தாய்லாந்து மாநிலங்கள்
தாய்லாந்து மாநிலங்கள் (ஆங்கிலம்: Provinces of Thailand; தாய்: จังหวัดของประเทศไทย); என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள அரசாங்க நிர்வாக நிலப்பகுதிகள் ஆகும். அந்த அமைப்பில் தாய்லாந்தில் உள்ள 76 மாநிலங்களும் (தாய்: จังหวัด; ஆங்கிலம்: Changwat); புரோவின்சுகள் (Provinces) எனப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றன.[3]
தாய்லாந்து மாநிலங்கள் Provinces of Thailand จังหวัดของประเทศไทย | |
---|---|
தாய்லாந்தில் சிறப்பு நிர்வாகப் பகுதியாக விளங்கும் பாங்காக் மாநகர்க் காட்சிகள் | |
வகை | ஒருமுக அரசு |
அமைவிடம் | தாய்லாந்து இராச்சியம் |
எண்ணிக்கை | 76 மாநிலங்கள் 1 சிறப்பு நிர்வாகப் பிரிவு |
மக்கள்தொகை | 193,305 – 2,648,927 (2019)[1] |
பரப்புகள் | 414 km2 (160 sq mi) – 22,135 km2 (8,546 sq mi)[2] |
அரசு | தாய்லாந்து அரசாங்கம் |
உட்பிரிவுகள் | தாய்லாந்து மாவட்டங்கள் |
மற்றும் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி (ஆங்கிலம்: Bangkok Special Administrative Area; தாய்: เขตปกครองส่วนท้องถิ่นรงถิ่นรูปแบษ), தாய்லாந்து தலைநகர் பாங்காக் (Bangkok) மாநகரைக் குறிக்கும் நிர்வாகப் பகுதியாகும்.[4][5] அனைத்து மாநிலங்களும் தாய்லாந்து நாட்டின் முதன்மையான உள்ளாட்சி அரசுகள்.
பொது
தொகுதாய்லாந்து நாட்டின் மாநிலங்கள் (Provinces); முதல் நிலையில் ஆம்போ (Amphoe) எனும் மாவட்டங்களாக (Districts) பிரிக்கப் படுகின்றன. இரண்டாம் நிலையில் தம்போன் (Tambon) எனும் துணை மாவட்டங்களாக (Sub Districts) பிரிக்கப் படுகின்றன. பின்னர் இந்தத் துணை மாவட்டங்கள் உள்ளாட்சி அரசுகளாக இயங்குகின்றன.
ஒவ்வொரு மாநிலமும் ஓர் ஆளுநரால் (ஆங்கிலம்: Phu Wa Ratchakan Changwat; தாய்: ผู้ว่าราชการจังหวัด) நிர்வாகம் செய்யப்படுகிறது. மாநில ஆளுநர்கள் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப் படுகிறார்கள்.
தாய்லாந்து இராச்சியம்
தொகுதாய்லாந்து (ஆங்கிலம்: Thailand அல்லது Kingdom of Thailand; தாய்: ประเทศไทย), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (ஆங்கிலம்: Siam, தாய்: สยาม) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
இந்த நாட்டின் வடக்கில் மியான்மர், லாவோஸ்; கிழக்கில் லாவோஸ், கம்போடியா; தெற்கில் தாய்லாந்து வளைகுடா, மலேசியா; மேற்கில் அந்தமான் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடா; வியட்நாம், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.
சயாம்
தொகு1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வப் பெயர் சயாம் ஆகும்.[6] பின்னர் இது தாய்லாந்து என மாற்றம் கண்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டது. மீண்டும் 1949 மே 12-ஆம் தேதி தாய்லாந்து என மாற்றம் கண்டது.
தாய்லாந்து மன்னர் அந்த நாட்டின் அரசுத் தலைவர்; இராணுவப் படைகளின் தலைவர்; பௌத்த மதத்தை உயர்நிலைப் படுத்துபவர்; அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.
தாய்லாந்து மாநிலங்கள்
தொகுசின்னம் | பெயர் | பெயர் தாய்லாந்து மொழியில் |
மக்கள் தொகை (2019)[1] | பரப்பளவு (km2)[2] | மக்கள் அடர்த்தி | ஆங்கில மொழியில் |
---|---|---|---|---|---|---|
பாங்காக் | กรุงเทพมหานคร | 5,666,264 | 1,564 | 3,623 | en:Bangkok | |
அமாட் சாரோவன் | อำนาจเจริญ | 378,438 | 3,290 | 115 | en:Amnat Charoen | |
ஆங் தோங் | อ่างทอง | 279,654 | 950 | 294 | en:Ang Thong | |
புவேங் கான் | บึงกาฬ | 424,091 | 4,003 | 106 | en:Bueng Kan | |
புரிராம் | บุรีรัมย์ | 1,595,747 | 10,080 | 159 | en:Buriram | |
சாச்சோ எங்சாவ் | ฉะเชิงเทรา | 720,113 | 5,169 | 139 | en:Chachoengsao | |
சாய் நாட் | ชัยนาท | 326,611 | 2,506 | 131 | en:Chai Nat | |
சாயாபும் | ชัยภูมิ | 1,137,357 | 12,698 | 91 | en:Chaiyaphum | |
சந்தாபுரி | จันทบุรี | 537,698 | 6,415 | 84 | en:Chanthaburi | |
சியாங் மாய் | เชียงใหม่ | 1,779,254 | 22,135 | 79 | en:Chiang Mai | |
சியாங் ராய் | เชียงราย | 1,298,304 | 11,503 | 113 | en:Chiang Rai | |
சோன்புரி | ชลบุรี | 1,558,301 | 4,508 | 346 | en:Chonburi | |
சும்போன் | ชุมพร | 511,304 | 5,998 | 85 | en:Chumphon | |
கலாசின் | กาฬสินธุ์ | 983,418 | 6,936 | 142 | en:Kalasin | |
கேம்ப்கெங் பெட் | กำแพงเพชร | 725,867 | 8,512 | 86 | en:Kamphaeng Phet | |
காஞ்சனபுரி | กาญจนบุรี | 895,525 | 19,385 | 46 | en:Kanchanaburi | |
கோன் கேன் | ขอนแก่น | 1,802,872 | 10,659 | 169 | en:Khon Kaen | |
கிராபி | กระบี่ | 476,739 | 5,323 | 90 | en:Krabi | |
லாம்பாங் | ลำปาง | 738,316 | 12,488 | 59 | en:Lampang | |
லாம்பூன் | ลำพูน | 405,075 | 4,478 | 92 | en:Lamphun | |
லோயி | เลย | 642,950 | 10,500 | 61 | en:Loei | |
லோப்புரி | ลพบุรี | 755,556 | 6,493 | 116 | en:Lopburi | |
மே ஓங் சான் | แม่ฮ่องสอน | 284,138 | 12,765 | 23 | en:Mae Hong Son | |
மகா சரகம் | มหาสารคาม | 962,665 | 5,607 | 172 | en:Maha Sarakham | |
முக்தாகன் | มุกดาหาร | 353,174 | 4,126 | 87 | en:Mukdahan | |
நகோன் நாயக் | นครนายก | 260,751 | 2,141 | 122 | en:Nakhon Nayok | |
நகோன் பாத்தோம் | นครปฐม | 920,030 | 2,142 | 430 | en:Nakhon Pathom | |
நகோன் பானோம் | นครพนม | 719,136 | 5,637 | 127 | en:Nakhon Phanom | |
நகோன் ரட்சசிமா | นครราชสีมา | 2,648,927 | 20,736 | 128 | en:Nakhon Ratchasima | |
நகோன் சவான் | นครสวรรค์ | 1,059,887 | 9,526 | 111 | en:Nakhon Sawan | |
நகோன் சி தம்மரத் | นครศรีธรรมราช | 1,561,927 | 9,885 | 158 | en:Nakhon Si Thammarat | |
நான் | น่าน | 478,227 | 12,130 | 40 | Nan | |
நாராதிவாட் | นราธิวาส | 808,020 | 4,491 | 180 | en:Narathiwat | |
நோங் புவா லம்பு | หนองบัวลำภู | 512,780 | 4,099 | 125 | en:Nong Bua Lam Phu | |
நோங் கை | หนองคาย | 522,311 | 3,275 | 160 | en:Nong Khai | |
நொன்தபுரி | นนทบุรี | 1,265,387 | 637 | 1,986 | en:Nonthaburi | |
பாத்தும் தனி | ปทุมธานี | 1,163,604 | 1,520 | 766 | en:Pathum Thani | |
பட்டாணி | ปัตตานี | 725,104 | 1,977 | 367 | Pattani | |
பாங் நிகா | พังงา | 268,788 | 5,495 | 49 | en:Phang Nga | |
பத்தலுங் | พัทลุง | 524,865 | 3,861 | 135 | en:Phatthalung | |
பாயோ | พะเยา | 472,356 | 6,189 | 76 | en:Phayao | |
பெட்சாபன் | เพชรบูรณ์ | 992,451 | 12,340 | 80 | en:Phetchabun | |
பெட்சாபுரி | เพชรบุรี | 485,191 | 6,172 | 77 | en:Phetchaburi | |
பிச்சிட் | พิจิตร | 536,311 | 4,319 | 124 | en:Phichit | |
பிட்சனுலோக் | พิษณุโลก | 865,247 | 10,589 | 82 | en:Phitsanulok | |
பிரா நாகோன் சி அயுத்தாயா | พระนครศรีอยุธยา | 820,188 | 2,548 | 322 | Phra Nakhon Si Ayutthaya | |
பிரே | แพร่ | 441,726 | 6,483 | 68 | en:Phrae | |
புக்கெட் | ภูเก็ต | 416,582 | 547 | 762 | Phuket | |
பிரச்சின்புரி | ปราจีนบุรี | 494,680 | 5,026 | 99 | en:Prachinburi | |
பிரசுவாப் கிரி கான் | ประจวบคีรีขันธ์ | 554,116 | 6,414 | 88 | en:Prachuap Khiri Khan | |
ரானோங் | ระนอง | 193,370 | 3,230 | 60 | en:Ranong | |
இரட்சபுரி | ราชบุรี | 873,101 | 5,189 | 168 | en:Ratchaburi | |
ராயோங் | ระยอง | 734,753 | 3,666 | 201 | en:Rayong | |
ரோய் எட் | ร้อยเอ็ด | 1,305,211 | 7,873 | 166 | en:Roi Et | |
சா கயோ | สระแก้ว | 566,303 | 6,831 | 83 | en:Sa Kaeo | |
சக்கோன் நகோன் | สกลนคร | 1,153,390 | 9,580 | 121 | en:Sakon Nakhon | |
சமுத் பிரகான் | สมุทรปราการ | 1,344,875 | 947 | 1,420 | en:Samut Prakan | |
சமுத் சகோன் | สมุทรสาคร | 584,703 | 866 | 675 | en:Samut Sakhon | |
சமுத் சோங்க்ராம் | สมุทรสงคราม | 193,305 | 414 | 467 | en:Samut Songkhram | |
சாராபுரி | สระบุรี | 645,911 | 3,499 | 185 | en:Saraburi | |
சத்துன் | สตูล | 323,586 | 3,019 | 107 | en:Satun | |
சிங் புரி | สิงห์บุรี | 208,446 | 817 | 255 | en:Sing Buri | |
சிசாகெட் | ศรีสะเกษ | 1,472,859 | 8,936 | 165 | en:Sisaket | |
சொங்கலா | สงขลา | 1,435,968 | 7,741 | 186 | en:Songkhla | |
சுக்கோதாய் | สุโขทัย | 595,072 | 6,671 | 89 | (en:Sukhothai Thani) | |
சுபன் புரி | สุพรรณบุรี | 846,334 | 5,410 | 156 | en:Suphan Buri | |
சூராட் தானி | สุราษฎร์ธานี | 1,068,010 | 13,079 | 81 | en:Surat Thani | |
சூரின் | สุรินทร์ | 1,396,831 | 8,854 | 157 | Surin | |
தக் | ตาก}} | 665,620 | 17,303 | 39 | Tak | |
திராங் | ตรัง | 643,164 | 4,726 | 136 | Trang | |
திராட் | ตราด | 229,958 | 2,866 | 78 | en:Trat | |
உபோன் இரட்சதானி | อุบลราชธานี | 1,878,146 | 15,626 | 120 | en:Ubon Ratchathani | |
உடோன் தானி | อุดรธานี | 1,586,646 | 11,072 | 143 | en:Udon Thani | |
உத்தாய் தானி | อุทัยธานี | 328,618 | 6,647 | 50 | en:Uthai Thani | |
உத்தர ஆதித் | อุตรดิตถ์ | 453,103 | 7,906 | 58 | en:Uttaradit | |
யாலா | ยะลา | 536,330 | 4,476 | 119 | Yala | |
யசோதுன் | ยโสธร | 537,299 | 4,131 | 130 | en:Yasothon |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Statistics, population and house statistics for the year 2019". Registration Office Department of the Interior, Ministry of the Interior. stat.bora.dopa.go.th. 31 December 2019. Archived from the original on 14 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021, information, Forest statistics Year 2019, Thailand boundary from Department of Provincial Administration in 2013
{{cite web}}
: CS1 maint: postscript (link) - ↑ "Administrative information". Department of Provincial Affairs (DOPA). Provincial Affairs Bureau. 21 April 2017. Archived from the original on 10 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Announcement of the Central Registry. The number of people throughout the Kingdom. The evidence of registration as of 31 December 2015". Department of Provincial Administration (DOPA). பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
- ↑ "The World Factbook: Thailand". U.S. Central Intelligence Agency. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
- ↑ history.htm Thailand (Siam) History, CSMngt-Thai.