எத்தியோப்பிய வரி சுண்டெலி

Chordata

எத்தியோப்பிய வரி சுண்டெலி அல்லது முதுகு வரி சுண்டெலி (மசு இம்பெர்பிசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது எத்தியோப்பியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இது முன்னர் முரிகுலசு என்ற ஒற்றை சிற்றினப் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் தொகுதி வரலாறு சான்றுகள் முரிகுலசு மசு பேரினத்தின் துணைப்பேரினமாக இருப்பதை ஆதரிக்கிறது.[2][3] எத்தியோப்பிய வரி எலியின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி மற்றும் நகர்ப்புறங்களாகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

எத்தியோப்பிய வரி சுண்டெலி
புதைப்படிவ காலம்:Recent
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. imberbis
இருசொற் பெயரீடு
Mus imberbis
உருபெல், 1842
வேறு பெயர்கள்

முரிகுலசு இம்பர்பிசு (தாமசு, 1903)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lavrenchenko, L.; Schlitter, D. (2008). "Muriculus imberbis". IUCN Red List of Threatened Species 2008: e.T13935A4366819. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13935A4366819.en. https://www.iucnredlist.org/species/13935/4366819. 
  2. Meheretu, Yonas; Šumbera, Radim; Bryja, Josef (2015-02-01). "Enigmatic Ethiopian endemic rodent Muriculus imberbis (Rüppell 1842) represents a separate lineage within genus Mus" (in en). Mammalia 79 (1): 15–23. doi:10.1515/mammalia-2013-0119. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-1547. https://www.degruyter.com/document/doi/10.1515/mammalia-2013-0119/html. 
  3. "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.