உணர்வு நரம்பணுக்களையும் (en:Sensory neuron), நரம்பு வழிகளையும் (en:Neural pathway), புலன்களின் செயல்முறையில் பங்கெடுக்கும் மூளையின் பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். பொதுவான புலன் உணர்வுத் தொகுதிகளாவன, கட்புலன் (en:Visual perception), செவிப்புலன் (en:Auditory system), தொடுவுணர்வுப்புலன் (en:Somatosensory system), சுவை, மோப்பம் (en:Olfaction). சமநிலை (en:Vestibular system) ஆகியனவாகும். இவற்றிற்கு முறையே கண், செவி, தோல். நாக்கு, மூக்கு, செவியினுள் இருக்கும் சமநிலைக்கான உறுப்பு ஆகியவை ஏற்புப் புலன் உறுப்புக்களாகத் தொழிற்படுகின்றன. இந்த ஏற்புப் புலன் உறுப்புகளால் உணரப்படும் உலகிலுள்ள பொருள் சார்ந்த பகுதிகள், மூளையினால் புரிந்துகொள்ளப்படும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது[1].

பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பான கண்.

ஏற்புப் புலம் (receptive field) என்பது ஒரு ஏற்புப் புலனுறுப்பால் உணரப்படக்கூடிய உலகின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டாக, கண்ணால் பார்க்கக்கூடிய உலகின் பகுதி அதன் ஏற்புப் புலம் ஆகும். இது, கண்ணில் உள்ள கோல்களும், கூம்புகளும் உணரக்கூடிய ஒளியின் பகுதியாகும்[2]. பார்வைத் தொகுதி, கேட்டல் தொகுதி, தொட்டுணர்வுத் தொகுதி என்பவற்றுக்கு அவற்றின் ஏற்புப் புலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புலனறிவு மற்றும் ஏற்பிகள் தொகு

புலன்கள் தொடர்பாக ஒரு பொருளைக் கொண்டிருக்கும் வேறுபட்ட வரையறையின் காரணமாக, எண்ணற்ற குறிப்பிட்ட உணர்வுகளுக்கு நரம்பியல் அறிஞர்களிடையே விவாதம் இருப்பினும், கௌதம புத்தர் மற்றும் அரிஸ்டாட்டில் ஐந்து 'மரபான' மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளனர் இவை உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: தொடு உணர்வு, சுவையுணர்வு, முகர்ச்சியுணர்வு, பார்வையுணர்வு மற்றும் கேட்டலுணர்வு ஆகியவையே அவையாகும். கடுமையுணர்வு (nociception), சமநிலையுணர்வு (equilibrioception), மயக்கவுணர்வு (kinaesthesia), மற்றும் வெப்பவுணர்வு (thermoception) போன்ற பிற உணர்வுகள் மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளில் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக உள்ளன. மனிதர்களைத் தவிர பிற உயிரிகளில் காந்தஏற்புணர்வு (magnetoception) மின்னேற்புணர்வு (electroreception) போன்ற சில வகை சிறப்பு வகை உணர்வுகள் காணப்படுகின்றன.[3]

புலன் ஏற்பி தொகு

புலனுணர்வு ஏற்பி ( Sensory receptor) என்பது ஓர் உயிரினத்தின் உட்புற அல்லது வெளிப்புற சூழலின் தூண்டலுக்கு, புலனுணர்ச்சி அமைப்பில் உள்ள ஒர் உணர்ச்சி நரம்பு துலங்கலை வெளிப்படுத்தும் செயலாகும். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலை வெளிப்படுத்தும் விதமாக, தூண்டல் ஏற்பட்ட அதே கலத்தில் அல்லது அதற்கடுத்துள்ள ஒரு கலத்தில் தரமான வினைநுட்பத்தை அல்லது செயல்திறனை உருவாக்க புலனுணர்வு ஏற்பி புலனுணர்வு நுண்ணிடைமாற்றம் மூலமாக ஒரு தொடக்கத்தை வழங்குகிறது.

 
மனிதப் புலனுணர்வு மண்டலம்

செயற்பாடுகள் தொகு

சுவை, மணத்துடன் தொடர்புடைய புலன் ஏற்பிகள், குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களால் பிணைக்கப்பட்ட ஏற்பி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. மணம் சார்ந்த மூலக்கூறுகள் உடலின் மோப்பப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள ஏற்பி மூலக்கூறுகளுடன் இடைவினை நிகழ்த்தி மணப் புலனை உருவாக்குகின்றன. இதைப்போலவே சுவைப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுகள் உணவில் உள்ள சுவை சார்ந்த வேதிப்பொருட்களுடன் இடைவினை நிகழ்த்தி சுவைப் புலனை உருவாக்குகின்றன.

தொடுவுணர்ச்சி ஏற்பி மற்றும் ஒளி ஏற்பி போன்ற மற்ற புலனுணர்வு ஏற்பிகள் உடலியக்கம் மூலம் இடைவினை நிகழ்த்துகின்றன. ரோடாப்சின் போன்ற சிறப்புப் புரதங்களைப் பெற்றுள்ள ஒளி ஏற்பி உயிரணுக்கள் ஒளியால் தூண்டப்படும் உடலியக்க ஆற்றலை மின் அதிர்வு அறிவிப்புக் குறிகளாக மாற்றி இடைவினை நிகழ்த்துகின்றன. சிலவகை தொடுவுணர்ச்சித் தூண்டல்களுக்கு உடல்சவ்வுகள் உள்ளிழுத்து அல்லது சுருங்கி உடனடியாக துலங்கலை வெளிப்படுத்துகின்றன.

புலனுணர்வு ஏற்பியின் செயல்பாடுகளே ஒரு புலனுணர்ச்சி அமைப்பின் முதலாவது உறுப்பாகும்.

தனிப்பட்ட ஒவ்வொரு வகையான புலனுணர்வு தூண்டலுக்கேற்பவும் புலனுணர்வு ஏற்பிகள் எதிர்வினையாற்றுகின்றன. புலனுணர்வு ஏற்பிகள் உணரும் தூண்டல்களின் அளவிற்கு ஏற்பவே துலங்கல்களின் அளவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

புலனுணர்வைக் கடத்தத் தொடங்குவதன் மூலம் புலனுணர்வு ஏற்பியானது புலனுணர்வு வகைக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு ஏற்பியின் தொடக்க நிலையிலிருந்து நிகர விலகலை நிறைவேற்றுகிறது. (தூண்டல் துலங்கலுக்கான வாயில் நிலை பற்றி அறிய [4] உயிர் இயற்பியல் [5] விளக்கப் படம் பார்க்கவும்).

வேதிஏற்பிகள் தொகு

வேதி ஏற்பிகள் அல்லது வேதி உணரிகள் குறிப்பிட்ட வேதியற் பொருட்களை அடையாளம் கண்டு அதனை மின் உணரியாக மாற்றுகிறது. இரண்டு அடிப்படை வேதி உணரிகள் கானப்படுகின்றன.

தொலை வேதி ஏற்பிகள் தொகு

நுகர்வு உறுப்புகள் மூலம் வேதியப் பொருட்களின் காரம், நெடி, வாசனை போன்றவற்றின் மூலம் மோப்ப நரம்புகள் தூண்டப்பட்டு அவை நரம்பணுக்கள் வழியாக மூளைக்கு கடத்தப்படுகின்றன.

நேரடி வேதி ஏற்பிகள் தொகு

நாவிலுள்ள சுவை மொட்டுக்கள் மூலம் நேரிடையாக தொடர்பு ஏற்படுவதால் அவ்விடத்திலுள்ள நரம்பணுக்கள் பிரான வாயுவில் ஏற்படும் அடர்வு மாறுதல்கள் மூலம் நேரடி வேதி ஏற்பு அமைப்பு செயல்படுகின்றன.[6]

ஒளி ஏற்பிகள் தொகு

ஒளி ஏற்பிகளானது ஒளியினை ஏற்று அதனை மாற்றக்கூடிய தகவமைப்பை பெற்றுள்ளன. இச்செயல்முறையில் ஒளியானது (மின்காந்த எதிரொலித்தல்) மற்ற வகை ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. மூன்று வகையான ஒளி ஏற்பிகள் கானப்படுகின்றன. அவை கூம்பு , குச்சி அல்லது தடி மற்றும் ஒளியுணர்வு மிக்க காங்கிலியன் செல்கள் ஆகும். கூம்பு செல்களானது நிறங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. கூம்பு செல்கள் அவற்றின் பணிகளுக்கேற்ப மனிதர்களில் மூன்று வேறுபட்ட வகைகளாக கானப்படகின்றன. குறைந்த அலைநீளமுடைய (நீலம்) மத்திய அலைநீலமுடைய (பச்சை) மற்றும் அதிக அலைநீளமுடைய (மஞ்சள் அல்லது சிவப்பு) நிறங்களுக்கான அடிப்படை ஒளிஏற்பிகளாக இவை செயல்படுகின்றன.[7] குச்சி வடிவ செல்களானது ஒளியின் செறிவுகளை உணரவும் குறைந்த ஒளியில் பார்க்கும் திறனை அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. குச்சி செல்களின் அடர்வு மற்றும் விகிதமானது அவை பகலாடி அல்லது இரவாடி விலங்குகளா என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றன. மனிதர்களில் குச்சி செல்கள் தோராயமாக 20: 1 என்ற விகிதத்திலும் , அதே சமயத்தில் இரவாடி விலங்குகளான ஆந்தை உள்ளிட்ட விலங்குகளில் இந்த விகிதமானது 1000: 1 என்ற அளவில் கானப்படுகின்றன.[7] .[8] காங்கிலிய உயிரணுக்களானது அண்ணீரகச் சுரப்பியின் உள்ளகங்களிலும் விழித்திரையிலும் கானப்படுகின்றன. அவை பரிவதிர்வு பதிலில் (sympathetic response) ஈடுபடுகின்றன. விழித்திரை உள்ள ~ 1.3 மில்லியன் காங்லியன் செல்களில், 1-2% சதவீதம் ஒளியுணர்வு செல்கள் என்று நம்பப்படுகிறது.[8] . இந்த ஒளியுணர்வு செல்கள் சில விலங்குகளில் நனவு நிலை பார்வையில் முக்கியப் பங்காற்றுகின்றன.[9] இதே போல செயல்முறை மனிதர்களிடத்திலும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.[10]

இயக்க ஏற்பிகள் தொகு

இயக்க ஏற்பிகள் (Mechanoreceptor) என்பது ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். அழுத்தம் மற்றும் உருக்குலைவு போன்ற இயந்திர விசைகளுக்கு உரிய பதில்களை அளிப்பதற்காக அவற்றின் உள்ளீட்டு தூண்டல்களை ஏற்கும் அமைப்பாகும்.[11] நுழைவறை புலன் உறுப்பு மற்றும் செவியமைப்பில் அமைந்திருக்கும் உரோமங்களில் இத்தகைய இயந்திர ஏற்பிகள் கானப்படுகின்றன. இயந்திர ஏற்பிகள் தோல் அல்லது சருமத்தோடு தொடர்புடையன மேலும் இவை நான்கு குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன.

 • மெதுவான தகவமைப்பு வகை 1 வாங்கிகள் சிறிய ஏற்புப் புலங்களைாகும் அவை நிலையான தூண்டுதலுக்கு பதிலளிக்கின்றன. இந்த வாங்கிகள் முதன்மையாக வடிவம் மற்றும் சொரசொரப்பு போன்ற உணர்வுகளை உணரப் பயன்படுத்தப்படுகின்றன.
 • மெதுவான தகவமைப்பு வகை 2 வாங்கிகள் பெரிய ஏற்புப் புலங்களைாகும் அவை வளைதல் செயலை உணருதல் மற்றும் முதல் வகையைப் போல தொடர் தூண்டுதல்களுக்கு நிலைத்த எதிர்வினைகளைத் தருகின்றன.
 • விரைவு தகவமைப்பு வாங்கிகள் சிறிய ஏற்புப் புலங்களைக் கொண்டுள்ளது மேலும் தடுமாற்றம், விழுதல் போன்ற செயல்களுக்கு பதில் வினையாற்றுகின்றன.
 • பாசினியன் வாங்கிகள் (Pacinian receptors) பெரிய ஏற்புப் புலங்களை கொண்டுள்ளன. அதிக அதிர்வெண் அதிர்வுகளுக்கு இவை பதில்வினை ஆற்றுகின்றன.

வெப்ப ஏற்பிகள் தொகு

வெப்ப ஏற்பிகள் (Thermoreceptor) என்பது மாறுபடும் வெப்பநிலைக்கு பதில்வினையாற்றும் ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். இந்த வாங்கிகள் இயங்குவதற்கான வழிமுறைகள் தெளிவற்றதாக இருந்தாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் பாலூட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு வேறுபட்ட வெப்ப ஏற்பிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.[12]

 • கிராஸ் குமிழ்களின் நிறைவுப்பகுதி அல்லது குமிழ் சிறுதுணிக்கை வெளிப்புற உடல் வெப்பநிலையை உணருகின்றன.
 • ருப்ஃபினியின் நிறைவு உறுப்பு (Ruffini corpuscle|Ruffini’s end organ) உட்புற உடல் வெப்பநிலையை கண்டறிகின்றன.

வலி ஏற்பிகள் தொகு

வலிஏற்பிகள் என்பது தண்டு வடம் மற்றும் மூளைக்கு சமிஞ்ஞைகளை அனுப்புவதன் மூலம் சேதமடையக்கூடிய அல்லது சேதம் விவைிக்கக்கூடிய தூண்டுதலுக்கு பதிலளிக்கின்றன.[13] இந்த செயல்முறை, வலிஏற்பு எனப்படும், இது பொதுவாக வலி உணர்திறனை ஏற்படுத்துகிறது. இவை உடல் உள்ளுறுப்புகளிலும் உடலின் மேற்பரப்புகளிலும் கானப்படும். இவை பல்வேறு வகையான சேதம் விளைவிக்கும் தூண்டுதல் அல்லது உண்மையான சேதத்தை கண்டறிகின்றன. திசுக்கள் சேதமடைந்தால் மட்டுமே பதிலளிக்கும் நிலைகள் "தூக்கம்" அல்லது "அமைதியான" வலி ஏற்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வெப்ப ஏற்பிகள் பல்வேறு வெப்பநிலைகளில் அதீத நச்சு வெப்ப மாறுபாடுகள் அல்லது குளிரால் உந்தப்படுகின்றன.
இயந்திர ஏற்பிகள் அதிகப்படியான அழுத்தம் அல்லது இயந்திரச் சிதைவுகளால் தூண்டப்படுகின்றன.
வேதி ஏற்பிகளானது பல்வேறு வகையான வேதிப்பொருட்கள் மற்றும் இரசாயன நொதிகளுக்கு பதிலளிக்கின்றன, அவற்றில் சில திசு சேத அறிகுறிகள் ஆகும். இவை உணவுப்பொருட்களில் உள்ள சில மசாலா வாசனைகளை கண்டறிவதில் ஈடுபட்டுள்ளன.

மூளையகப் புலன்சார் புறணி தொகு

மேலே விவரித்த ஏற்பிகள் பெறும் அனைத்துத் தூண்டல்களும் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் உள்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பிழைகளின் நுனி ஏந்தும் செயல்நிலைக்கு கடத்தப்படுகின்றன. புலன்சார் புறணி என்பது வழக்கமாக உடலப் புலன்சார் புறணியைக் குறித்தாலும், இது மிகவும் துல்லியமாக மூளையின் பல்வேறு புலன்சார் குறிகைகளைப் பெறும் பகுதிகளையும் உள்ளடக்கும். மாந்தருக்கான மரபான ஐம்புலன்களுக்குமான வெவ்வேறு புலன்சார்ந்த முதன்மை, துணைப் புறணிகளையும் இது உள்ளடக்கும். அவையாவன, உடலப் புலன் புறணி, காட்சிப் புலன், கேள்விப் புலன், முதன்மை மோப்ப்ப் புலன், சுவைப் புலன் என்பனவாகும்.[14] அங்கண உணர்வு, சமனிலை உணர்வு சார்ந்த பிற புறணிகளும் மூளையில் அடங்கியுள்ளன.[15]

 
தோல்

உடலப் புலன் புறணி தொகு

மண்டைப் பக்க மூளை மடலில் உள்ள முதன்மை உடலப் புலன் புறணி தான் உடலப் புலன் மண்டலத்தின் தொடுஉணர்வும் இட, இருப்பு உணர்வும் சார்ந்த முதன்மை ஏற்புப் பகுதியாகும். இது மேலும் மூன்றாகப் பரிக்கப்படுகிறது. அவையாவன பிராட்மன் பகுதிகள் 1, 2, 3 என்பனவாகும். இவற்ரில், பிராட்மன் பகுதி 3 தான் உடலப் புலன் கையாளும் முதன்மைப் புறணியாகும்.ஏனெனில், இதுதான் கருவகத்தில் (Thalamus) இருந்து கணிசமான உள்ளீட்டைப் பெறுவதோடு, இதுவே உடலப் புலன் தூண்டலுக்கு உயர்துலங்கல் புரியும் புறணியுமாகும். இது மின்தூண்டலால் உடலுணர்வுகளை எழுப்புகிறது. பகுதிகள் 1, 2 ஆகியவை அவற்ருக்கான பெரும்பகுதி உள்ளீட்டை பகுதி 3 வழியாகவே பெறுகின்றன. மேலும் சிறுமூளை வழியாக இட, இருப்பு உணர்வு வழித்தடங்களும் இயக்கக் கட்டுபாட்டுக்கான வழித்தடங்களும் பிராட்மன் பகுதி 4 இல் அமைந்துள்ளன.

 
மாந்தக் கண் தான் புலன் மண்டலத்தின் முதன்மை உறுப்பாகும்: அதாவது, காட்சிப் புலன் தான் முதன்மையான புலன் உறுப்பாகும்.

காட்சிப் புலன் புறணி தொகு

காட்சிப் புலன் புறணியில் முதன்மைக் காட்சிப் புலன் புறணியாகிய V1 அல்லது பிராட்மன் 17, V2-V5 எனும் கூடுதல் காட்சிப் புலன் புறணிப் பகுதிகள் ஆகியன உள்ளடங்கும்.[16] பிடரி மடலில் அமைந்த, V1 காட்சி உள்ளீட்டுக்கான முதன்மை அஞ்சலகமாக அமைந்து, தகவலை முதுகுபக்க, வயிற்றுப்பக்க முதன்மைத் தடவழிகளுக்குக் கடத்துகிறது. முதுகுப் பக்கத்தில் எங்கு, எப்படி என அறியும் V2, V5 ஆகிய பகுதிகள் அமைகின்றன. வற்ருப் பக்கத்தில் என்ன என அறியும் V2, V4 ஆகிய பகுதிகள் அமைகின்றன.[17] உடனடிப் புலன் உணர்வுத் தூண்டல்களின் மாற்றங்களுக்குப் பின்னரும் முயற்சி முடிவுற்ற பின்னரும் வயிற்றுப் பக்க நரம்பு வலையமைப்பில் இலக்குப்பணி எதிர்ப்புச் செயல்பாடுகள் கூடுதலாகின்றன[18] at the onset and offset of task blocks,[19][20]

 
செவி

கேள்விப் புலன் புறணி தொகு

நெற்றிப் பொட்டு மடலில் அமைந்த கேள்விப் புலன் புறணி ஒலித் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும். இப்புறணியில் பிராட்மன் 41, 42 ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இவற்ரில் பிராட்மன் 41 முன் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி என்றும் பிராட்மன் 42 பகுதி பின் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த இருபகுதிகளும் ஒருங்கிணைந்து ம்யிர்க்கலங்கள்/கேள்வி ஏற்பிகளில் இருந்துவரும் குறிகைகளைப் பெற்று ஒத்தமுறையில் கையாள்வதோகு கடத்தவும் செய்கின்றன.

 
மூக்கு

முதன்மை மோப்பப் புலன் புறணி தொகு

நெற்றிப் பொட்டு மடலில் அமைந்த முதன்மை மோப்பப் புலன் புறணி வாசனை அல்லது மோப்பப் புலன் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும்.

காட்சி, கேள்விப் புலன்களைப் போலல்லாமல், மோப்பப் புலன் குமிழ்கள் மூளை அரைக்கோளங்களைக் குறுக்காக கடப்பதில்லை; மாறாக வலதுபுறக் குமிழ்கள் மூளை வலது அரைக்கோளத்துக்கும் இடதுபுறக் குமிழ்கள் மூளை இடது அரைக்கோளத்துக்கும் குறிகைகளை செலுத்துகின்றன.

 
நாக்கு

சுவைப் புலன் புறணி தொகு

சுவைப் புலன் புறணி தான் சுவைக்கான குறிகைகளை முதன்மையாகப் பெறும் பகுதியாகும். சுவை எனும் சொல் நுட்பமாக நாக்கின் சுவைமொட்டுகளில் இருந்துவரும் உணர்வுகளையே குறிக்கிறது. சுவை சார்ந்த நான்கு இயல்புகளாவன நாக்கு கண்டறியும் துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, உவர்ப்பு, புரதச் சுவையான umami. மாறாக, நறுமணம் என்பது சுவை, மணம், ஊற்றுணர்வு ஆகிய மூன்றன் ஒருங்கிணைந்த கலவையைக் குறிக்கிறது. சுவைப் புலன் புறணி இரண்டு முதன்மைக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன; அவையாவன, முன்மடலில் உள்ள செவுள் மூடியும் இன்சுலார் மடலில் உள்ள முன் இன்சுலாவும் ஆகும். இதேபோல, மோப்பப் புலன் புறணிக்கும், சுவைப் புலன் தடவழியானது புறநிலை, மைய இயங்கமைப்பு வழியாக செயல்படுகிறது. நாக்கிலும் மெல்லண்ணத்திலும் குரல்வளையிலும்உணவுக்குழலிலும் அமைந்த புறநிலைச் சுவைப் புலன் ஏற்பிகள், பெற்ற குறிகைகளை முதன்மைப் புலன் உணர்வு நரம்பு வேரிழைகளுக்குக் கடத்துகிறது; இங்கு இந்தக் குறிகை முகுளத்தில் உள்ள தனித்த வழித்தடக் கருவுக்கோ அல்லது அதன் சுவைப் புலன் கருவுக்கோ நீட்டுவிக்கிறது. பின்னர், இந்தக் குறிகை தாலமசு எனும் கருவுக்குக் கட்த்தப்படுகிறது. அது மீண்டும் இந்தக் குறிகையைப் புதுப்புறணியின் பல பகுதிகளுக்கும் சுவைப் புலன் புறணிக்கும் கடத்துகிறது.[21]

சுவையின் நரம்புவழிக் கையாளுகை நிகழ்வை, நாக்கில் இருந்துவரும் உடலப் புலன் தகவல் அதாவது, வாய் உணர்வு அதன் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றுகிறது. நறுமணம், மாறாக, நறுஞ்சுவையாக உருவாக சுவையால் மட்டும் முடிவதில்லை. இத்தகவல் உயர்புறணிப் பகுதிகளான இன்சுலா, விழியக முன்புறணி ஆகியவற்றால் கையாளப்பட்ட பிறகே நறுஞ்சுவையாகிறது.[22]

மாந்தப் புலன் உணர்வுத் தொகுதி தொகு

மாந்த புலன் உணர்வுத் தொகுதியில் கீழ்வரும் உட் தொகுதிகள் அமைந்துள்ளன:

 • காட்சி புலன் தொகுதி- இதில் ஒளிப்புலன் ஏற்பிக் கலங்களும் ஒளியியல் நரம்புத் தொகுதியும் மூளையின் V1 பகுதியும் உள்ளன.
 • கேள்விப் புலன் தொகுதி
 • உடலப் புலன் தொகுதி இவை ஏற்பிகளையும் கடத்திகளையும் கொண்டுள்ளது. இக்கடத்திகள் S1 மூளைப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு S1 பகுதி கீழ்கண்ட செயல்களைல் ஆற்றுகிறது. தொடுதல் அல்லது அழுத்தம், வெப்பநிலை (சூடு அல்லது குளிர்), வலியோடு எரிச்சல்,கூச்சம் உண்டாக்குதல், தசை இயக்கம் கூட்டுநிலைக் காப்பு , இயக்கம், முக உணர்வு ஆகியவற்றைக் கட்டுபடுத்துகிறது.
 • சுவைப் புலன் தொகுதி
 • மோப்பப் புலன் தொகுதி அல்லது வாசனைப் புலன் தொகுதி
 • அங்கணப் புலன் தொகுதி

நோய்கள் தொகு

 
2002 மதிப்பீட்டின்படி, 100,000 பேருக்கான பொறிகளின் (புலன் உறுப்புகளின்) நோய்களுக்கான திறன்குறைவுக்கு நேர்செய்த வாழ்நாள் ஆண்டு.[23]
  தகவல் இல்லை
  200 இனும் குறைவாக
  200-400
  400-600
  600-800
  800-1000
  1000-1200
  1200-1400
  1400-1600
  1600-1800
  1800-2000
  2000-2300
  2300 இனும் கூடுதலாக

மேற்கோள்கள் தொகு

 1. Krantz, John. "Experiencing Sensation and Perception - Chapter 1: What is Sensation and Perception?" (Pdf). பார்க்கப்பட்ட நாள் April 15, 2017.
 2. Kolb & Whishaw: Fundamentals of Human Neuropsychology (2003)
 3. Hofle, M., Hauck, M., Engel, A. K., & Senkowski, D. (2010). Pain processing in multisensory environments. [Article]. Neuroforum, 16(2), 172.
 4. [1]
 5. [2]).
 6. Satir, P. & Christensen, S.T. (2008) Structure and function of mammalian cilia. in Histochemistry and Cell Biology, Vol 129:6
 7. 7.0 7.1 "eye, human." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Ultimate Reference Suite. Chicago: Encyclopædia Britannica, 2010.
 8. 8.0 8.1 Foster, R. G.; Provencio, I.; Hudson, D.; Fiske, S.; Grip, W.; Menaker, M. (1991). "Circadian photoreception in the retinally degenerate mouse (rd/rd)". Journal of Comparative Physiology A 169. எஆசு:10.1007/BF00198171
 9. Jennifer L. Ecker, Olivia N. Dumitrescu, Kwoon Y. Wong, Nazia M. Alam, Shih-Kuo Chen, Tara LeGates, Jordan M. Renna, Glen T. Prusky, David M. Berson, Samer Hattar. "Melanopsin-Expressing Retinal Ganglion-Cell Photoreceptors: Cellular Diversity and Role in Pattern Vision". Neuron 67 (1). https://dx.doi.org/10.1016/j.neuron.2010.05.023. 
 10. Horiguchi, H.; Winawer, J.; Dougherty, R. F.; Wandell, B. A. (2012). "Human trichromacy revisited". Proceedings of the National Academy of Sciences 110 (3): E260–E269. doi:10.1073/pnas.1214240110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. 
 11. Winter, R., Harrar, V., Gozdzik, M., & Harris, L. R. (2008). The relative timing of active and passive touch. [Proceedings Paper]. Brain Research, 1242, 54-58. எஆசு:10.1016/j.brainres.2008.06.090
 12. Krantz, John. Experiencing Sensation and Perception பரணிடப்பட்டது 2017-11-17 at the வந்தவழி இயந்திரம். Pearson Education, Limited, 2009. p. 12.3
 13. Sherrington C. The Integrative Action of the Nervous System. Oxford: Oxford University Press; 1906.
 14. Brynie, F.H. (2009). Brain Sense: The Science of the Senses and How We Process the World Around Us. American Management Association.
 15. Thomas Brandt (1999). "Vestibular cortex: its locations, functions, and disorders.". Vertigo. Springer. pp. 219–231.
 16. McKeeff, T. J.; Tong, F. (2007). "The timing of perceptual decisions for ambiguous face stimuli in the human ventral visual cotex. [Article]". Cerebral Cortex 17 (3): 669–678. doi:10.1093/cercor/bhk015. 
 17. Hickey, C.; Chelazzi, L.; Theeuwes, J. (2010). "Reward Changes Salience in Human Vision via the Anterior Cingulate. [Article]". Journal of Neuroscience 30 (33): 11096–11103. doi:10.1523/jneurosci.1026-10.2010. 
 18. Downar, J.; Crawley, A. P.; Mikulis, D. J.; Dav (2000). "multimodal cortical network for the detection of changes in the sensory environment". Nature Neuroscience 3: 277–283. doi:10.1038/72991. 
 19. Fox, M. D.; Snyder, A. Z.; Barch, D. M.; Gusnard, D. A.; Raichle, M. E. (2005). "Transient BOLD responses at block transitions". NeuroImage 28: 956–966. doi:10.1016/j.neuroimage.2005.06.025. 
 20. Shulman, G. I.; Tansy, A. P.; Kincade, M.; Petersen, S. E.; McAvoy, M. P.; Corbetta, M. (2002). "Reactivation of Networks Involved in Preparatory States". Cerebral Cortex 12: 590–600. doi:10.1093/cercor/12.6.590. 
 21. Purves, Dale et al. 2008. Neuroscience. Second Edition. Sinauer Associates Inc. Sunderland, MA.
 22. Dana M. Small and Barry G. Green. "A Proposed Model of a Flavor Modality". The Neural Bases of Multisensory Processes. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
 23. "Mortality and Burden of Disease Estimates for WHO Member States in 2002" (xls). World Health Organization. 2002.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sensory system
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வுத்_தொகுதி&oldid=3807740" இலிருந்து மீள்விக்கப்பட்டது