சிருங்கார ரசம்



சிருங்கார ரசம் அல்லது காதல் சுவை (Sringara) (சமக்கிருதம்: शृङ्गार, śṛṅgāra) (Śṛngāra, शृङ्गार), இந்தியப் பாரம்பரிய நாட்டியம், இசை, கவிதை, நாடகம், ஓவியம் மற்றும் சிற்பத்துறையில் வெளிப்படும் கேளிக்கை, வெறுப்பு, கோபம், பயம், பொறாமை, கருணை, வீரம் போன்ற நவரசங்களில் ஒன்றான அன்பு, காதல், ஆசை போன்றவைகளை வெளிப்படுத்துவதே சிருங்கார ரசம் ஆகும்.

சிருங்கார ரசத்தை முகத்தில் வெளிப்படுத்தும் நாட்டிய ஆசான் பத்மசிறீ மணி மாதவ சாக்கியர்[1]
சிருங்கார ரசத்தை வெளிப்படுத்தும் பரதநாட்டியக் கலைஞர்

பாரம்பரிய பரதநாட்டியம், கதக், மணிப்புரி, ஒடிசி மற்றும் மோகினியாட்ட நாட்டியக் கலைஞர்கள் சிருங்காரச் சுவையை அதிகம் வெளிப்படுத்துவதில் வல்லுநர்கள். இந்தியச் சிற்பங்கள், ஓவியங்கள், கவிதைகள் மற்றும் நாட்டியங்களில், நவ ரசங்களில் (ஒன்பது சுவைகளில்) சிருங்கார ரசம் எனும் காதல் சுவையுடன் அதிகமாக வெளிப்படும் வண்ணம் அமைந்துள்ளது.

பாரதியின் கண்ணன் பாட்டிலும் [2], காளிதாசரின் சாகுந்தலம், மேகதூதம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்திரம் போன்ற இலக்கியங்களில் சிருங்கார ரசம் (காதல் சுவை) அதிகம் கொண்டது.

கிருட்டினை நாயகனவும், கோபியர்கள், தங்களை கிருட்டிணரின் நாயகிகளாகப் பாவித்து கிருட்டிணருடன் சேர்ந்து ஆடும் ராசலீலை நாட்டியம் சிருங்கார ரசம் மிக்கதாகும்.

கஜுராஹோ மற்றும் கொனார்க் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிற்பங்கள் சிருங்கார ரசத்தை அதிகம் வெளிப்படுத்தும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mani Madhava Chakyar
  2. கன்னத்தில் முத்தமிட்டால்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருங்கார_ரசம்&oldid=4060255" இலிருந்து மீள்விக்கப்பட்டது