உலு பேராக் மாவட்டம்
உலு பேராக் (Daerah Hulu Perak) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். அந்த மாநிலத்திலேயே பெரிய மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டத்தின் கிழக்கே கிளாந்தான் மாநிலம்; மேற்கில் கெடா மாநிலம்; தெற்கே கோலாகங்சார் மாவட்டம், தென்மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; ஆகிய பகுதிகள் உள்ளன. தவிர தாய்லாந்தின் பெத்தோங் மாவட்டத்தின் ஒரு பகுதியை எல்லையாகக் கொண்டு உள்ளது.
உலு பேராக் மாவட்டம் அமைவிடம் பேராக் | |
ஆள்கூறுகள்: 5°20′N 101°15′E / 5.333°N 101.250°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | உலு பேராக் மாவட்டம் |
தொகுதி | கிரிக் |
நகராட்சி | கிரிக் மாவட்ட மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | மியோர் சைபுல் பாடிலா (MEOR SHAHIBUL FADILAH) |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,560.43 km2 (2,533.00 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 89,067 |
• மதிப்பீடு (2015) | 1,90,700 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 33100-33400 |
தொலைபேசி எண்கள் | +6-05 |
வாகனப் பதிவெண் | A |
மாவட்டத்தின் மிக உயரமான இடம் தித்திவாங்சா மலைகளில் அமைந்துள்ளது. தாய்லாந்து / மலேசிய எல்லைக்கும்; தெமாங்கூர் (Temenggor) ஏரிக்கும் அருகில் 1,533 மீட்டர் உயரமுள்ள உலு திதி பாசா சிகரம் தான் அந்த உயரமான இடம்.[1]
வரலாறு
தொகு19-ஆம் நூற்றாண்டு வரை, சிறிது காலத்திற்கு இந்த மாவட்டத்தின் ஒரு பகுதி பழைய சயாம் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்தது. சயாம் என்பது தற்சமயம் தாய்லாந்து என்று அழைக்கப் படுகிறது.
சயாம் கட்டுப்பாட்டின் கீழ் அப்போது இருந்த பகுதிகளில் இன்றைய கிரிக்; பெங்காலான் ஊலு (குரோ), கெருனை (Kerunai); பெலும் காடுகள்; மற்றும் தெமாங்கூர் ஏரிகள் போன்ற இடங்கள் அடங்கும்.
அன்றைய காலக்கட்டத்தில் அங்கு ரெமான் (Reman) எனும் மலாய் சிற்றரசு இருந்தது. ரெமான் சிற்றரசின் தலைநகரம் பெங்காலான் ஊலு எனும் இடத்திற்கு அருகில் அமைந்து இருந்தது.[2]
தாய்லாந்து - பேராக் எல்லை ஒப்பந்தம்
தொகுபிரித்தானியர்களின் பாதுகாக்கப்பட்ட மாநிலமாக பேராக் மாறியதும், 1882-ஆம் ஆண்டில் ஓர் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. கிரிக் நகரில் இருந்து 5 கி.மீ தெற்கே இருக்கும் புக்கிட் நாஷா எனும் இடத்தில், பேராக் மாநிலத்திற்கும் தாய்லாந்து நாட்டிற்கும் இடையிலான அந்த எல்லை ஒப்பந்தம் வரையப் பட்டது.
1899-ஆம் ஆண்டில் கிரிக் நகரத்தையும்; அதைச் சுற்றியுள்ள இடங்களையும் பேராக் மாநிலத்திற்குச் சயாம் நாடு (தாய்லாந்து) மாற்றிக் கொடுத்தது. அப்போது பேராக் மாநிலம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் (Federated Malay States) கீழ் இருந்தன. இன்றைய மலேசியா-தாய்லாந்து எல்லை, 1909-ஆம் ஆண்டில் இரு நாடுகளும் இடையே உறுதி செய்யப்பட்டது.[3]
நிர்வாகப் பிரிவுகள்
தொகுஉலு பேராக் மாவட்டம் 10 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மூன்று மாவட்ட மன்றங்கள் உள்ளன. அவையாவன:[4]
பெங்காலான் உலு மாவட்ட மன்றத்தின் (Pengkalan Hulu District Council) கீழ்:
- பெங்காலான் உலு (Pengkalan Hulu)
- பெலுக்கார் செமாங் (Belukar Semang)
கிரிக் மாவட்ட மன்றத்தின் (Gerik District Council) கீழ்:
- கிரிக் (Gerik)
- பெலும் Belum
- கெனரிங் Kenering (with Lawin)
- கெருனை Kerunai
- தெமாங்கூர் (Temenggor)
லெங்கோங் மாவட்ட மன்றத்தின் (Lenggong District Council) கீழ்:
- லெங்கோங் (Lenggong)
- டுரியான் பிபிட் (Durian Pipit)
- தெமலோங் (Temelong)
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
தொகுபின்வரும் உலு பேராக் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[5]
உலு பேராக் இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 77,386 | 86.9% |
சீனர்கள் | 8,628 | 9.6% |
இந்தியர்கள் | 1,658 | 1.9% |
மற்றவர்கள் | 1,395 | 1.6% |
மொத்தம் | 89,067 | 100% |
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) உலு பேராக் மாவட்டத்தின் கிரிக் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்புல்லா ஒசுமான் (Hasbullah Osman) கடந்த 2020 நவம்பர் 16-ஆம் தேதி மாரடைப்பால் காலமானர்.
மலேசியாவில் அவசரகாலம் நடைமுறையில் இருப்பதால் கிரிக் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.[6]
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P54 | கிரிக் | காலியாக உள்ளது | காலியாக உள்ளது |
P55 | லெங்கோங் | சம்சுல் அனுவார் நசாரா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
பேராக் மாநிலச் சட்டமன்றம்
தொகுபேராக் மாநிலச் சட்டமன்றத்தில் உலு பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P54 | N01 | பெங்காலான் உலு | அஸ்னால் இப்ராகிம் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P54 | N02 | தெமாங்கூர் | சால்பியா முகமட் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P55 | N03 | கெனரிங் | முகமட் தார்மிசி இட்ரிஸ் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P55 | N04 | கோத்தா தம்பான் | சாரானி முகமட் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Gunong Ulu Titi Basah: Thailand". Geographic.org. 1994-04-06. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- ↑ Pada penghujung abad yang ke 19, sebuah peperangan telah meletus di Hulu Perak. Peperangan ini telah melibatkan daerah kecil di Lenggong yang dinamakan sebagai perang saudara.
- ↑ "Laporan Tahunan Jabatan Ukur dan Pemetaan 2018 (Department of Survey and Mapping Annual Report 2018)" (PDF). Department of Survey and Mapping, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
- ↑ "Portal Rasmi Pejabat Daerah Dan Tanah Hulu Perak, Gerik - Geografi Daerah". pdtgerik.perak.gov.my.
- ↑ மலேசியா 2010 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
- ↑ The Election Commission will not proceed with the Gerik by-election in Perak and the Bugaya by-election in Sabah following the proclamation of Emergency in the two constituencies.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Hulu Perak District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.