மேற்கு கடற்கரை விரைவுச்சாலை
மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (ஆங்கிலம்: The West Coast Expressway (E32); மலாய்: Lebuhraya Pesisiran Pantai Barat) என்பது தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை வழியாகச் செல்லும் ஒரு விரைவுச்சாலை ஆகும்.
மேற்கு கரை விரைவுச்சாலை West Coast Expressway Lebuhraya Pesisiran Pantai Barat | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு மேற்கு கரை நெடுஞ்சாலை நிறுவனம் (West Coast Expressway Sdn Bhd) | |
நீளம்: | 233.0 km (144.8 mi) |
பயன்பாட்டு காலம்: | 2014-தற்சமயம் – |
வரலாறு: | ஜூன் 2019-இல் முதல் கட்டமாகத் திறக்கப் பட்டது, 2024-இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | கூட்டரசு சாலை 60 & கூட்டரசு சாலை 1 (மலேசியா); சங்காட் ஜெரிங், பேராக் |
கூட்டரசு சாலை 5 கூட்டரசு சாலை 58 கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை புதிய வடக்கு கிள்ளான் சாலை கூட்டரசு சாலை 2 பத்து தீகா பழைய சாலை சா ஆலாம் விரைவுச்சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை | |
தெற்கு முடிவு: | பந்திங் சாலை-டெங்கில், பந்திங், சிலாங்கூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | தைப்பிங், பந்தாய் ரெமிஸ், புருவாஸ், சித்தியவான், தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், சபாக் பெர்னாம், செகிஞ்சான், கோலா சிலாங்கூர், காப்பார், சுங்கை பெசார், புக்கிட் ராஜா, கிள்ளான், பந்திங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
233-கி.மீ. (145-மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இருப்பினும் பல பகுதிகள் பொது பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டு உள்ளன. இந்த விரைவுச் சாலை கட்டி முடிந்தவுடன், பேராக் மாநிலத்தின் சங்காட் ஜெரிங்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங் நகர்களைக் கடந்து செல்லும். [1]
பொது
தொகுஇந்த நகரங்கள் ஏற்கனவே கூட்டரசு சாலை 5 (மலேசியா); கூட்டரசு சாலை 60 (மலேசியா); ஆகிய கூட்டரசு சாலைகளின் வழியில் உள்ள நகரங்களாகும். மேற்கு கடற்கரை விரைவுச்சாலை கட்டி முடிக்கப் பட்டதும், அந்தச் சாலை இந்தக் கூட்டரசு சாலைகளின் வழியாக அருகைமையில் தொடரும். அந்த வகையில் சங்காட் ஜெரிங்; பந்திங் நகரங்களையும் அந்தச் சாலை மிக அருகில் கடந்து செல்லும். [2]
இந்தக் கடற்கரை விரைவுச்சாலை 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[3]
வரலாறு
தொகுஇந்த விரைவுச் சாலையைக் கட்டுவதற்கு மேற்கு கரை நெடுஞ்சாலை நிறுவனம் (ஆங்கிலம்: West Coast Expressway Sdn Bhd; மலாய்: Konsortium Lebuhraya Pantai Barat) எனும் கட்டுமான நிறுவனத்திற்கு 2013 டிசம்பர் 20-ஆம் தேதி மலேசிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது.
ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்தச் சாலை பற்பல நெருக்கடிகளினால் காலதாமதமானது. எனினும் 2024 அனைத்துக் கட்டுமானங்களும் முடிவுறும் என எதிர்பார்க்கப் படுகிறது.[4]
கூட்டரசு சாலை 28
தொகுஇந்த மேற்கு கடற்கரை விரைவுச்சாலைக்கு முதலில் கூட்டரசு சாலை 28 என பெயர் வைக்கப்பட்டது. எனினும் மாற்றம் செய்யப்பட்டு கூட்டரசு சாலை 32 என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. பழைய பெயரான கூட்டரசு சாலை 28 எனும் பெயர் சுல்தான் அப்துல் அலீம் முவாசாம் ஷா பாலத்திற்கு (Sultan Abdul Halim Muadzam Shah Bridge) வழங்கப்பட்டது.
நீளமான சாலைகள்
தொகுஇந்த விரைவுச்சாலையின் கட்டுமான வேலை நிறைவு அடைந்த பின்னர், இந்தச் சாலை தீபகற்ப மலேசியாவில் நான்காவது மிக நீளமான சாலையாக அமையும்.
மலேசியாவில் இதர மிக நீளமான சாலைகள்:
- வடக்கு-தெற்கு விரைவுசாலை வடக்கு வழித்தடம் (மலேசியா) (North-South Expressway Northern Route)
- கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (East Coast Expressway)
- வடக்கு-தெற்கு விரைவுசாலை தெற்கு வழித்தடம் (மலேசியா) (North-South Expressway Southern Route)
கண்ணோட்டம்
தொகுமேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் கட்டுமானம் பதினொரு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் ஐந்து தொகுப்புகளுக்கான பணிகள் மே 2014-இல் தொடங்கப்பட்டன. அவற்றில் மூன்று தொகுப்புகள் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளன. மற்ற இரண்டு தொகுப்புகள் பேராக் மாநிலத்தில் உள்ளன.
தஞ்சோங் காராங் முதல் ஊத்தான் மெலிந்தாங் வரையிலான பகுதிகளும்; தெலுக் இந்தான் முதல் கம்போங் லெக்கிர் வரையிலான பகுதிகளும்; தற்போதுள்ள மலேசியக் கூட்டரசு சாலை 5-ஐ பயன்படுத்துகின்றன.
கட்டுமானங்கள்
தொகுமேற்கு கடற்கரை விரைவுச்சாலையைக் கட்டுவதற்கு ஏறக்குறைய RM 4.6 பில்லியன் செலவாகும் என்றும்; கட்டுமானத்திற்கு மட்டும் RM 3.6 பில்லியன் செலவாகும் என்றும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.[5] [6]
2014 மே 25-ஆம் தேதி, விரைவுச்சாலையின் கட்டுமானம் தொடங்கியது. 2019 டிசம்பர் 10-ஆம் தேதி, 71% வேலைகள் முடிவடைந்தன. இருப்பினும் சில இயற்கைச் சிற்றிடர்களால் கட்டுமான வேலைகள் தாமதமாகின. 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்துக் கட்டுமானங்களும் முடிவுறும் என எதிர்பார்க்கப் படுகிறது.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Arif, Zahratulhayat Mat (3 May 2019). "Section 8 of West Coast Expressway opens today". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
- ↑ "Hot spots coming up along WCE". Edgeprop.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
- ↑ "Bumpy path to profitability | The Star". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
- ↑ Bernama (2 September 2019). "Sections 9, 10 of WCE now open". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
- ↑ "West Coast Expressway – Media Updates – WCE back in the spotlight". wce.com.my. Archived from the original on 19 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "WCE highway completion delayed to 2024 - The Malaysian Reserve". The Malaysian Reserve. Malaysia. Archived from the original on 3 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
- ↑ Thiagarajan, Tara (9 May 2019). "Photos Show Extent Of Damage to Collapsed Expressway That Caused Unexpected Water Shortage in Klang – WORLD OF BUZZ". worldofbuzz.com/ (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
- ↑ "In high gear to complete 233km West Coast Expressway - The Star Online". The Star. Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.