உமா சர்மா

இந்திய நடனக் கலைஞர்

உமா சர்மா (Uma Sharma), (பிறப்பு 1942) ஒரு கதக் நடனக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் ஆசிரியர் ஆவார். 1946 ஆம் ஆண்டில் இவரது தந்தையால் நிறுவப்பட்ட புதுதில்லியில் அமைந்துள்ள பாரம்பரிய நடனம் மற்றும் சங்கீத அகாதமியான, பாரதிய சங்கீத சதன் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நட்வாரி நிருத்யாவின் பழைய பாரம்பரிய நடன வடிவம் அல்லது பிருந்தாவனத்தில் நடந்தேறியதாகக் கருதப்படும் ராசலீலையை புதுப்பித்ததன் மூலமாக இவர் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இது பின்னர் கதக்கில் உருவானது.[1][2][3]

உமா சர்மா
பிறப்பு1942
தில்லி

கதக் நடனம், இடைக்கால நூற்றாண்டுகளின் கிருஷ்ண பக்தி கவிதைகளையும், 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் வளர்ச்சியடைந்து, அரசவை கவிதைகளையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இது அன்பின் வெளிப்பாடன சிருங்கார ரசத்தைக் கொண்டாடியது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி

தொகு

உமா சர்மாவின் குடும்பம் ராஜஸ்தானின் தோல்பூரைச் சேர்ந்தது ஆகும். இவர், 1942 இல், தில்லியில் பிறந்தார், உமா சர்மா குரு ஹிராலால்ஜி மற்றும் ஜெய்ப்பூர் கரானாவின் கிர்வார் தயாள் ஆகியோரிடம் தனது நடனப் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அவர் ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த பண்டிதர் சுந்தர் பிரசாத்திடம் ஒரு மாணவராகச் சேர்ந்தார். அவர், தாள கால் செயல்பாடு மற்றும் அதன் வரிசைமாற்றங்கள் குறித்து வலியுறுத்தினார். அபிநய கலைக்கு பெயர் பெற்ற லக்னோ கரானாவின் ஷம்பு மஹராஜ் மற்றும் பிர்ஜு மகராஜ் ஆகியோர், கதக் பாரம்பரியத்தின் குறிப்பிடப்பட்ட குருக்களாக இருந்தனர். பின்னர் உமா சர்மா இருவரின் படைப்பு இணைவை அடைய முயன்றார்.[1] உமா புது தில்லியிலுள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் புதுடில்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

இவர், பாரம்பரிய நடனத்தின் விளக்கக்காட்சியைக் கற்றுக்கொண்ட பிறகு, பல்வேறு நடனக் காட்சிகளில் புதிய நடன வகைகள் மற்றும் முழு நீள நடன-நாடகங்களை இயற்றுவதன் மூலம் கதக்கின் திறனை விரிவுபடுத்தியுள்ளார். இவரது 'ஸ்திரீ' (பெண்), என்னும் நடன நாடகம் அதன் சக்திவாய்ந்த கருப்பொருள் உள்ளடக்கம் மற்றும் கலை விளக்கக்காட்சிக்காக நன்கு அறியப்படுகிறது. ஒரு பெண்ணின் வெளிப்பாடாக, 'ஸ்திரீ' நாடகம், கதக் நடனத்தில் பல நூற்றாண்டுகளாக பெண்ணின் நிலையை சித்தரிப்பதில் உணர்ச்சிபூர்வமான உந்துதலையும், ஒரு சுயாதீன அடையாளத்திற்கான தேடலையும் தருவதாக அமைந்துள்ளது.

உமா நாடு முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார் மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச விழாக்களில் பங்கேற்றுள்ளார். மேலும், இவர், வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களின் அழைப்பை ஏற்று மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் என்கிற கலாச்சார துறை அமைப்பின் ஒரு பிரதிநிதியாக, சோவியத் ஒன்றியம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் சீனா போன்ற வெளிநாடுகளில் செயல்திறன் சுற்றுப்பயணங்கள் செய்துள்ளார்.

உமா சர்மா தலைநகரான புதுதில்லியில் தனது சொந்த இசை மற்றும் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார், மேலும் புதிய தலைமுறை இளைய நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

இருப்பினும், மூத்த நடன விமர்சகரும் புதுதில்லியில் இருக்கும் அறிஞருமான சுனில் கோத்தாரி, இவரது நடனம் எப்போதும் பாலிவுட் சார்ந்த இயல்புடையது என்று விமர்சித்துள்ளார். விருதுகள் மற்றும் விளம்பரம் பெற பல்வேறு அரசாங்க அதிகாரிகளுடனான தொடர்புகளை இவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து உமா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

விருதுகள்

தொகு

1973 ஆம் ஆண்டில் இந்திய அரசால், பத்மஸ்ரீவிருது மற்றும் 2001இல், பத்ம பூஷண் விருது வழங்கப்பட்ட இளைய நடனக் கலைஞர் என்ற பெருமைக்கு உரியவரானார்.[4] இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருதும், சாகித்ய கால பரிஷத் விருதும் வழங்கப்பட்டது . ஜனவரி 27, 2013 அன்று, இந்திய கதக் நடனத்திற்கு அவர் செய்த பெரும் பங்களிப்புக்காக காசி அகில் பாரதிய விக்ரம் பரிஷத் அமைப்பு, ஸ்ரீஜன் மனிஷி என்கிற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Uma Sharma Profile
  2. Richmond, p. 198.
  3. Massey, p. 83
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_சர்மா&oldid=4162059" இலிருந்து மீள்விக்கப்பட்டது