கிரிக் மக்களவைத் தொகுதி

கிரிக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gerik; ஆங்கிலம்: Gerik Federal Constituency; சீனம்: 宜力国会议席) என்பது மலேசியா, பேராக், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P054) ஆகும்.[6]

கிரிக் (P054)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Gerik (P054)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
கிரிக் மக்களவைத் தொகுதி

(P54 Gerik)
மாவட்டம்உலு பேராக் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை47,565 (2023)[1]
வாக்காளர் தொகுதிகிரிக் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்கிரிக், லெங்கோங், குரோ, பெத்தோங்
பரப்பளவு4,521 ச.கி.மீ[3]
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்பைத்துல் உசிர் அயோப்
(Fathul Huzir Ayob)
மக்கள் தொகை56,810 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (72.0%)
  சீனர் (13.6%)
  இதர இனத்தவர் (4.8%)

கிரிக் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து கிரிக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கிரிக்

தொகு

கிரிக் நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், பட்டர்வொர்த் மாநகரில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மலேசியாவை கிழக்கு மேற்காக இணைக்கும் கிழக்கு-மேற்கு விரைவுசாலையின் நடு மையத்தில் அமைந்து இருப்பதால், இந்த நகரை ஓய்வு நகரம் என்றும் அழைக்கிறார்கள். மலேசிய தாய்லாந்து எல்லையில் இருந்து, மிக அருகில், 30 கி.மீ. தொலைவில் தான் இருக்கிறது.[7]

மலேசிய கிழக்கு-மேற்கு விரைவுசாலை

தொகு

1880-களில் கிரிக் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. 1870-இல், தாய்லாந்தில் இருக்கும் பட்டாணி எனும் இடத்தில் இருந்து சிலர் இங்கு வந்து குடியேறினார்கள். அந்தப் பகுதியின் காடுகளை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்டனர். இந்த இடத்தை கெரிக் என்றும் அழைப்பார்கள். மலேசிய வாழ் தமிழர்கள் கிரிக் என்று அழைக்கிறார்கள்.

கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த நகரம் நவீன மயமாகி வருகிறது. பல புதிய சாலைகள் இந்த நகரை அலங்கரிக்கின்றன. மலேசிய கிழக்கு-மேற்கு விரைவுசாலை அமைக்கப் பட்ட பின்னர், இந்த நகரம் வேகமான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது.

கிரிக் மக்களவைத் தொகுதி

தொகு
பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் உலு பேராக் மக்களவைத் தொகுதியில் இருந்து கிரிக் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P044 1974–1978 சும்சுதீன் டின்
(Shamsuddin Din)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982 தாஜோல் ரோசுலி
(Tajol Rosli Mohd Ghazali)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P049 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P052 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 கம்சியா இயோப்
(Khamsiyah Yeop)
11-ஆவது மக்களவை P054 2004–2008 வான் அசீம் வான் தே
(Wan Hashim Wan Teh)
12-ஆவது மக்களவை 2008–2013 தான் லியாம் கோ
(Tan Lian Hoe)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
13-ஆவது மக்களவை 2013–2018 அசுபுல்லா ஒசுமான்
(Hasbullah Osman)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
14-ஆவது மக்களவை 2018–2020
2020–2022 காலி[N 1]
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் பைத்துல் உசிர் அயோப்
(Fathul Huzir Ayob)
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)

கிரிக் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
47,565
வாக்களித்தவர்கள்
(Turnout)
35,360 72.77%   - 5.31%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
34,612 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
78
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
670
பெரும்பான்மை
(Majority)
1,377 3.98%   - 16.26
வெற்றி பெற்ற கட்சி:   பெரிக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[8]

கிரிக் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
சின்னம் வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
கிடைத்த
வாக்குகள்
% ∆%
  பைத்துல் உசிர் அயோப்
(Fathul Huzir Ayob)
பெரிக்காத்தான் 34,612 15,105 43.64% + 43.64%  
  அச்ராப் வாஜிடி துசுக்கி
(Asyraf Wajdi Dusuki)
பாரிசான் - 3,728 39.66% - 16.40 %  
  அகமத் தர்மிசி முகமது ஜாம்
(Ahmad Tarmizi Mohd Jam)
பாக்காத்தான் - 5,779 16.70% - 6.56%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. Bandar Gerik adalah pusat pentadbiran Daerah Gerik.
  8. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  1. 16 நவம்பர் 2020-இல் பதவியில் இருந்தவர் காலமானார். 2021 மலேசிய அவசரநிலை பிரகடனம் காரணமாகவும்; கோவிட்-19 தொற்றுநோய் காரணமாகவும் 2022 மலேசியப் பொதுத் தேர்தல் வரையில் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிக்_மக்களவைத்_தொகுதி&oldid=4008110" இலிருந்து மீள்விக்கப்பட்டது