மலேசிய அவசரகால அறிவிப்பு 2021
மலேசிய அவசரகால அறிவிப்பு 2021 (மலாய்: Proklamasi Darurat Malaysia 2021; ஆங்கிலம்: Malaysian Proclamation of Emergency 2021) என்பது மலேசியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக, 2021 சனவரி 12-ஆம் தேதி, மலேசியாவின் பேரரசர் சுல்தான் அப்துல்லா (Yang di-Pertuan Agong of Malaysia Al-Sultan Abdullah) அவர்களால் அறிவிக்கப்பட்ட அவசரகால அறிவிப்பு ஆகும்.
மலேசியாவின் வரலாறு பகுதி | |
நாள் | 12 சனவரி 2021 - 1 ஆகத்து 2021 (அனைத்து மாநிலங்கள்); 12 சனவரி 2021 - 3 நவம்பர் 2021 (சரவாக் மட்டும்) |
---|---|
காரணம் | |
பங்கேற்றோர் | |
விளைவு |
|
இந்தப் பிரகடனம் 2021 சனவரி 12-ஆம் தேதி தொடங்கி 2021 ஆகத்து 1-ஆம் தேதி வரை மலேசியா முழுமைக்கும் அமலில் இருந்தது. ஆனால் சரவாக் மாநிலத்தில் மட்டும், மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், 2021 ஆகத்து 1-ஆம் தேதி அந்தப் பிரகடனம் நீக்கப்படவில்லை.
2021-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத் தேர்தல் 2021 (Sarawak State Election 2021) நடைபெறுவதை ஒத்திப் படுத்துவதற்காக அந்தப் பிரகடனம் சரவாக் மாநிலத்தில் மட்டும் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், அந்தப் பிரகடனம் பின்னர் 2021 நவம்பர் 3-ஆம் தேதி சரவாக் மாநிலத்தில் நீக்கப்பட்டது.[1][2]
பொது
தொகுகாலக்கோடு
தொகுபிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்)
2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மலேசியா முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு 2020 அக்டோபர் 25-ஆம் தேதி, மலேசியாவின் அரசியலமைப்பு பிரிவு 150 (1) இன் படி (Article 150(1) of the Federal Constitution of Malaysia); மலேசியாவில் ஓர் அவசரகால நிலையை (Proclamation of Emergency) அறிவிப்புச் செய்யுமாறு; மலேசியாவின் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை, பிரதமர் முகிதீன் யாசின் கேட்டுக் கொண்டார். எனினும் அந்தக் கோரிக்கையை மாமன்னர் நிராகரித்தார்.[3]
இடைத்தேர்தல்கள்
தொகு2020 டிசம்பர் 16-ஆம் தேதி, சபா புகாயா தொகுதியிலும் (Bugaya Constituency), 2021 சனவரி மாதம், பேராக் கிரிக் தொகுதியிலும் (Gerik Constituency) நடைபெற இருந்த இடைத்தேர்தல்களை நிறுத்த பிரதமர் முகிதீன் யாசின் அவசரகால நிலையை அறிவித்தார்.
மலேசியாவின் மாமன்னர் சுல்தான் அப்துல்லா அந்த அறிவிப்பிற்கு ஒப்புதல் அளித்தார். மேலும் இந்த இரண்டு தேர்தல் தொகுதிகளிலும் அவசரகால நிலையை அறிவித்தார்.
கோவிட் பெருந்தொற்றின் மூன்றாவது அலை
தொகுஇது கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்கு (Third Wave of COVID-19) ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முன்னோடியாக இருந்தது. அத்துடன் 2020 டிசம்பர் 16-ஆம் தேதி வரையில் கோவிட்-19 பெருந்தொற்றினால் மலேசியாவில் மொத்தம் 422 இறப்புகள்; 86,000 பேருக்கு பாதிப்புகள்.[4]
2021 சனவரி 12-ஆம் தேதி, மாமன்னர் சுல்தான் அப்துல்லா, கோவிட்-19 பரவுவதைத் தடுக்கவும், பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும்; 2021 ஆகத்து 1-ஆம் தேதி வரை மலேசியா முழுமைக்கும் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.
இந்த அவசரகாலப் பிரகடனத்தின் கீழ், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. அதே நேரத்தில், நாடாளுமன்ற விவாதங்கள் இல்லாமலும்; மற்றும் நாடாளுமன்ற வாக்கெடுப்புகள் இல்லாமலும்; சட்டங்களை அறிமுகப் படுத்துவதற்கான அதிகாரத்தை மலேசிய அரசாங்கம் பெற்றது (Malaysian government was empowered to introduce laws without parliamentary debate and voting).[5][6]
சர்ச்சைகள்
தொகுஇருப்பினும், மலேசியாவின் சில அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிர்கட்சிகள்; அவசரகாலப் பிரகடனத்தின் உண்மையான நோக்கத்தை மறுதலிப்புச் செய்தன. அதாவது கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டதா அல்லது அரசியல் உந்துதலால் செய்யப்பட்டதா எனும் கோரிக்கைகளை முன்வைத்தன.
அந்தக் கட்டத்தில் மலேசிய நாடாளுமன்றத்தின், டேவான் ராக்யாட் (Dewan Rakyat) மக்களவையில், பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) அரசாங்கம், குறுகிய பெரும்பான்மையைப் பெற்று இருந்தது.
இதற்கிடையில், கோவிட்-19 அச்சுறுத்தலை மேலும் பரப்பக்கூடிய எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடாது என்றும்; கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை அவசரகால நிலை தொடர வேண்டும் என்றும்; ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற இடைநிறுத்தம்
தொகுஅவசரகாலச் சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை (Parliamentary Session) மூட முடிவு செய்தது மலேசிய அரசியல்வாதிகளிடையே பெரும் சர்ச்சையாக மாறியது. நாட்டின் நலனுக்காக நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மீண்டும் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் செய்தன; அத்துடன் ஆளும் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்திற்கு அழுத்தங்களையும் கொடுத்தன.
இருப்பினும், அவசரகாலச் சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இடை நிறுத்தம் செய்ததற்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறுத்தி வைப்பதன் மூலம் அரசியல்வாதிகளையும்; மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களையும்; கோவிட்-19 அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கலாம் என்று ஆதரவாளர்கள் கூறினர்.[7]
அவசரகாலச் சட்டம் மற்றும் பேச்சு சுதந்திரம்
தொகு2021 மார்ச் மாதம் மலேசிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) (எண். 2) அவசரச் சட்டம் 2021 (Emergency (Essential Powers) (No. 2) Ordinance 2021) என்பது, கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகள் பற்றிய ஓர் அவசரகாலச் சட்டம் ஆகும்.[8]
(The Emergency (Essential Powers) (No. 2) Ordinance 2021 enacted in March 2021 is an ordinance that emphasizes the issue of untrue news regarding the COVID-19 pandemic. However, the ordinance raises concerns about any abuse of the ordinance that could affect the freedom of speech of Malaysians, especially in the country's ongoing political crisis.)
இருப்பினும், மலேசியர்களின் பேச்சு சுதந்திரத்தை பாதிக்கக்கூடிய, குறிப்பாக நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியில், அந்த அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) (எண். 2) அவசரச் சட்டம் 2021 எனும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அது கவலை அளிப்பதாக அமையும். அந்த வகையில், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை தொடர்பாக, அந்தச் சட்டத்திற்கு எதிராக, மலேசியாவில் சிறிய அளவிலான எதிர்ப்புப் பேரணிகளும் நடைபெற்றன.[9][10]
அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்தல்
தொகு2021 சூலை 24-ஆம் தேதி மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (Attorney General of Malaysia) இட்ரஸ் அருன் (Idrus Harun) என்பவருடன் மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஒரு மெய்நிகர் சந்திப்பை நடத்தினார்.
அதன் பின்னர், அனைத்து அவசரகாலச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும்; அதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என மலேசிய சட்டத்துறை அமைச்சர் தகியுதீன் அசனுக்கு (Minister of Law Takiyuddin Hassan) மாமன்னர் உத்தரவிட்டார்.[11]
சட்டத்துறை அமைச்சர் தகியுதீன் அசன்
தொகுஇந்த நிலையில், 2021 சூலை 26-ஆம் தேதி, மலேசிய சட்டத்துறை அமைச்சர் தகியுதீன் அசன், அவசரகாலச் சட்டங்களின் (Emergency Ordinances) அனைத்து விதிகளும் 2021 சூலை 21-ஆம் தேதியே, மத்திய அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான மாமன்னரின் ஒப்புதல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால் அந்தக் கேள்விகளுக்கு அரசாங்கத் தரப்பு பதிலளிக்க முன்வரவில்லை.[12]
2021 சூலை 27-ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் அருனிடம் (Dewan Rakyat Speaker, Azhar Azizan Harun) ஒரு கோரிக்கையை முன் வைத்தார்கள். அவசரகாலச் சட்டங்களை ரத்து செய்வது குறித்த அரசாங்கத்தின் திடீர் முடிவிற்கு நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் தகியுதீன் அசன் விளக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malaysia's king extends COVID-19 state of emergency in Sarawak to stop polls". CNA. 31 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
- ↑ "Sarawak Emergency extended to Feb 2022, no state elections until then". The Star. 31 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
- ↑ "Malaysia's king rejects PM's push for COVID emergency rule". Al Jazeera. 25 October 2020 இம் மூலத்தில் இருந்து 27 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027103102/https://www.aljazeera.com/news/2020/10/25/malaysias-king-rejects-pms-push-for-coronavirus-emergency.
- ↑ "Malaysia invokes emergency to stop by-elections as COVID-19 cases rise". Channel News Asia. 16 December 2020 இம் மூலத்தில் இருந்து 18 டிசம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201218040918/https://www.channelnewsasia.com/news/asia/covid-19-malaysia-emergency-stop-by-elections-sabah-perak-cases-13783994.
- ↑ Ratcliffe, Rebecca (12 January 2021). "Malaysia declares Covid state of emergency amid political turmoil". The Guardian இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112062604/https://www.theguardian.com/world/2021/jan/12/malaysia-declares-covid-state-of-emergency-amid-political-turmoil.
- ↑ "Malaysia's king declares state of emergency to curb spread of Covid-19". CNN. 12 January 2021 இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112090529/https://edition.cnn.com/2021/01/12/asia/malaysia-state-of-emergency-covid-intl-hnk/index.html.
- ↑ "'Desak parlimen dibuka sekarang sikap binatang politik'". Malaysiakini. 17 Jun 2021. பார்க்கப்பட்ட நாள் 17 Jun 2021.
- ↑ "MCMC promises fair probes, but doubts persists". The Star (in ஆங்கிலம்). 13 March 2021. பார்க்கப்பட்ட நாள் 13 March 2021.
- ↑ Muhammad Amnan Hibrahim (14 March 2021). "NGO bantah ordinan berita tidak benar". Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 14 March 2021.
- ↑ Nicholas Chung (13 May 2021). "Azhar clarifies remarks on parliamentary panels meeting during emergency". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
- ↑ Saiful Haizan Hasam (29 July 2021). "Agong amat dukacita, pembatalan Ordinan Darurat belum diperkenan". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
- ↑ Mohd Fadhli Mohd Sulaiman (29 July 2021). "Agong dukacita Ordinan Darurat batal tapi belum dapat perkenan". Utusan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
- ↑ Emmanuel Santa Maria Chin (27 July 2021). "Opposition MPs press Speaker to have minister present to explain revocation of Emergency Ordinances". Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.