என் தங்கை (1952 திரைப்படம்)

என் தங்கை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி, எம். கே. ஆர். நம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர் இதில் எம்.ஜி.ஆர் ஜோடி இல்லாமல் நடித்தார். அவர் கதாபாத்திரம் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளுவதாக காட்டப்படும்..[1]

என் தங்கை
இயக்கம்சி. எச். நாராயணமூர்த்தி
எம். கே. ஆர். நம்பியார்
தயாரிப்புஅசோகா பிக்சர்ஸ்
கதைடி. எஸ். நடராஜன்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பி. வி. நரசிம்ம பாரதி
பி. எஸ். கோவிந்தன்
எம். ஜி. சக்கரபாணி
மாதுரி தேவி
ஈ. வி. சரோஜா
எம். என். ராஜம்
வி. சுசீலா
வெளியீடுமே 31, 1952
ஓட்டம்.
நீளம்18137 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள் தொகு

எம்.ஜி.ஆர் நடித்த என் தங்கை படத்தில் அவருக்கு விழியிழந்த தங்கையாக ஈ. வி. சரோஜா நடித்தார். சிவாஜி கணேசன் அப்போது என் தங்கை நாடகத்தில் நடித்து வந்த பாத்திரத்தில் எம்.ஜி.ஆர் திரையில் நடித்தார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு