பட்டாணி நகரம்
பட்டாணி (ஆங்கிலம்: Pattani; தாய்: ปัตตานี); ஜாவி; ڤطاني ) என்பது தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில்; மலேசிய எல்லையில்; அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரம் பட்டாணி மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.
பட்டாணி
Pattani ปัตตานี | |
---|---|
கொடி சின்னம் | |
தாய்லாந்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 6°51′59″N 101°15′3″E / 6.86639°N 101.25083°E | |
நாடு | தாய்லாந்து |
மாநிலம் | பட்டாணி |
மாவட்டம் | முவாங் பட்டாணி |
அரசு | |
• முதல்வர் | பித்தாக் கோர்க்கியாட் பிதாக் (Pitak Korkiatpitak) |
பரப்பளவு | |
• நகரம் | 4.78 km2 (1.85 sq mi) |
• மாநகரம் | 96.86 km2 (37.40 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• நகரம் | 44,353 |
• அடர்த்தி | 9,300/km2 (24,000/sq mi) |
நேர வலயம் | தாய்லாந்து நேரம் ஒ.ச.நே +7 |
தாய்லாந்து தொலைபேசி எண்கள் | (+66) 73 |
இணையதளம் | pattanicity |
பட்டாணி நகரத்திற்கு அருகில் நாரதிவாட் (Narathiwat); சோங்கலா (Songkhla); சத்துன் (Satun); யாலா (Yala); ஆகிய மாநிலங்களும்; இதர பெரும் நகரங்களும் உள்ளன. பட்டாணி நகரம் தீபகற்ப மலேசியா பெருநிலப் பகுதியில், தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand) கடற்கரையுடன் ஒட்டி அமைந்து உள்ளது.
தேசபவன் மூவேங்
தொகுஇந்த நகரம் தேசபவன் மூவேங் (ஆங்கிலம்: Thesaban Mueang; தாய்: (เทศบาลเมือง) எனும் ஓர் உள்ளாட்சி நகரமாகும். அதாவது சொந்த நகராட்சியைக் கொண்ட நிர்வாக அமைப்பு முறையில் இயங்கும் நகராட்சியாகும்.
ஒரு நகரம் தேசபவன் மூவேங் தகுதியைப் பெற வேண்டுமெனில், அந்த நகரம் ஒரு மாநிலத்தின் தலைநகராக இருக்க வேண்டும்; அல்லது குறைந்தபட்சம் 10,000 மக்களை மக்கள்தொகையாகக் கொண்டு இருக்க வேண்டும்; மற்றும் ஒரு நகரத்தின் அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான வருமானத்தையும் பெற்று இருக்க வேண்டும்.
பொது
தொகுஇந்த நகரத்திற்குத் தெற்கில் சங்கலகிரி மலைத்தொடர் (Sankalakhiri Mountain Range) உள்ளது. அந்த மலைத் தொடரில் புடோ-சு-நிகை பாடி தேசிய பூங்கா (Budo-Su-ngai Padi National Park), மற்றும் யாலா; நாரதிவாட் மாநிலங்களின் எல்லைகள் உள்ளன. இங்குள்ள மக்கள் பேசும் உள்ளூர்ப் பேச்சுவழக்கு மொழி பட்டாணி மலாய் மொழியாகும் (Patani Malay).
பாங்காக் மாநகத்திற்கு தெற்கே 1,056 கி.மீ. தொலைவில் பட்டாணி நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் பட்டாணி ஆற்றின் முகத்துவாரத்தில் நிலை கொண்டு உள்ளது.
இந்த ஆற்றின் வழித்தடங்கள் 16-ஆம் நூற்றாண்டில் மாறி இருக்கலாம் என்றும்; தற்போதைய பட்டாணி நகரத்தில், அந்த ஆற்றின் தடப் போக்கு மாறிக் கடலில் கலந்து இருக்கலாம் என்றும் அறியப் படுகிறது.[2]
வரலாறு
தொகு17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பட்டாணி ஆற்றின் முகத்துவாரத்தில், இப்போது உள்ள கோலா பெக்காவில் (Kuala Bekah) ஒரு சிறிய துறைமுகம் இருந்தது. அந்தத் துறைமுகம் தான் பட்டாணி இராச்சியத்தின் பழைய வரலாற்று மையமாக இருந்தது.
தற்போதைய பட்டாணி நகரத்திற்கு கிழக்கே சில மைல்கள் தொலைவில் அந்தத் துறைமுகம் இன்றும் உள்ளது.
பட்டாணி இராச்சியம்
தொகுபழைய பட்டாணி இராச்சியம் 1785-ஆம் ஆண்டில் சயாமியர்களால் கைப்பற்றப்பட்டு சூறையாடப்பட்டது. அதன் பின்னர் தற்போதைய இடத்தில் ஒரு புதிய நகர மையம் உருவாக்கப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டில், மற்றும் பட்டாணி இராச்சியத்தின் சுல்தான், இன்றைய பட்டாணி நகரத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சாபாங் தீகாவிற்கு (Cabang Tiga) குடிபெயர்ந்தார். பட்டாணி நகர உள்ளூராட்சி 1935-ஆம் ஆண்டில் அரச ஆணை மூலம் நிறுவப்பட்டது.[3]
சொற்பிறப்பியல்
தொகுபட்டாணி என்பது மலாய்ப் பெயரான பட்டானி (ஆங்கிலம்: Pattani; ஜாவி: ڤتاني) என்பதன் தாய் மொழி தழுவலாகும். பட்டாணி மலாய் (Patani Malay) மொழி வழக்கில் "இந்தக் கடற்கரை" (This Beach) என்று பொருள்படும்.[4]
புராணக் கதைகளின் படி, முன்பு காலத்தில் பட்டாணி இராச்சியத்தின் தலைவராகவும்; அரசராகவும் பயா துனக்பா (Phaya Tunakpa) என்பவர் இருந்துள்ளார். இவர் கோத்தா மாளிகா (Kota Malikha) எனும் இடத்தில் இருந்து பட்டாணி கிராமப் பகுதிக்கு வந்தவர்.
பட நி லா
தொகுஒரு முறை அவர் வேட்டையாடச் சென்றார். ஓர் ஆடு அளவுக்கு ஒரு சருகுமானைப் பார்த்தார். அந்தச் சருகு மான் திடீரென்று காணாமல் போனது. அந்தச் சருகு மான் எங்கு சென்றது என்று அவர் விசாரித்தார், அவருடைய ஆட்கள் பட நி லா (Pata ni lah) என்று பதிலளித்தனர்.
பின்னர் அவர்கள் அந்தச் சருகு மானைத் தேடினார்கள். ஆனால் அதற்குப் பதிலாக ஒரு முதியவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் தன் பெயர் சே' தானி (Che' Tani) என்று கூறினார். பின்னர் சருகு மான் காணாமல் போன இடத்தில் ஒரு நகரத்தை கட்ட தலைவர் உத்தரவிட்டார். எனவே இந்த நகரம் அந்த முதியவரின் பெயரால் பட்டாணி என்று அழைக்கப் படுவதாகவும் நம்பப் படுகிறது.[5]
மாறன் மகாவம்சன்
தொகுமற்றொரு கூற்றின்படி: சமஸ்கிருதச் சொல்லான பத்தினி (Pathini) எனும் சொல்லில் இருந்து பட்டாணி எனும் சொல் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.
அதாவது முந்தைய இலங்காசுகம் பேரரசை (Langkasuka Empire) நிறுவிய மாறன் மகாவம்சன் (Merong Mahawangsa) என்பவரின் மகளின் பெயர் பத்தினி. அந்தப் பெயரில் இருந்து பட்டாணிக்குப் பெயர் வந்து இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "2018 Annual Population and House Statistics Report" [Statistics, population and house statistics for the year 2018]. Registration Office Department of the Interior, Ministry of the Interior. 31 December 2018. Archived from the original on 14 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Distance: Bangkok to Pattani". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
- ↑ "Royal Decree establishing Pattani City Municipality Pattani Province, B.E. 2478". ราชกิจจานุเบกษา 52: 2104-2108. 25 March 1935. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2478/A/2104.PDF.
- ↑ Wyatt, David K. (December 1967). "A Thai Version of Newbold's "Hikayat Patani"". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 40 (2 (212)): 16–37.
- ↑ Wyatt, David K. (December 1967). "A Thai Version of Newbold's "Hikayat Patani"". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 40 (2 (212)): 16–37.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Pattani
- அதிகாரப்பூர்வ இணையதளம்