உலக சதுரங்க வாகை

சதுரங்கத்தில் அடைவு

உலக சதுரங்க வாகை (World Chess Championship) என்பது சதுரங்கத்தில் உலக வாகையாளரைத் தெரிவு செய்ய நிகழ்த்தப்படும் ஒரு தொடர் ஆகும். நடப்பு உலக வாகையாளர் சீனாவைச் சேர்ந்த திங் லிரேன் ஆவார். இவர் 2023 உலக சதுரங்க வாகைப் போட்டியில் இயான் நிப்போம்னிசியை வென்று வாகையாளர் ஆனார். முந்தைய வாகையாளர் மாக்னசு கார்ல்சன், தனது பட்டத்தைத் தக்கவைக்க மறுத்துவிட்டார்.

நடப்பு (2023) உலக வாகையாளர் திங் லிரேன் (சீனா)

உலக வாகைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிகழ்வு 1886 ஆம் ஆண்டில் உலகின் இரண்டு முன்னணி வீரர்களான வில்கெம் இசுட்டைனிட்சு, யொகான்னசு சூக்கர்டோர்ட் ஆகியோருக்கிடையேயான போட்டியாகும். இசுட்டைனிட்சு வெற்றி பெற்று முதல் உலக வாகையாளரானார்.[1] 1886 முதல் 1946 வரை, வாகையாளர் தேவையான விதிமுறைகளை அமைத்து, புதிய உலக வாகையாளராவதற்கு எந்தவொரு சவாலிலும் கணிசமான பங்களிப்புகளை உயர்த்தி, இறுதிப் போட்டியில் வாகையாளரைத் தோற்கடிக்க வேண்டும்.[2] 1946-இல் அன்றைய உலக வாகையாளரான அலெக்சாண்டர் அலேகின் இறந்ததைத் தொடர்ந்து, பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (பிடே) உலக வாகையாளருக்கான நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. இது 1948 உலக வாகையாளர் போட்டியுடன் தொடங்கியது.[3] 1948 முதல் 1993 வரை, பிடே அமைப்பு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு புதிய போட்டியாளரைத் தேர்வு செய்ய போட்டிகளின் தொகுப்பை ஏற்பாடு செய்தது. 1993-ஆம் ஆண்டில், நடப்பு சாம்பியனான காரி காஸ்பரொவ் பிடே-யில் இருந்து பிரிந்தார். உலக வாகைப் பட்டத்திற்குப் போட்டியாக காசுபரோவ் "தொழில்முறை சதுரங்க சங்கத்தை" (PCA) தொடங்கி அடுத்த 13 ஆண்டுகளுக்கு அச்சங்கத்தின் மூலமாக ஒரு "போட்டி வாகையாளர்" தெரிவானார். இறுதியில் 2006 ஆம் ஆண்டில் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு அடுத்தடுத்த போட்டிகள் பிடே-ஆல் நடத்தப்பட்டு வருகின்றன.

2014 முதல், வாகைப் போட்டிகள் இரண்டு ஆண்டு சுழற்சியில் நிலைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020, 2022 போட்டிகள் முறையே 2021, 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டன.[4] அடுத்த போட்டி வழக்கமான அட்டவணைப்படி 2024 நவம்பரில் நடைபெறும்.

உலக வாகைப் போட்டிகளில் அனைத்து வீரர்களும் பங்குபற்றக் கூடியதாக இருந்தாலும், பெண்கள், 20 வயதுக்குட்பட்டவர்கள், குறைந்த வயதுக் குழுக்கள், மூத்தவர்கள் ஆகியோருக்குத் தனித்தனி வாகைப் போட்டிகள் உள்ளன. விரைவு, மின்னல், கணினி சதுரங்கம் ஆகியவற்றிலும் உலக சதுரங்க வாகைப் போட்டிகள் நடைபெறுகின்றன.

உலக வாகையாளர்கள் தொகு

பிடே-இற்கு முன்னர் (1886–1946) தொகு

# பெயர் நாடு ஆண்டுகள்
1 வில்கெம் இசுட்டைனிட்சு   Austria-Hungary
  United States
1886–1894
2 இமானுவேல் லாசுக்கர்   1894–1921
3 ஒசே ரவூல் கப்பபிளாங்கா   Cuba 1921–1927
4 அலெக்சாந்தர் அலேகின்   பிரான்சு 1927–1935
5 மாக்சு இயூவி   Netherlands 1935–1937
(4) அலெக்சாந்தர் அலேகின்   பிரான்சு 1937–1946

பிடே உலக வாகையாளர்கள் (1948–1993) தொகு

# பெயர் நாடு ஆண்டுகள்
6 மிகைல் பொத்வின்னிக்   Soviet Union 1948–1957
7 வசீலி சிமிசுலோவ் 1957–1958
(6) மிகைல் பொத்வின்னிக் 1958–1960
8 மிகைல் தால் 1960–1961
(6) மிகைல் பொத்வின்னிக் 1961–1963
9 திக்ரான் பெத்ரசியான் 1963–1969
10 போரிசு சுபாசுகி 1969–1972
11 பாபி ஃபிஷர்   United States 1972–1975
12 அனத்தோலி கார்ப்பொவ்   Soviet Union 1975–1985
13 காரி காஸ்பரொவ்   Soviet Union
  Russia
1985–1993

மரபு-சார் (PCA) உலக வாகையாளர்கள் (1993–2006) தொகு

# பெயர் நாடு ஆண்டுகள்
13 காரி காஸ்பரொவ்   Russia 1993–2000
14 விளாதிமிர் கிராம்னிக் 2000–2006

பிடே உலக வாகையாளர்கள் (1993–2006) தொகு

# பெயர் நாடு ஆண்டுகள்
அனத்தோலி கார்ப்பொவ்   Russia 1993–1999
அலெக்சாந்தர் காலிஃப்மேன் 1999–2000
விசுவநாதன் ஆனந்த்   India 2000–2002
உருசுலான் பனமரியோவ்   Ukraine 2002–2004
உருசுத்தாம் காசிம்சானொவ்   Uzbekistan 2004–2005
வெசிலின் தோப்பலோவ்   Bulgaria 2005–2006

பிடே (இணைந்த) உலக வாகையாளர்கள் (2006–இன்று) தொகு

# பெயர் நாடு ஆண்டுகள்
14 விளாதிமிர் கிராம்னிக்   Russia 2006–2007
15 விசுவநாதன் ஆனந்த்   India 2007–2013
16 மாக்னசு கார்ல்சன்   Norway 2013–2023
17 திங் லிரேன்   China 2023–இன்று

மேற்கோள்கள் தொகு

  1. David Hooper and Kenneth Whyld, The Oxford Companion to Chess, Oxford University Press, 1992 (2nd edition), p.459. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866164-9.
  2. "1921 World Chess Championship". Archived from the original on 20 January 2005. பார்க்கப்பட்ட நாள் 4 June 2008.
  3. Winter, E. (2003–2004). "Interregnum". Chess History Center. Archived from the original on 6 December 2010. பார்க்கப்பட்ட நாள் 15 September 2008.
  4. Henshaw, Jack (9 December 2021). "World Chess Championship 2021: Decisively decided? • The Tulane Hullabaloo". The Tulane Hullabaloo. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சதுரங்க_வாகை&oldid=3938770" இலிருந்து மீள்விக்கப்பட்டது