எக்சு அலைப்பட்டை
எக்சு பட்டை (X band)என்பது மின்காந்த] நிரலின் நுண்ணலைப் பகுதியில் உள்ள அலைவெண்களின் பட்டைக்கான பெயராகும். சில வேளைகளில் , தகவல் தொடர்புப் பொறியியல் போன்ற , எக்சு அலைப்பட்டையின் அலைவெண் வரம்பு வரையின்றி தோராயமாக 7.0 - 11.2 கிகா எர்ட்சு என விதிக்கப்பட்டுள்ளது. வீவாணிப் பொறியியலில் , அலைவெண்ணின் வரம்பு மின், மின்னனியல் பொறியாளர்கள் நிறுவனத்தால் 8.0 - 12.0 கிகா எர்ட்சாக குறிப்பிடப்பட்டுள்ளது. எக்சு அலைப்பட்டை வீவாணி செயற்கைக்கோள் தொடர்புக்கும் கணினி வலைப்பிணையங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வீவாணி
தொகுதொடரலை, துடிப்பலை, ஒற்றை முனைவாக்கம், இரட்டை முனைவாக்கம், செயற்கை பொருள்வில்லை வீவாணி, தருவாய் அணிகள் உள்ளிட்ட வீவாணிப் பயன்பாடுகளில் எக்சு அலைப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. எக்சு அலைப்பட்டையின் துணை பட்டைகள் குடித்துறை, படைத்துறை, அரசுத்துறை நிறுவனங்களில் வானிலைக் கண்காணிப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, கடல்சார் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு, பாதுகாப்பு கண்காணிப்பு, ஊர்தி வேகத்தை கண்டறிதல் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படுகின்றன.[1]
பெரும்பாலும் எக்சு அலைப்பட்டை நவீன வீவாணிகளில் பயன்படுத்தப்படுகிறது. எக்சு அலைப்பட்டை குறுகிய அலைநீளங்கள், இலக்கு இனங்காணவும் பாகுபடுத்தலுக்கும் உயர் பிரிதிற படிமமாக வீவாணிகளில் உயர் தெளிவு மிகுந்த படங்களை எடுக்க வழிவகுக்கின்றன.
புவியகத் தகவல் தொடர்பும் வலைப்பிணையமும்
தொகுபிரேசில் , மெக்சிகோ , சவுதி அரேபியா , டென்மார்க் , உக்ரைன் , ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற பல நாடுகளில் எக்சு அலைப்பட்டையின் 10.15 முதல் 10.7 கிகா எர்ட்சு பிரிவு புவிப்பரப்பு காணொலிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2] அல்வரியன் சி. பி. என். எல் கேபிள்ஃப்ரீ மற்றும் ஓகியர் ஆகியவை தனியுரிம வான் இணைப்பைக் கொண்டிருந்தாலும் , இதற்கான அமைப்புகளை உருவாக்குகின்றன. வடவழித் தரவுப்பணி இடைமுக வடிவமைப்புகள் அமைந்த வாடிக்கையாளர்களுக்கு வட இணையத்தை வழங்குவதற்கான செந்தரத்தைப் பேண, சில எக்சு அலைப்பட்டை அலைவெண்களைப் பயன்படுத்துகிறது. வீடு / வணிக அமைப்புகள் , வடத்தின் மோடத்துடன் இணைக்கும் மின்செருகியுடன்னமைந்த ஒற்றை அச்சொன்றிய வடத்தைக் கொண்டுள்ளது. உள்ளூர் அலைவாக்கிகள் பொதுவாக 9750 மெகா எர்ட்சில் அமையும். இது கு அலைப்பட்டைச் செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்கு சமமானதே. காணொலி போன்ற இருவழி பயன்பாடுகள் பொதுவாக 350 மெகா எர்ட்சு TX இடைவெளியைப் பயன்படுத்துகின்றன.
விண்வெளி தகவல்தொடர்பு
தொகுதோராயமாக 120 பாகை தொலைவில் நெட்டாங்கில் அமைந்துள்ள இந்த மூன்று நிலையங்களும் புவியிலிருந்து சூரிய மண்டலத்தின் எந்தப் புள்ளிக்கும் புவிச் சுழற்சிவழி தற்சார்போடு தொடர்ந்த தகவல்தொடர்புகளை வழங்குகின்றன. டி. எஸ். என் நிலையங்கள் பழைய , குறைந்த எசு. அலைப்பட்டை ஆழ்வெளி வானொலித் தகவல்தொடர்பு ஒதுக்கீடுகளையும் , சில அதிக அலைவெண்களையும் கே அலைப்பட்டை போன்ற அதிக அல்லது குறைவான செய்முறை அடிப்படையில் பயன்படுத்தும் திறன் கொண்டவை.
எக்சு அலைப்பட்டை தகவல்தொடர்புகளைப் பயன்படுத்திய குறிப்பிடத்தக்க ஆழ்வெளி ஆய்வுத் திட்டங்களில் வைக்கிங் செவ்வாய் தரையிறங்கிகல் , வியாழன் காரிக்கோள், அதற்கு அப்பால் கலிலியோ வியாழன் வட்டணை, புளூட்டோவிற்கான நியூ ஒரைசன்சு பணி, கைப்பர் பட்டை , கியூரியோசிட்டி தரையுலவி, காசினி - ஐகன்சு காரிக்கோள் வட்டணை ஆகியவை அடங்கும்.[3]
புதிய ஐரோப்பிய இரட்டைச் செவ்வாய் திட்டம் எக்ஸோமார்ஸ் செவ்வாய்க் கோளின் உள் கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கும் , மேற்பரப்பு தளத்திற்கும் புவிக்கும் இடையிலான இருவழி டாப்பிளர் அலைவெண் மாற்றங்களைக் கண்காணித்து, அதன்வழி செவ்வாய்க் கோளின் சுழற்சி, திசைவைப்பு பற்றிய துல்லியமான அளவீடுகளைச் செய்வதற்கும் எக்சு அலைப்பட்டைத் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தும். கோளின் முனைப் பகுதிகளிலிருந்து பனி வளிமண்டலத்திற்கு இடம்பெயர்வது போன்ற பொருண்மைகளின் மறுபகிர்வு காரணமாக கோண உந்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளையும் இது கண்டறியும்.
எக்சு அலைப்பட்டைத் தகவல்தொடர்புகளின் ஒரு முதன்மையான பயன்பாடு இரண்டு வைக்கிங் நிரல் தரையிறங்கிகளுடன் வந்தது. பூமியில் இருந்து பார்க்கும்போது செவ்வாய்க் கோல் சூரியனுக்கு அருகில் அல்லது பின்னால் செல்லும் போது , ஒரு வைக்கிங் இறங்குகலம் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாகஊர்தி அலைகளை அனுப்பும். ஒன்று எசு பட்டையிலும் மற்றொன்று எக்சு பட்டையிலும் புவியின் திசையில் அவை தரை நிலையங்களால் எடுக்கப்பட்டன. இரண்டு வெவ்வேறு அலைவெண்களில் ஒரே நேரத்தில் அளவீடுகளைச் செய்வதன் வழி , கிடைத்த தரவுகள் கோட்பாட்டு இயற்பியலாளர்களுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் கணித கணிப்புகளைச் சரிபார்க்க உதவியது. இந்த முடிவுகள் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் சிறந்த உறுதிப்படுத்தல்களில் சிலவாகும்.
நேட்டோ எக்சு அலைப்பட்டை அலைவெண் தேவைகள்
தொகுபொதுமக்கள் பயன்பாட்டிற்காக வானொலி அலைவெண்களை ஒதுக்கும் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் படைத்துறை தகவல்தொடர்புக்கு வானொலி அலைவெண் பட்டைகளை ஒதுக்க அதிகாரம் இல்லை. எக்சு அலைப்பட்டை படைத்துறை வானொலி தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்கள் தொடர்பிலும் அதன் தொலைத்தொடர்புச் செயற்கைக்கோள் தொடர்பிலும் இதுதான் நிலவரமாகும்.. என்றாலும் நிலையான செயற்கைக்கோள் சேவை, அலைப்பேசி செயற்கைக்கோள் சேவை ஆகியவற்றுக்கான படைத்துறை அலைவெண் ஒதுக்கீட்டுத் தேவைகளுக்கு, நேட்டோ நாடுகள், நேட்டோ கூட்டுக் குடித்துறை / படைத்துறை அலைவெண் ஒப்பந்தம் சார்பாக, பேச்சுவார்த்தை நடத்தின.[4]
பயில்நிலை வானொலி
தொகுபன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் வானொலி விதிமுறைகள் பயில்நிலை வானொலி செயல்பாடுகளுக்கு 10.000 முதல் 10.500 வரை GHz அலைவெண் வரம்பிலும்,[5] பயில்நிலைச் செயற்கைக்கோள் செயல்பாடுகளுக்கு 10.450 முதல் 10.500 GHz அலைவெண் வரம்பிலும் இசைவளிக்கக்கப்படுகின்றன. இது 3-சென்டிமீட்டர் பட்டை அமெச்சூர் எக்சு அலைப்பட்டை( AMSAT) என அழைக்கப்படுகிறது.
பிற பயன்கள்
தொகுமோஷன் டிடெக்டர்கள் பெரும்பாலும் 10.525 ஐப் பயன்படுத்தவும் GHz.[6] 10.4 GHz க்கு முன்மொழியப்பட்டது போக்குவரத்து விளக்கு கிராசிங் டிடெக்டர்கள். அயர்லாந்தில் Comreg 10.450 ஒதுக்கீடு செய்துள்ளது எஸ்ஆர்டியாக போக்குவரத்து சென்சார்களுக்கான ஜிகாஹெர்ட்ஸ்.[7]
பல எலக்ட்ரான் பரம காந்த அதிர்வு (ஈபிஆர்) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் 9.8 க்கு அருகில் இயங்குகின்றன GHz.
துகள் முடுக்கிகள் எக்ஸ்-பேண்ட் மூலம் இயக்கப்படலாம் RF ஆதாரங்கள். அதிர்வெண்கள் பின்னர் 11.9942 இல் தரப்படுத்தப்படுகின்றன ஜிகாஹெர்ட்ஸ் (ஐரோப்பா) அல்லது 11.424 GHz (யு. எஸ்),[8][9] இது இரண்டாவது ஹார்மோனிக் ஆகும் சி-பேண்ட் மற்றும் நான்காவது ஹார்மோனிக் எஸ்-பேண்ட். ஐரோப்பிய எக்ஸ்-பேண்ட் அதிர்வெண் பயன்படுத்தப்படுகிறது காம்பாக்ட் லீனியர் மோதல் (CLIC).
மேலும் காண்க
தொகு- காசிகிரெய்ன் தெறிப்பி
- திசை உணர்சட்டம்
- எக்சுட்டார்(XTAR)
- கடல்சார் எக்சு அலைப்பட்டை வீவாணி
- நியூ ஒரைசன்சு தொலைத்தொடர்பு
- வாயேஜர் விண்கல வடிவமைப்பு
- புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு அலைவெண்கள்
- டெர்ராசார் - எக்சு ஒரு செருமானியப் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Radar Bands". www.everythingweather.com.
- ↑ "Broadband Wireless". பார்க்கப்பட்ட நாள் 5 May 2020.
- ↑ "Radio Science Subsystem (RSS)". NASA Science Solar System Exploration. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
- ↑ "NATO Joint Civil/Military Frequency Agreement (NJFA)" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
- ↑ "VHF Handbook of IARU Region 1 (2006), pg. 50" (PDF). Archived from the original (PDF) on February 5, 2009.
- ↑ "10GHz wideband transceiver". www.g3pho.free-online.co.uk.
- ↑ "Radio Spectrum". Archived from the original on March 18, 2012. பார்க்கப்பட்ட நாள் June 1, 2011.
- ↑ F. Peauger, A. Hamdi, S. Curt, S. Doebert, G. McMonagle, G. Rossat, K.M. Schirm, I. Syratchev, L. Timeo, S. Kuzikhov, A.A. Vikharev, A. Haase, D. Sprehn, A. Jensen, E.N. Jongewaard, C.D. Nantista and A. Vlieks: "A 12 GHz RF POWER SOURC E FOR THE CLIC STUDY", in proceedings of IPAC2010 http://accelconf.web.cern.ch/AccelConf/IPAC10/papers/THPEB053.pdf
- ↑ https://www.jlab.org/conferences/FLS2012/talks/Thur/isu_jlab39_fls2012_57_final.PDF [bare URL PDF]