உன்முக் சந்த்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

உன்முக் சந்த் (Unmukt Chand) (பிறப்பு:26 மார்ச், 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1] இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் . மேலும் இவர் 1994 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2010 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டில் இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 60 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3184 ஓட்டங்களையும் , 120 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 4505 ஓட்டங்களையும் ,77 இருபது20 போட்டிகளில் விளையாடி 1565 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.[2]

உன்முக் சந்த்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உன்முக் சந்த் தாகூர்
பிறப்பு26 மார்ச்சு 1993 (1993-03-26) (அகவை 31)
தில்லி, இந்தியா
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010/11-2019தில்லி துடுப்பாட்ட அணி
2011-2013டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 9)
2010/11-2013வடக்கு தொகுதி
2014ராஜஸ்தான் ராயல்ஸ்
2015-2016மும்பை இந்தியன்ஸ் (squad no. 15)
2019-தற்போது வரைஉத்தராகண்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ப அ இ20
ஆட்டங்கள் 48 79 59
ஓட்டங்கள் 2690 2796 1188
மட்டையாட்ட சராசரி 35.39 39.38 22.00
100கள்/50கள் 7/14 4/19 3/2
அதியுயர் ஓட்டம் 151 119 125
வீசிய பந்துகள் 48 66
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
53/0 30/3 38/1
மூலம்: கிரிக் இன்போ, 2 செப்டம்பர், 2019

முதல் தரத் துடுப்பாட்டம்

தொகு

இவர் 2010 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். நவம்பர் 17, தில்லியில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் குசராத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக அறிமுகமானார். பின் 2017 ஆம் ஆண்டில் ஆலூர் துடுப்பாட்ட அரங்கத்தில் கருநாடகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ

தொகு

2010 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பெப்ரவரி 10 சிர்சா துடுப்பாட்ட அரங்கத்தில் சம்மு காஸ்மீர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் தெஹ்ரா தன் துடுப்பாட்ட அரங்கத்தில் உத்தரகாண்ட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சிக்கிம் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

இருபது20

தொகு

2010 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். மார்ச் 14 இந்தூர் துடுப்பாட்ட அரங்கத்தில் அசாம் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் மார்ச் 11 இந்தூரில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

2012 ஆம் ஆண்டில் இவரின் தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணி துடுப்பாட்ட உலகக் கோப்பை வென்றது.டவுன்ஸ்வில்லில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்கள் எடுத்தார், [3] ஆஸ்திரேலியவின் முன்னாள் வீரரான இயன் சேப்பலின் பாராட்டைப் பெற்றார். [4]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

குமாவோனி ராஜ்புத் குடும்பத்தில் பரமத் சந்த் தாக்கூர் மற்றும் ஆசிரியர்களாக இருக்கும் ராஜேஸ்வரி சந்த் ஆகியோருக்கு மகனாக உன்முக் சந்த் பிறந்தார். [5] இவர் டி பி எஸ் பள்ளியில் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பரகம்பா சாலையில் உள்ள மாடர்ன் பள்ளிக்கு மாறினார்.[6]

ஐபிஎல்

தொகு

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பாக விளையாடினார். ஐபிஎல்லின் 6 ஆவது பருவத்திலும் இவர் விளையாடினார். ஐபிஎல்லின் 7 ஆவது பருவத்தில் 65 இலட்சம் ரூபாய்க்கு இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. 2015 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத் தேர்வானார்.[7]

குறிப்புகள்

தொகு
  1. "Unmukt Chand Player Profile". ESPN Cricinfo.
  2. "Unmukt Chand". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
  3. India U-19 wins World Cup under the captaincy of Unmukt Chand
  4. Chappell, Ian (August 26, 2012). "Harmeet Singh and Unmukt Chand are ready for international cricket". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் January 4, 2016.
  5. "'I hope I'll have my feet on the ground and not fly off'". பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  6. "Reference: My Journey To The World Cup: Unmukt Chand's New Book To Be Launched Nov 30". Learning and Creativity. 27 November 2013. பார்க்கப்பட்ட நாள் 11 March 2014.
  7. "Unmukt Chand Player Profile". ESPN Cricinfo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்முக்_சந்த்&oldid=2894835" இலிருந்து மீள்விக்கப்பட்டது