எச்டி 30177 (HD 30177) என்பது தொராடோ விண்மீன் குழுவில் தோராயமாக 182 ஒளி ஆண்டுகள் (56 புடைநொடிகள் ) தொலைவில் அமைந்துள்ள 8 ஆம் தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும் . இது ஒரு மஞ்சள் குறுமீன் ஆகும். இதன் மையத்தில் ஐதரஜன்னணுக்கருவைத் தொகுக்கும் ஒரு வகை மஞ்சள் விண்மீன். இந்த விண்மீன் பிந்திய ஜி-வகையாக இருந்தாலும், இது சூரியனை விட குளிர்ச்சியானதும் குறைவான பொருண்மை கொண்டதும் ஆகும். ஆனால் இதன் ஆரம் பெரியது. இது சூரியனை விட 1.8 மடங்கு பழமையானது. இந்த விண்மீன் அமைப்பில் இரண்டு புறக்கோள்கள் உள்ளன.

HD 30177
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Dorado
வல எழுச்சிக் கோணம் 04h 41m 54.37378s[1]
நடுவரை விலக்கம் -58° 01′ 14.7277″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.41
இயல்புகள்
விண்மீன் வகைG8V
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)62.63±0.12[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 66.303±0.023 மிஆசெ/ஆண்டு
Dec.: −11.795±0.024 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)18.0190 ± 0.0195[1] மிஆசெ
தூரம்181.0 ± 0.2 ஒஆ
(55.50 ± 0.06 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.72
விவரங்கள் [2]
திணிவு1.053±0.023 M
ஆரம்1.54±0.03 R[3]
1.019±0.034[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.417±0.034
ஒளிர்வு1.04 ± 0.01[3] L
வெப்பநிலை5,607±47 கெ
சுழற்சி~45 d
அகவை4.8±1.5 Gyr[3]
2.525±1.954[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−58°984, HIP 21850, SAO 233633, 2MASS J04415438-5801146[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

2002, ஜூன் 13, அன்று வியாழனை விட 8 மடங்கு பொருண்மை கொண்ட HD 30177 b இன் கண்டுபிடிப்பை ஆங்கிலோ-ஆத்திரேலியக் கோள் தேட்டக் குழு அறிவித்தது. கண்டுபிடிப்பை விவரிக்கும் அறிவியல் கட்டுரை 2003 ஆம் ஆண்டில் வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்டது.[5][6] பின்னர் சுமார் 32 வருட வட்டணையில் இரண்டாவது பாரிய வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இரண்டு கோள்களின் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது.[7]

எச்டி 30177 தொகுதி[7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(year)
வட்டவிலகல்
b 8.403+1.241
−0.489
 MJ
3.604+0.135
−0.147
6.884+0.014
−0.012
0.207+0.012
−0.017
c 6.150+1.308
−0.341
 MJ
10.258+0.535
−0.480
33.088+1.596
−1.207
0.039+0.005
−0.013

மேலும் காண்க

தொகு
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 Barbato, D. et al. (August 2018). "Exploring the realm of scaled solar system analogues with HARPS". Astronomy & Astrophysics 615: 21. doi:10.1051/0004-6361/201832791. A175. Bibcode: 2018A&A...615A.175B. 
  3. 3.0 3.1 3.2 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html. 
  4. "HD 30177". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  5. Tinney, Chris (2007-09-07). "AAPS Discovered Planets". Anglo-Australian Planet Search. University of New South Wales. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
  6. Tinney, C. G. et al. (2003). "Four New Planets Orbiting Metal-enriched Stars". The Astrophysical Journal 587 (1): 423–428. doi:10.1086/368068. Bibcode: 2003ApJ...587..423T. 
  7. 7.0 7.1 Feng, FaboExpression error: Unrecognized word "etal". (August 2022). "3D Selection of 167 Substellar Companions to Nearby Stars". The Astrophysical Journal Supplement Series 262 (21): 21. doi:10.3847/1538-4365/ac7e57. Bibcode: 2022ApJS..262...21F. 


  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_30177&oldid=3827511" இலிருந்து மீள்விக்கப்பட்டது